மர்செல்லீனுஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: hu:Marcellinusz pápa
சி சேர்க்கை
வரிசை 26:
ஆனால் கி.பி. 302இல் மன்னனன் தியோக்ளேசியன் கிறித்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார். கிறித்தவப் போர்வீரர்கள் படையிலிருந்து விலக்கப்பட்டனர். பின்னர் கிறித்தவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. அவர்களுடைய நூல்களும் அழிக்கப்பட்டன. மன்னனின் அரண்மனை இரு முறை தீப்பற்றி எரிந்ததும், மன்னனின் செயல்பாடு இன்னும் அதிகக் கொடூரமானது. கிறித்தவத்தைக் கைவிடாவிட்டால் சாவுதான் முடிவு என்றாயிற்று.
 
இந்த நெருக்கடியின்போது, மர்செல்லீனுஸ் விவிலியம் மற்றும் கிறித்தவ சமய நூல்களை மன்னனின் ஆணைக்கு ஏற்ப கையளித்தார் என்றும், கிறித்தவ நம்பிக்கையை விட்டு விலகினார் என்றும், பின்னர் மனம் வருந்தி கிறித்தவத்துக்குத் திரும்பினார் என்றும், அதன் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்றும் '''திருத்தந்தையர் நூல்''' (''Liber Pontificalis'') கூறுகிறது. அச்செய்தி தற்போது கைவசம் கிடைக்காத "புனித மர்செல்லீனுசின் சாவு வரலாறு" (''Acts of St. Marcellinus'') என்னும் பண்டைய ஏட்டிலிருந்து பெறப்பட்டது.
 
{{under construction}}
==மர்செல்லீனுசின் மரணம்==
 
திருத்தந்தை மர்செல்லீனுஸ் கிபி 304ஆம் ஆண்டு ஏப்பிரல் 26ஆம் நாள், அவர் இறந்து 25 நாள்களுக்குப் பின், உரோமை சலாரியா சாலையில் உள்ள பிரிசில்லா கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இச்செய்தி '''திருத்தந்தையர் நூலில்''' உள்ளது.
 
==நினைவு நாள்==
 
கிபி 13ஆம் நூற்றாண்டில் மர்செல்லீனுஸ் நினைவாக விழாக் கொண்டாடப்பட்டது. ஏப்பிரல் 26ஆம் நாள் அவருடைய விழா [[அனகிலேத்துஸ் (திருத்தந்தை)|புனித கிலேத்துஸ்]] விழாவோடு இணைத்துக் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த இரு திருத்தந்தையரின் மறைச்சாட்சிச் சாவு பற்றியும் வரலாற்றுத் தெளிவு இல்லாமையால் 1969ஆம் ஆண்டு வெளியான புனிதர் நாள்காட்டியில் அவ்விழா குறிக்கப்படவில்லை.
 
==வழிவந்த திருத்தந்தை==
 
மர்செல்லீனுசின் சாவுக்குப் பிறகு, கிறித்தவ சபை துன்புறுத்தப்பட்ட நிலையில் இருந்ததால், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பெயர் [[முதலாம் மர்செல்லுஸ்]] ஆகும்.
 
==ஆதாரங்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மர்செல்லீனுஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது