"உம்பெர்த்தோ எக்கோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: lmo:Umberto Eco)
சி (*உரை திருத்தம்*)
}}
 
'''உம்பெர்த்தோ எக்கோ''' (''Umberto Eco'', பி. ஜனவரி 5, 1932) ஒருஓர் [[இத்தாலி]]ய [[குறியியல்|குறியியலாளர்]], [[ஐரோப்பா|ஐரோப்பிய]] [[இடைக்காலம்|இடைக்கால]] ஆர்வலர், [[மெய்யியல்|மெய்யியலாளர்]], இலக்கிய விமர்சகர் மற்றும் எழுத்தாளர்.
 
இத்தாலியின் [[தூரின் பல்கலைக்கழகம்|தூரின் பல்கலைக்கழகத்தில்]] ஐரோப்பிய இடைக்கால மெய்யியல் மற்றும் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற எக்கோ, அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவிரிவுரையாளராகப் (1956-64) பணியாற்றினார். இக்காலகட்டத்தில் இத்தாலியின் தேசிய அலைபரப்பு ஊடக நிறுவனத்தில் பண்பாட்டு ஆசிரியராகவும், இத்தாலிய இராணுவத்திலும் பணியாற்றியுள்ளார். பின்னர் [[மிலான்]] நகரின் போம்பியானி பதிப்பகத்தின் அபுனைவு (non-fiction) பிரிவின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் தான் [[குறியியல்]] பற்றி சிந்திக்கத் தொட்ங்கினார். தற்போது இத்துறையின் முன்னொடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். [[ஹார்வார்ட் பல்கலைக்கழகம்|ஹார்வார்ட்]] உட்பட பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ள எக்கோ தற்போது போலோன்யா பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராக உள்ளார்.
 
1956ல் அவரது முதல் புத்தகம் ''இல் பிராப்ளேமா எஸ்தெடிகோ இன் சான் தொமாஸ்கோ (Il problema estetico in San Tommaso)'' வெளியானது. குறியியல் பற்றியும் இடைக்காலத்தைப் பற்றியும் பல முக்கிய ஆய்வுக் கட்டுரைகளை எக்கோ எழுதியிருந்தாலும், 1980ல் வெளியான ''இல் நொம் டெல்ல ரோசா'' (''Il nome della rosa'', [[ஆங்கிலம்]]: The Name of the Rose) என்ற புதினமே அவருக்கு உலகப்புகழ் பெற்றுத்தந்தது. [[வரலாற்றுப் புனைவு]], இடைக்கால மெய்யியல், [[இறையியல்]], [[துப்பறிவுப் புனைவு]] என பல பாணிகளின் கூறுகளைக் கொண்டிருக்கும் இப்புதினம், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் வெற்றிக்குப் பின்னர் எக்கோ உலகெங்கும் அறியப்படுகிறார்.
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1095727" இருந்து மீள்விக்கப்பட்டது