சியன்னா நகர கத்ரீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி மாற்றல்: sl:Sveta Katarina Sienska
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: vi:Catarina thành Siena; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 21:
'''சியன்னா நகர புனித கத்ரீன்''' (25 மார்ச் 1347, சியன்னா - 29 ஏப்ரல் 1380, உரோம்) ஒரு தொமினிக்கன் மூன்றாம் சபையின் உறுப்பினரும், இறையியலாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் அவிஞ்ஞோன் நகரில் தங்கியிருந்த திருத்தந்தை [[பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|பதினொன்றாம் கிரகோரி]] உரோமை நகருக்குத் திரும்பிச் செல்ல மிக முக்கிய காரணியாய் இருந்தார். 1970-இல் இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டார். [[அசிசியின் பிரான்சிசு|அசிசியின் புனித பிரான்சிசோடு]] இவரும் [[இத்தாலி]]யின் பாதுகாவலராக கருதப்படுகின்றார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[Fileபடிமம்:House Catherine Siena Apr 2008.jpg|thumb|left|சியன்னா நகரில் உள்ள கத்ரீனின் வீடு]]
 
இவரின் இயற்பெயர் கத்ரோனா பெனின்கசா. இவர் இத்தாலியில் உள்ள சியன்னா என்னும் ஊரில், கியாகோமோ டி பெனின்கசாவுக்கும், லாப்பா பியகென்டியுக்கும் பிறந்தவர்.<ref>{{cite web |url=http://www.newadvent.org/cathen/03447a.htm |title=St. Catherine of Siena |publisher=newadvent.org |accessdate=1 December 2010}}</ref> இவர் பிறந்த வருடமான 1347-இல் [[கறுப்புச் சாவு|கறுப்புச் சாவினால்]] மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.<ref>{{cite book |first=Finn |last=Skårderud |title=Holy anorexia: Catherine of Siena |publisher=Tidsskrift for norsk psykologforening |page=411 |location= Oslo |year=2008}}</ref>
வரிசை 32:
கத்ரீன் தொமினிக்கன் சபையில் சேர்ந்தார். இதனை அச்சபை உறுப்பினர்கள் பலர் எதிர்த்தனர். ஏனெனில் அதுவரை விதவைகள் மட்டுமே அச்சபையில் சேர அனுமதி இருந்தது.
 
[[Fileபடிமம்:San Domenico74.jpg|thumb|left|"கத்ரீனின் ஆன்ம நண்மை. ஓவியர்: மிரான்செஸ்கோ பிரிசி]]
1366-இல் அவருக்கு கிடைத்த பரவச நிலையில் இயேசு தன்னை ஆன்மீக முறையில் மணந்து கொண்டதாக இவர் நம்பினார். அப்போது கிறிஸ்து இவரை, மறைந்த வாழ்வினை விடுத்து, பொது வாழ்க்கைக்கு போக சொன்னதாக இவர் தன் ஆன்ம வழிகாட்டியிடம் கூறியுள்ளார். இவர் நோயுற்றோருக்கு உதவினார். இவரின் தொண்டு உள்ளம் சிலரைக் கவர்ந்ததால், மேலும் சிலரும் தொண்டு புரிவதில் இவரோடு இணைந்தனர். இதனால் 1374-இல் தொமினிக்கன் சபைத் தலைவர்களால் பிளாரன்சு நகரில் தப்பறைக்கொள்கைகளுக்காக விசாரிக்கப்பட்டு, குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார். இதன் பின் வடக்கு மற்றும் மத்திய இத்தாலியில் பயணம் செய்து, கடவுளை அன்பு செய்து புரட்சிபடைக்க மக்களை ஊக்குவித்தார்.<ref>{{cite book |author=Warren C. Hollister, and Judith M. Bennett |title=Medieval Europe: A Short History'', 9th edition |location=Boston |publisher=McGraw-Hill Companies Inc |year=2002 |page= 342 }}</ref>
 
வரிசை 39:
ஜூன் 1376-இல் இவர் தாமாகவே முன்வந்து [[திருத்தந்தை நாடுகள்|திருத்தந்தை நாடுகளில்]] அமைதி கொணர முயன்றார். அது பயன் அளிக்காததால், திருத்தந்தை [[பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|பதினொன்றாம் கிரகோரியை]] மீண்டும் அவிஞ்ஞோனிலிருந்து உரோமைக்கு 1377, ஜனவரியில் திரும்பி வரச் செய்தார். இத்திருத்தந்தையின் மறைவுக்குப் பின், யாரைத் திருத்தந்தையாக ஏற்பது என்பது குறித்து மேற்கு திருச்சபையில் பிளவு ஏற்பட்டது ("பெரும் பிளவு" அல்லது Western Schism of 1378). அப்போது இவர் திருத்தந்தை [[ஆறாம் அர்பன் (திருத்தந்தை)|ஆறாம் அர்பனுக்கு]] துணை புரிய உரோம் நகரில் சென்று தங்கினார். அங்கேயே சாகும் வரை இருந்தார். இந்தப் பெரும் பிளவினால் ஏற்பட்ட துன்பங்களினால் அவர் சாகும் வரை வாடினார்.
 
[[Fileபடிமம்:66-CaterinaSiena-Neroccio.jpg|thumb|right|180px|[[Statuette]] by [[Neroccio di Bartolomeo de' Landi]], (1475)]]
புனித கத்ரீனின் கடிதங்கள் ஆரம்பகால டஸ்கான் இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கடிதங்களுல் 300 கிடைத்து உள்ளது. திருத்தந்தைக்கான தனது கடிதங்களில், அவர் அடிக்கடி அவரை papa (இத்தாலிய மொழியில் "திருத்தந்தை") என்று அன்பாக குறிப்பிடப்படுகின்றார். ஆன்ம குருக்கள், கபுவாவின் ரேமண்ட், பிரான்ஸ் மற்றும் ஹங்கேரி அரசர்கள், கூலிப்படையினனான ஜான் ஹாக்வுட், நேபிள்ஸ் ராணி, மிலனின் விஸ்கோன்தி (Visconti) குடும்ப உறுப்பினர்கள், மற்றும் பலருக்கு இக்கடிதங்கள் எழுதப்பட்டன. அவரது கடிதங்கள் சுமார் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு எழுதப்பட்டது.
 
இவரின் ''The Dialogue of Divine Providence,'' என்னும் நூல், 1377 - 1378 இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டதாகும். பெரும்பாலும் படிப்பறிவில்லாதவராக கருதப்பட்டாலும், லத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகளை படிக்கும் திறன் இருந்ததாக அவரின் ஆன்ம குரு ரேமண்ட் கூறியுள்ளார், அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் மற்றவரால் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது என்றாலும் அவருக்கு எழுதத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
== இறப்பு ==
[[Fileபடிமம்:San Domenico Siena Apr 2008 (13).JPG|thumb|left|சான் தோமினோ பேராலயம், சியன்னா. இங்கே சியன்னா நகர புனித கத்ரீனின் மீபொருட்களுள் சில வைக்கப்பட்டுள்ளது]]
 
புனித கத்ரீனின் முப்பத்தி மூன்று வயதில் ரோம் நகரின் வசந்த காலத்தில், 1380-ஆம் ஆண்டு இறந்தார்.
வரிசை 52:
 
[[மினெர்வா மேல் புனித மரியா கோவில்|மினெர்வா மேல் புனித மரியா கோவிலின்]] அருகில் உள்ள கல்லறையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். அங்கே பல புதுமைகள் நிகழ்ந்ததாக மக்கள் கூறியதால் இவரின் உடல் கோயிலினுள் அடக்கம் செய்யப்பட்டது.<ref>{{cite web |url=http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GSln=Catherine+of+Siena&GSbyrel=in&GSdyrel=in&GSob=n&GRid=19919& |title=Catherine of Siena |publisher=findagrave.com |accessdate=1 December 2010}}</ref> இவரின் தலை, உடலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு சியன்னா நகரில் உள்ள தொமினிக்கன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite book |first=Finn |last=Skårderud |title=Holy anorexia Catherine of Siena |publisher=Tidsskrift for norsk psykologforening |page= 414}}</ref><ref>{{cite web |url=http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=19918 |title=Catherine of Siena |publisher=findagrave.com |accessdate=1 December 2010}}</ref>
[[Fileபடிமம்:Caterina sopra Minerva.jpg|thumb|[[மினெர்வா மேல் புனித மரியா கோவில்|மினெர்வா மேல் புனித மரியா கோவிலில்]] உள்ள கத்ரீனின் கல்லறை]]
 
திருத்தந்தை [[இரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|இரண்டாம் பயஸ்]] இவருக்கு 1461-இல் [[புனிதர் பட்டம்]] அளித்தார். இவரின் விழாநாள் ஏப்ரல் 29.<ref>{{cite book |title=Calendarium Romanum |publisher=Libreria Editrice Vaticana |year=1969 |page= 121}}</ref>
வரிசை 60:
கத்ரீனின் பசியற்ற நோயால் ([[:en:Anorexia mirabilis|Anorexia mirabilis]]) அவதிப்பட்டார் என்பர்.<ref>{{cite web |url=http://www.albany.edu/scj/jcjpc/vol8is1/reda.html |title=Anorexia and the Holiness of Saint Catherine of Siena |publisher=albany.edu }}</ref> இருப்பினும் இவர் தனது ஆன்மீக எழுத்துக்களுக்காகவும், அதிகாரம் உடையவர்களிடம் பணிந்து செல்லாமல் உண்மையை பேசயதற்காகவும் பெரிதாக மதிக்கப்படுகின்றார். இவரின் காலத்தில் இத்தகைய துணிச்சலோடு, ஒரு பெண் இருப்பது விதிவிலக்காகும். இதுவே இவர் அரசியல் மற்றும் உலக வரலாறு போன்றவற்றில் செல்வாக்கு செலுத்த முக்கிய காரணமாக இருந்தது.
 
== ஆதாரங்கள் ==
{{reflist}}
 
வரிசை 69:
*{{cite book|last=McDermott,|first=Thomas, O.P.|title=Catherine of Siena: spiritual development in her life and teaching|publisher=Paulist Press|location=New York|year=2008|isbn=0809145472}}
 
== மேலும் காண்க ==
*Catherine of Siena (1707–1721) ''Opere'', ed. Girolamo Gigli. 4 vols. Lucca; Siena
*Cross, F. L., ed. (1957) ''The Oxford Dictionary of the Christian Church''. Oxford U. P.; p.&nbsp;251
*''The Dialogue of St. Catherine Of Siena'', [[TAN Books]], 2009. ISBN 97808955501498
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons|Catherine of Siena}}
* {{gutenberg author| id=Catherine+of+Siena+Saint | name=Catherine of Siena}}
வரிசை 85:
{{Churchdoctor}}
{{கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி)}}
 
[[பகுப்பு:1347 பிறப்புகள்]]
[[பகுப்பு:1380 இறப்புகள்]]
வரி 135 ⟶ 136:
[[uk:Свята Катерина Сієнська]]
[[vec:Santa Catarina da Siena]]
[[vi:CaterinaCatarina thành Siena]]
"https://ta.wikipedia.org/wiki/சியன்னா_நகர_கத்ரீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது