கிரேக்க நாடக வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
 
வரிசை 8:
'டயோனிசஸ்' தெய்வத் திருவிழாக் காலங்களில் அத்தெய்வத்தின் கோயில்களின் மேற்பகுதியில் கோட்டை போன்ற அமைப்பின் சரிவான பகுதிகள் நாடக அரங்குகளாகப் பயன்படுத்தப்பட்டது. [[கி.மு. ஆறாம் நூற்றாண்டு|கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்]] காலப்பகுதியில் பார்வையாளர்கள் [[மலைச்சரிவு|மலைச்சரிவுகளில்]] இருக்க அச்சரிவுகளின் அடிவாரத்தில் நாடக நடிகர்களின் [[அரங்கம்]] இருந்தது. காட்சிக்கான பின்னணி ([[திரைச்சீலை]]) அக்காலகட்டத்தில் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
===காட்சி வீடு===
கி.மு. ஜந்து - நான்காம் நூற்றாண்டு காலப்பகுதியில் '''நடனமாடும் இடம்''' எனக்என அழைக்கப்பெற்ற 'காட்சி வீடு' போன்ற அமைப்பிலான அரங்கம் பார்வையாளர்கள் அமருவதற்கு வசதியாக மலைகளில் கற்களால் கட்டப்பெற்றன. வட்ட வடிவமான தளத்தினைச் சுற்றி வளைவாகக் கட்டப்பெற்ற இவ்வரங்கத்தின் [[குறுக்களவு]] 65 அடிகளாகவும் 14,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் கட்டவும் பெற்றது.இக்காட்சி வீடானது ஆரம்ப காலங்களில் நடிகர்கள் உடைகளை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டு பின்னர் நாடகக் காட்சிக்குப் பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
'[[மன்னர் இடிஃபஸ்]]' என்ற நாடகம் அரங்கேற்றப்பட்ட வேளை இருபுறம் அமைந்த செவ்வக வடிவத்தினை உடைய கட்டிடம் பின்னணியாக அமைக்கப்பட்டது. இவ்வடிவமைப்பே பின்னாட்களில் அனைத்து நாடகங்களிலும் பயன்படுத்தப்பட்டதென்பது பல அறிஞர்கள் கருத்தாகும். ஆனாலும் சிலரது கருத்தின் படி இவ்வரங்கேற்றத் தளமானது ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாடகத்திற்கேற்றாற்போல மாற்றி அமைக்கப்பட்டதெனவும் கருத்து நிலவுகின்றது.
 
===திறந்த வெளி நாடகங்கள்===
பெரும்பாலான கிரேக்க நாடகங்கள் திறந்த வெளியிலேயே நடந்தவைகளாகக் கருத்து நிலவுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக நாடகங்களில் வரும் 'மரணக் காட்சிகள்' மேடைக்குப் பின்னால் நிகழ்த்தப்பட்டு, இறந்தவர்களினைப் போன்று அமைக்கப்பெற்ற கதாபாத்திர உடல்கள் இறுதியில் மேடைக்குக் கொண்டுவரப்பட்டு காண்பிக்கப்பட்டிருக்கின்றது என அமெரிக்க நாட்டு நாடக நூலாசிரியரான '[[ஆஸ்கார் ஜி.பிராக்கெட்]]' தனது "[[தி எசென்ஷியல் தியேட்டர்]]" என்னும் நூலில் இயல் -2 இல் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_நாடக_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது