"அவகாசியிலிக் கொள்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

673 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Lord-dalhousie-2.jpg|thumb|இடல்லவுசிப் பிரபு]]
'''அவகாசியிலிக் கொள்கை''' (''Doctrine of Lapse'') என்பது [[இந்தியா]]விலிருந்த [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில்]] [[1848]]இலிருந்து [[1856]] வரை ஆளுநராக இருந்த [[டல்ஹவுசி பிரபு|இடல்லவுசிப் பிரபுவால்]] அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.<ref>[http://www.britannica.com/EBchecked/topic/330400/doctrine-of-lapse அவகாசியிலிக் கொள்கை {{ஆ}}]</ref>
 
அவகாசியிலிக் கொள்கையின்படி, [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின்]] நேரடிச் செல்வாக்குக்குட்பட்ட மன்னரரசுகளில் ஆட்சியாளரானவர் ஆட்சி புரிவதற்குத் தகுதியானவராகவோ நேரடி வாரிசு இன்றி இறந்து போனாலோ அம்மன்னரரசு [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின்]] ஆட்சியில் இணைக்கப்படும்.
 
===சான்சி===
[[ஜான்சி|சான்சியின்]] மகாராசா கங்காதர இராவு நேரடி வாரிசின்றி [[நவம்பர் 21]], [[1853]]இல் இறந்தமையால் ஆங்கிலேயர் அவகாசியிலிக் கொள்கையின்படி சான்சியைத் தமது ஆட்சியின் கீழ்கீழ்க் கொண்டு வர முயற்சித்தனர்.<ref>[http://www.adaderana.lk/tamil/opinion.php?nid=2652 ஜான்சிராணி நினைவுநாள்]</ref> [[மார்ச்|மார்ச்சு]], [[1854]]இல் [[ராணி லட்சுமிபாய்|இராணி இலட்சுமிபாய்க்கு]] 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து [[ஜான்சி|சான்சிக்]] கோட்டையை விட்டு வெளியேறுமாறு கூறினர்.<ref>[http://www.liveindia.com/freedomfighters/jhansi_ki_rani_laxmi_bai.html சான்சி இராணி இலட்சுமிபாய் வாழ்க்கை வரலாறு {{ஆ}}]</ref> ஆயினும் [[ராணி லட்சுமிபாய்|இராணி இலட்சுமிபாய்]] இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பின்னர், ஈ உரோசு தலைமையிலான பிரித்தானியப் படை வீரர்கள் படையெடுப்பின் மூலம் [[ஜான்சி|சான்சியைக்]] கைப்பற்றினர். ஆகையால், [[1857]]ஆம் ஆண்டுப் ஏற்பட்ட பெரும்புரட்சியின் போது சான்சியில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கு இராணி இலட்சுமிபாய் தலைமை தாங்கி நடத்திட இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.<ref>[http://www.thinakaran.lk/2010/07/29/_art.asp?fn=f1007292&p=1 சின்னச் சின்ன தகவல்கள்]</ref>
 
===அவாது===
ஆங்கிலேயர்கள், அவாதின் ஆட்சியாளர் ஆட்சி செய்வதற்குத் தகுதியற்றவர் எனக் கூறி அவாதைத் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஆனாலும் இவ்வொன்றிணைப்பு எதிர்க்கப்பட்டதுடன் [[1857 இந்தியக் கிளர்ச்சி]]க்கான காரணமாகவும் அமைந்தது.<ref>[http://tamil.webdunia.com/miscellaneous/special07/idday/0708/13/1070813006_4.htm 1857: சிப்பாய் கலகமல்ல, சுதந்திரப் போர்!]</ref>
 
==மேற்கோள்கள்==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1101290" இருந்து மீள்விக்கப்பட்டது