கிரேக்க நாடக வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
இக்காலத்தில் வாழ்ந்துவந்த நாடக நடிகர்களில் '[[தெஸ்பிஸ்]]' என்பவரின் பெயர் மட்டும் சான்றாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நடிகரே முதன் முதலில் நடைபெற்ற சிறந்த துயரக் காட்சியின் போட்டியில் வெற்றிபெற்றவராவார். கிரேக்கர்கள் அறிந்த முதல் நடிகருமான இவரின் பெயராலேயே கிரேக்கக் கலைஞர்கள் இன்றளவிலும் '[[தெஸ்பியன்ஸ்]]' என அழைக்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது. தெஸ்பிஸ் நடத்திய முதல் நாடகத்தில் அவரே ஒரு நடிகராகவிருந்து மாற்றி மாற்றி முகமூடியணிந்து மாறுபட்ட [[கதாபாத்திரம்|கதாபாத்திரங்களில்]] நடித்தார். ஒப்பனை மாற்றத்திற்கு அவர் எடுத்த நேரத்தினை [[பாடும் குழுவினர்]] நாடகத்தின் இடைவெளியினை நிரப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
==பிரபலமான நாடக அமைப்பாளர்கள்==
கி.மு. 525 முதல் 456 காலப்பகுதியில் வாழ்ந்த '[[எஸ்கைலஸ்]]' என்பவரினால் '[[தெஸ்பிஸ்]]' அறிமுகப்படுத்திய ஒரு கதாபாத்திரமே நடிக்கும் அவலச்சுவை நாடக வடிவத்திற்குப் பதிலாக இரு கதாபாத்திரங்கள் நடிக்கும் நாடகக் கதைகளினை எழுதினார்.இவரின் பின் கி.மு. 496 முதல் 406 காலப்பகுதியில் வாழ்ந்த '[[சோபகிள்ஸ்]]' என்பவரால் மூன்று கதாபாத்திரங்கள் நடிக்கும் நாடகக் கதைகளினை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_நாடக_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது