ராம்நாத் கோயங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இறுதிக்காலம்: எழுத்துப்பிழை
உரை முன்னேற்றம்
வரிசை 14:
'''ராம்நாத் கோயங்கா'''(Ramnath Goenka; ஏப்ரல் 3, 1904- அக்டோபர் 5, 1991) [[இந்தியன் எக்சுபிரசு]] பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். நாட்டின் முதலாவது சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டவர். [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியின்]] ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலையின்]]போது (26 சூன், 1975 - 21 மார்ச்சு, 1977) நாடு முழுவதும் குடிமை உரிமைகள் நசுக்கப்பட்டன; எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு, விசாரணை இன்றிச் சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக, பத்திரிகைச் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
 
[[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலையைக்]] கடுமையாக எதிர்த்து, துணிச்சலுடன் குரல்கொடுத்தவர்களுள் ஒருவர் கோயங்கா ஆவார். இவ்வாறு குடிமக்களின். உரிமைகளைப் பாதுகாக்க நிகழ்ந்த "இரண்டாவது சுதந்திரப் போரில்" பத்திரிகைத் துறைக்கே ஒரு வழிகாட்டியாகவும், மூத்த தளபதியாகவும் கோயங்கா திகழ்ந்தார்.<ref>http://www.dinamani.com/edition/story.aspx?artid=406441&SectionID=133&MainSectionID=133&SectionName=Editorial%20Articles&SEO= வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா தினமணி</ref> [[இந்தியா டுடேயின் 60 மகத்தான இந்தியர்கள்]] வரிசையில் இடம்பெற்றவர்.<ref>{{cite web|url=http://www.india-today.com/itoday/millennium/100people/goenka.html|title=THOUGHT & ACTION: The Baron|last=Naqvi|first=Saeed|year=2000|publisher=Indian Today}}</ref>
==இளமை==
ராம்நாத் கோயங்கா பிகார் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள தர்பங்காவில் தில்தர் நகர் என்ற கிராமத்தில் 18-04-1904-ல் பிறந்தார். இவர் ஆறு மாத குழந்தையாய் இருக்கும் போதே இவரது தாயார் இறந்துவிட்டதால் இவருடைய அத்தை வசந்தாலால் கோயங்கா என்பவரால் தத்து எடுக்கப்பட்டு அவரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டர்வளர்க்கப்பட்டார். இவருடைய அத்தை பெரும் நிலக்கிழாராக இருந்தார். வாரணசியில் தனது தொடக்கக் கல்வியை முடித்ததும் எவர் கையையும் எதிர்பாராமல் வியாபாரத்தில் ஈடுபடத் தீர்மானித்தார். மூங்கிபாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
==வணிகம்==
தனது மாமா பாபு பிரஹ்லாத ராய் டால்மியா மற்றும் சாகர்மால் டால்மியா ஆகியோருடன் இணைந்து யார்ன் மற்றும் சணல் வியாபாரத்தின் அடிப்படைகளையும் நெளிவு சுளிவுகளைத்சுளிவுகளையும் தெரிந்துகொள்ள தனது 15-ஆவது வயதில் கோல்கத்தா நகருக்குச் சென்றார். அங்கு சிறிது காலம் பயிற்சி எடுத்த பிறகு மிகப்பெரிய நிறுவனமான சுகதேவ்தாஸ் ராம் பிரசாத் என்பவரின் வர்த்தகப் பிரதிநிதியாகச் சென்னைக்கு வந்தார். 1925 -ல் ஐதராபாத்தைச் சேர்ந்த முரளி பிரசாத் மோகன்பிரசாத் என்பவருடன் தொழில் கூட்டு சேர்ந்தார் அதன் பிறகு இவர்கள் இணைந்து சென்னையின் கிடங்குத் தெருவில் 1926 -ல் ஒரு வியாபார நிறுவனத்தைத் தொடங்கினர். இது 1932-33 வரை தொடர்ந்தது.<ref>http://www.papachuni.com/</ref>
==அரசியல் ஈடுபாடு==
சென்னைக்கு வந்தபின் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபாடு காட்டினார். சென்னை மாநகரின் மேல்தட்டு மக்களிலிருந்து எளியோர் வரை அனைவரிடமும் நன்றாகக் கலந்து பழகினார். அதன் விளைவாக, சமூகத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார். இவரின் செயல்களால் கவரப்பட்ட சென்னை நிர்வாகம் 1926-l ராம்நாத் கோயங்காவைச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமித்தது. அரசாங்கம் நியமித்த பதவியை ஏற்றுக்கொண்டாலும் அதை மக்களுடைய நன்மைக்காகவே முழுக்க முழுக்கப் பயன்படுத்தினார் கோயங்கா. அரசின் தவறுகளையும் குறைகளையும் தயங்காமல் சுட்டிக்காட்டினார். இதனால் அரசு மட்டுமல்லாமல் மேல்தட்டு மக்களும் அவரைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்தனர்.
 
மேலவை உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து தொடங்கிய 'இன்டிபென்டன்ட் பார்ட்டி' என்ற குழுவுக்கு ராம்நாத் கோயங்காவைச் செயலாளராக நியமித்தனர். தன்னுடைய வியாபாரத் தொடர்புகளைப் பயன்படுத்தி நிதி உதவியும் இதர ஆலோசனைகளும் தேவைப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்குத் உதவினார்.
வரிசை 26:
==இதழாளர்==
 
தேசிய எழுச்சி கொண்ட பத்திரிகைகளுக்கு உதவுவதைத் தன்னுடைய கடமையாகவே கருதினார். 1932-ல் சதானந்தம் அவர்களின் தி பிரீ பிரஸ் ஜோனல் (சென்னை பதிப்பு) என்ற இதழ் சரிவடைந்ததை ஒட்டி, தனது சொந்த ஊர்தி மூலம் தானே அவ்விதழை ஒவ்வொருருஒவ்வொரு இடங்களுக்கும் சேர்ப்பித்தார். மேலும் டி. பிரகாசத்தின் 'ஸ்வராஜ்யா'வுக்கும் எஸ். சதானந்தத்தின் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கும் உதவிகளைச் செய்துவந்தார். 1936-ம் ஆண்டு அக். 26-ம் தேதி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'தினமணி' ஆகிய நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனார். 1941-ல் தேசிய இதழாசிரியர் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டர். இது பிரித்தானிய அரசிற்கு ஒரு பெரும் சிக்கலாக இருந்தது.
 
==விடுதலைப் போரில் பங்கு==
"https://ta.wikipedia.org/wiki/ராம்நாத்_கோயங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது