கிரேக்க நாடக வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[கிரேக்கம்|கிரேக்க]] நாட்டில் [[நாடகம்]] கி.பி 534 ஆம் ஆண்டளவில் தோற்றம் பெற்றது.[[கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டு|கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டில்]] '[[டயோனிசஸ்]]' என அழைக்கப்பட்ட [[வசந்தம்]] மற்றும் [[வளம்]] போன்றவற்றின் அடையாளமான கிரேக்க தெய்வத்தின் வழிபாடு நடைபெற்றது. கி.மு. ஏழாம் - எட்டாம் நூற்றாண்டு காலகட்டங்களில் அத்தெய்வத்திற்குத் திருவிழா கொண்டாடப்படும் வேளை அத்தெய்வத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக குழு நடனங்களின் போட்டி நடைபெறும். அந்நடனங்கள் நடைபெறும் சமயம் தமிழ் நாட்டில் நடைபெறும் [[வெறியாட்டுப் பாட்டு]] போன்று, பக்திப் பரவசத்தினால் பக்திப் பாடல்கள் பாடப்படும். இவ்வாடல்-பாடல்களிலிருந்தே [[நாடகம்]] பிறந்தது என கிரேக்க மேதையான அரிஸ்டாட்டில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'டயோனிசஸ்' தெய்வத்திற்கு ஆண்டுக்கு மூன்று திருவிழாக்கள் நடைபெறும். [[டிசம்பர்]], [[ஜனவரி]], [[மார்ச்]], மாதங்களில் கொண்டாடப்படும் இத்திருவிழாக்களில் மார்ச் திங்கள் நடைபெறும் திருவிழா 'குழு நடனங்களின் போட்டி' என்பதற்குப் பதிலாக , துயரக் காட்சிகளின் போட்டி' என மாற்றியமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது.
 
==கிரேக்கத்தின் முதல் நாடக நடிகர்==
இக்காலத்தில் வாழ்ந்துவந்த நாடக நடிகர்களில் '[[தெஸ்பிஸ்]]' என்பவரின் பெயர் மட்டும் சான்றாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நடிகரே முதன் முதலில் நடைபெற்ற சிறந்த துயரக் காட்சியின் போட்டியில் வெற்றிபெற்றவராவார். கிரேக்கர்கள் அறிந்த முதல் நடிகருமான இவரின் பெயராலேயே கிரேக்கக் கலைஞர்கள் இன்றளவிலும் '[[தெஸ்பியன்ஸ்]]' என அழைக்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது. தெஸ்பிஸ் நடத்திய முதல் நாடகத்தில் அவரே ஒரு நடிகராகவிருந்து மாற்றி மாற்றி முகமூடியணிந்து மாறுபட்ட [[கதாபாத்திரம்|கதாபாத்திரங்களில்]] நடித்தார். ஒப்பனை மாற்றத்திற்கு அவர் எடுத்த நேரத்தினை [[பாடும் குழுவினர்]] நாடகத்தின் இடைவெளியினை நிரப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_நாடக_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது