கிணறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: eu:Putzu
வரிசை 10:
அண்மைக் காலம் வரை செயற்கையாக வெட்டப்படும் கிணறுகள் அனைத்துமே அகழ் கிணறுகளாகவே இருந்தன. இத்தகைய கிணறுகள் [[மனிதர்]]கள் [[மண்வெட்டி]], [[கடப்பாரை]] போன்ற கருவிகளுடன் உள்ளே இறங்கி அகழ்வதற்கு ஏற்ற வகையில் போதிய விட்டம் கொண்டவையாக இருந்தன. இக் கிணறுகளில், மண் இடிந்து உள்ளே விழுந்துவிடாமல் இருப்பதற்காக உள் மேற்பரப்பை அண்டி வெட்டப்பட்ட கற்களை அடுக்கிக் கட்டுவது உண்டு. தற்காலத்தில், [[வலிதாக்கிய காங்கிறீற்று|வலிதாக்கிய காங்கிறீற்றினால்]] செய்யப்படும் [[வளையம்|வளையங்கள்]] இதற்குப் பயன்படுகின்றன. கிணற்றின் விட்டத்தின் அளவுக்குச் சமமாக செய்யப்படும் இந்த வளையங்கள் கிணறு வெட்டப்படும்போதே பகுதி பகுதியாகக் கீழே இறக்கப்படும். இது கிணறு வெட்டுபவர்களுக்குப் பாதுகாப்பாகவும் அமைகின்றது.
 
அகழ் கிணறுகள் மலிவானவையும், குறைவான [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] உள்ளீடும் கொண்டவை. இதனால் இன்றும் நாட்டுப் புறங்களில் பெருமளவு சமூகப் பங்களிப்புடன் கிணறு வெட்டுவதற்கு ஏற்ற முறையாக இது உள்ளது. இவை தவிர அகழ் கிணறுகளில் வேறு பல சாதகமான அம்சங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக, இவை மின்சார நீரேற்றிகளையோ, மனிதவலுவையோ பயன்படுத்துவதற்கு ஏற்றவை. இதனால் மின் வழங்கல் தடைப்படும்போது அல்லது நீரேற்றிகள் பழுதடையும் போது கூட மனித வலுவைக் கொண்டு நீர் எடுக்க முடியும். அத்துடன் கிணற்றில் நீர் மட்டம் குறைந்து விட்டால், அதனை ஆழப்படுத்துவது இலகு. [[படிமம்:Water well types wiki.svg|thumb|right|300px|ஆழ்துளைக் கிணறுகளின் வகைகள்]]
 
 
எனினும், பாறைகளைக் கொண்ட நிலங்களில் அகழ் கிணறுகள் வெட்டுவது கடினமானது. அத்தோடு, சொரியலான மண்ணுள்ள இடங்களில் அகழ் கிணறுகள் வெட்டுவது ஆபத்தானது. கரைகள் இடிந்து விழுவதற்கான சாத்தியங்கள் அதிகம். கிணறுகளை இம்முறையில் வெட்டும்போது மனிதர் உள்ளே வேலை செய்வதற்கு வசதியாகத் தொடர்ச்சியாக நீரை இறைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆழம் கூடிய கிணறுகளில் இது மிகவும் கடினமானது. இதனால், இத்தகைய கிணறுகள் தற்காலத்தில், நிலத்தடி நீர் குறைவான ஆழத்தில் இருக்கக்கூடிய இடங்களிலேயே பயன்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கிணறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது