முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[1987]] இல் [[கொழும்பு பல்கலைக்கழகம்|கொழும்புப் பல்கலைக்கழகத்தில்]] பத்திரிகைத்துறைப் பாடநெறியைக் கற்றுத் தேர்ந்த இவர் [[சோவியத் நாடு (சஞ்சிகை)|சோவியத் நாடு]], "சோஷலிசம் - தத்துவமும் நடைமுறையும்", "புதிய உலகம்" ஆகிய சஞ்சிகைகளிலும் [[சக்தி (இலங்கை இதழ்)|சக்தி]] பத்திரிகையினதும் ஆசிரிய பீடங்களில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். [[தினகரன்]] நாளிதழின் பிரதம ஆசிரியராக 1997-2002 காலப்பகுதியில் பணியாற்றினார்.
 
ராஜ ஸ்ரீகாந்தன் மொழிபெயர்ப்புத் துறையிலும் தனது ஆற்றல்களை சிறப்பாக வெளிப்படுத்தி வந்தார். [[சோவியத் யூனியன்|சோவியத்]] இலக்கியகர்த்தாக்கள், கலீல் ஜிப்ரான் போன்றவர்களின் அற்புதமான ஆக்கங்கள் இவருடைய மொழிபெயர்ப்பில் தமிழுக்குக் கிடைத்துள்ளன. தனது சமகாலத்தில் வாழ்ந்த ஆங்கில இலக்கிய மேதை [[அழகு சுப்பிரமணியம்|அழகு சுப்பிரமணியத்தின்]] இதுவரை வெளிவந்த அனைத்துச் சிறுகதைகளையும் (நீதிபதியின் மகன்), வெளிவராத 'மிஸ்ரர் மூன்' நாவலையும் தமிழுக்குத் தந்துள்ளார். "நீதிபதியின் மகன்", மற்றும் "காலச் சாகரம்சாளரம்" ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதுகளைப் பெற்றன.
 
==வெளிவந்த நூல்கள்==
*நீதிபதியின் மகன் (மொழிபெயர்ப்பு)
*மிஸ்ரர் மூன் (மொழிபெயர்ப்பு)
*காலச் சாகரம்சாளரம்
*சூரன் சுயசரிதை (பதிப்பாசிரியர்)
 
1,09,102

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1096491" இருந்து மீள்விக்கப்பட்டது