ராம்நாத் கோயங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
ஆனாலும், நாடெங்கும் நடக்கும் அராஜக பிரிட்டிஷ் கெடுபிடிகள் உலகறியச் செய்ய வேண்டும் என்று கோயங்கா துடித்தார். நாட்டில் எங்கு பார்த்தாலும் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தார். அவைகளை எல்லாம் திரட்டிக் கணிசமான ஒரு நூலாக உருவாக்கினார். தனது அச்சகத்தில் ரகசியமாக ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சான அந்த ஆங்கில நூலுக்கு "இந்தியாவில் படுகொலை" (India Ravaged) என்று தலைப்புத் தந்தார். நூலின் பிரதிகளை, ரகசியமாக பிரித்தானிய நாடாளுமன்ற அங்கத்தினர்கள் ஒருவர் விடாமல் எல்லோருக்கும், பிரிட்டிஷ் மந்திரிகளுக்கும் அனுப்பி வைத்தார். அது மட்டுமல்லாமல், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்வீடன், கனடா, ஆஸ்திரேலியா முதலிய வேறு பல நாடுகளின் முக்கியத் தலைவர்களுக்கும் பிரிட்டிஷார் அறியா வண்ணம் நூலை அனுப்பிச் சாதனை புரிந்தார். <ref>http://tamilnaduthyagigal.blogspot.in/2011/02/blog-post_09.html</ref>
 
சுதந்திரத்துக்காகப் போரிடுகிறோம் என்று சொல்லிக் கொண்டே இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களை சிறையில் தள்ளி கெடுபடி ஆட்சி நடத்தி வந்த ஆங்கிலேய அதிகாரிகளின் போலித்தனம் உலகறியத் தெரியலாயிற்று. பிரித்தானிய பாராளுமன்றத்தின் கேள்விகளுக்கு இந்தியாவின் பிரித்தானியப் பிரதிநிதிகள் பதில் சொல்ல முடியாமல் திகைத்தனர். உலக அரங்கில் பிரிட்டனின் புகழுக்குப் பெரிய அடி கிடைத்தது. ராம்நாத் கோயங்காவின் இந்தச்ச் சாதனையால் உண்மையை உலகம் உணர்ந்தது. பிற்காலத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் தரலாம் என பிரிட்டிஷ் தொழிற் கட்சி அரசு முடிவு செய்ய இந்த மாற்றம் உதவியது என்று சொல்லலாம்.<ref>"தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.</ref>
 
==இதழ் சுதந்திரம்==
"https://ta.wikipedia.org/wiki/ராம்நாத்_கோயங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது