அமைதிப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சிNo edit summary
வரிசை 1:
'''அமைதிஅமைதிப் பெருங்கடல்''' அல்லது '''பசிபிக் பெருங்கடல்''' (''Pacific Ocean'') உலகின் மிகப் பெரிய நீர்த் தொகுதியாகும். இதற்கு [[போர்த்துக்கல்|போர்த்துகேய]] நிலந்தேடு ஆய்வாளரான [[பெர்டினென்ட் மகலன்]] என்பவரால் "அமைதியான கடல்" என்ற பொருளில் இப்பெயர் வழங்கப்பட்டது. ஏறத்தாழ 18 [[கோடி]] சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ள [[பெருங்கடல்|இப்பெருங்கடல்]] [[உலகப் பரப்பு|உலகப் பரப்பில்]] மூன்றில் ஒரு பகுதியைச் சூழ்ந்து கொண்டுள்ளது. இது பூமியின் அனைத்துக் கண்டங்களின் கூட்டு நிலப்பரப்பை விட மிகப் பெரியதாகும்.
[[படிமம்:பசிபிக் பெருங்கடல்.jpg|thumb|right|280px|அமைதிப் பெருங்கடல்]]
[[ஆர்க்டிக்]] பகுதியின் [[பெரிங் கடல்|பெரிங் கடலிலிருந்து]], [[அன்டார்டிகா]]வின் [[றாஸ் கடல்]] வரை ஏறத்தாழ 15,500 கி.மீ வட-தெற்காகவும், இந்தோனேசியா முதல் [[கொலம்பியா|கொலம்பியக் கடற்கரை]] மற்றும் [[பெரு]] வரை ஏறத்தாழ 19,800 கி.மீ கிழக்கு-மேற்காகவும் பரந்து கிடக்கும் இம்மாகடல் 5° வடக்கு [[அட்ச ரேகை]]யில் தனது கிழக்கு-மேற்கு உச்சகட்ட தூரத்தை அடைகிறது. [[மலாக்கா நீரிணைவு]] இதன் மேற்கத்திய எல்லையாக கருதப்பாடுகிறது. உலகின் மிக ஆழமான பகுதியான, 10,911 மீ ஆழமுடைய [[மெரியானா அகழி]]யை இக்கடற் பகுதி உட்படுத்துகிறது. இக்கடலின் சராசரி ஆழம் 4,300 [[மீட்டர்|மீட்டராகும்]].
"https://ta.wikipedia.org/wiki/அமைதிப்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது