அசோகமித்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *திருத்தம்*
வரிசை 3:
'''அசோகமித்திரன்''', [[தமிழ்|தமிழின்]] சிறந்த [[எழுத்தாளர்|எழுத்தாளர்களுள்]] ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் [[1931]] ஆம் ஆண்டு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர பிரதேச]]த்தில் உள்ள [[செகந்திராபாத்]] நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார். எளிமையும், மெல்லிய [[நகைச்சுவை]]யும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் [[ஆங்கிலம்]], [[இந்தி]] உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், [[அயோவா பல்கலைக்கழகம்|அயோவா பல்கலைக்கழகத்தில்]] எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.
 
1996 இல் '''அப்பாவின் சிநேகிதர்''' சிறுகதை தொகுப்புக்காக [[சாகித்ய அகாதமி விருது]] பெற்றவர். இவரது படைப்புகளில்படைப்புகள் பெரும்பாலும் [[சென்னை]] அல்லது [[ஹைதராபாத்|ஹைதராபாத்தை]] கதைக்களமாக கோண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்தும் உள்ளது.
 
== ஆக்கங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அசோகமித்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது