ஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
ஜகர உயிர்மெய்கள் வரும் சொற்களைத் [[தனித்தமிழ்]] நடையில் எழுதும்போது ஜகரத்தைச் [[ச்|சகரமாக]] எழுதுவது பெருவழக்கு. மொழிக்கு முதலில் ஜகர உயிர்மெய் வரும்போது [[தனித்தமிழ்]] நடையில் அதனைச் சகர உயிர்மெய்யாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஜனவரி-சனவரி, ஜூன்-சூன்). இலங்கை வழக்கின்படி, மொழிக்கு முதலில் ஜகரம் வந்தால் அதனை யகரமாகவும் எழுதுவதுண்டு (எடுத்துக்காட்டுகள்: ஜப்பான்-யப்பான், ஜன்னல்-யன்னல்). மொழிக்கு முதலில் ''ஜ்'' வந்தால் அதனை விட்டு விட்டு எழுதுவதுண்டு (எடுத்துக்காட்டு: ஜ்ஞானம்-ஞானம்). சில சமயங்களில் வேறு மாதிரியும் எழுதுவதுண்டு (ஜ்யோதி-சோதி).
 
சொல்லொன்றின் இடையில் அல்லது இறுதியில் ஜகர உயிர்மெய் வந்தால் அதனைச் [[ச்|சகரமாக]] அல்லது [[ய்|யகரமாக]] எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: பங்கஜம்-பங்கசம், பங்கயம்).<ref>[http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=208&pno=14 கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்]</ref>
 
சொல்லின் இடையில் ''ஜ்'' வந்தால் அதனை ''ச்சி'' அல்லது ''ச்சு'' என்று எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: வஜ்ரபானி-வச்சிரபானி, வாஜ்பாய்-வாச்சுபாய்). சொல்லொன்றின் இறுதியில் ''ஜ்'' வருமாயிருந்தால் அதனை ''ச்சு'' என்று எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: ஹஜ்-அச்சு).
 
சில சொற்களில் ஜகர உயிர்மெய் வருமிடத்துக் கூடுதல் அழுத்தம் தருவதற்காக அதனை ''ச்ச'' என்றும் எழுதுவதுண்டு (எடுத்துக்காட்டு: ராஜஸ்தான்-[[இராச்சசுத்தான்]]).
 
சில வேளைகளில் வேறு விதமாகவும் திரிவதுண்டு (எடுத்துக்காட்டு: பூஜா-பூசை)<ref>[http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=208&pno=14 கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது