யாழ்ப்பாணக் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''யாழ்ப்பாணக் கோட்டை''' யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் பண்ணைப் பாலத்தருகே சிதைவடைந்ந்த நிலையில் காணப்படும் கோட்டையாகும். [[யாழ்ப்பாண அரசு]] 19191619 ல் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை [[நல்லூர்|நல்லூரி]]லிருந்து அவர்கள் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண]]த்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு [[கோட்டை]]யையும் கட்டினார்கள். 1619 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள கோவாவிலிருந்த தலைமையகத்திலிருந்து [[பிலிப்பே டி ஒலிவேரா]]வுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை 1625 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. 1629 ல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637 ல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே கத்தோலிக்கத் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், [[வைத்தியசாலை]]யொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன. போத்துக்கீசரின் [[யாழ்ப்பாண நகரம்]] கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணக்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது