முதியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"முதியர் என்போர் சங்க கால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''முதியர்''' என்போர் சங்க காலக் குடிமக்கள். முதுமலைக் காட்டுப் பகுதியில் வாழ்ந்தமையால் இவர்கள் முதியர் எனப்பட்டனர்.
 
பல்யானைச் செல்கெழு குட்டுவன் இவர்களோடு நட்புறவு கொண்டு, அவர்களுக்குத் தன் நாட்டின் ஒரு பகுதியைப் பங்கிட்டுத் தந்து ஆளச் செய்தான். <ref>மதி உறழ் மரபின் முதியரைத் தழீஇக் கண்ணகன் மரபின் மண் வகுத்து ஈத்து பதிற்றுப்பத்து பதிகம் 3-4</ref>
ஆண்டால் மூத்தவரை முதியவர் என்கிறோம். அறிவில் மூத்த பெரியவர்களைத் திருவள்ளுவர் முதுவர் என்கிறார். <ref>நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு – குறள் 715</ref> ஆண்டில் மூத்தவரையும் இளையவரையும் குறிக்க ‘உறுவர்’. ‘சிறுவர்’ என்னும் சொற்கள் சங்க காலத்தில் வழக்கத்தில் இருந்தன. <ref>உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும் அறத்துறை அம்பி.புறம் 381</ref>
"https://ta.wikipedia.org/wiki/முதியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது