போபால் பேரழிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: bg:Бхопалска катастрофа
சி இற்றைப்படுத்தல் - பகுப்புகள் சேர்த்தல்
வரிசை 23:
 
எனவே, இழப்பீட்டுத் தொகையாக 7,700 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று இந்திய அரசு கோருகிறது. இந்த உதவி என்று கிடைக்குமோ என்று காத்திருக்கின்றனர் போபால் மக்கள்.<ref>[http://zeenews.india.com/news/nation/dow-chemicals-opposes-higher-compensation_745238.html இழப்பீடு கோரி காத்திருக்கும் மக்கள்]</ref>
 
==தூய குடிநீர் வழங்க உச்ச நீதி மன்றம் ஆணை==
 
2012ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய உச்ச நீதி மன்றம் மத்தியப் பிரதேச அரசுக்கு மூன்று மாத கெடு கொடுத்து, போப்பால் நகரில் நச்சு வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டு சுத்த குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்ற 18 குடியேற்றப் பகுதிகளுக்கு சுத்த நீர் குழாய் இணைப்புகள் வழங்கும்படி உத்தரவிட்டது.<ref>[http://www.thehindu.com/news/national/article3388215.ece தூய குடிநீர் வழங்க நீதிமன்றம் ஆணை]</ref> போப்பால் பேரழிவு நடந்து 30 ஆண்டுகளாக மாசடைந்த நீரையே குடிக்கும் கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
 
==நெடு நாளைய பிரச்சினை==
 
போப்பால் யூனியன் கார்பைடு ஆலையில் நச்சு வாயு வெளிப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு நிகழ்வதற்கு முன்னரே நிலத்து அடி நீர் மாசடையத் தொடங்கிவிட்டிருந்தது. ஆலையிலிருந்து வழக்கமாக வெளியான கழிவுநீரில் நச்சுக் கலந்த வேதிப்பொருள்கள் அடங்கியிருந்ததால் அந்த இடர்ப்பாடு ஏற்பட்டிருந்தது.
 
2005ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் போப்பால் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குத் தூய குடிநீர் வழங்க மாநில அரசும் நகர ஆட்சியாளரும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவு செயல்படுத்தப்படாமலே கிடப்பில் போடப்பட்டது.
 
மக்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீர் இன்றுகூட மஞ்சள் நிறம் கொண்டு, வழக்கமான குடிநீரின் சுவை இன்றி சப்பென்று உள்ளது. இதனால் மக்களின் நலம் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகின்றது.
 
==ஆபத்தான கழிவுப் பொருள்கள்==
 
போப்பால் பேரழிவால் எழுந்த நச்சுக் கழிவுப் பொருள்கள் மூடப்பட்ட யூனியன் கார்பைடு தளத்தில் இன்றளவும் குவிந்து கிடக்கின்றன. அவற்றின் அளவு 350 டன் என்று கணிக்கப்பட்டுள்ளது. இக்கழிவுப் பொருள்களை இந்தியாவிலேயே புதைக்காமல், செருமனியின் ஹாம்பர்க் நகருக்குக் கொண்டுசெல்ல ஒரு செருமானிய நிறுவனம் முன்வந்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 
யூனியன் கார்பைடிடம் இருந்து தொழிலகத்தை வாங்கிய டோ கெமிக்கல்சு நிறுவனம் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்க தனக்குப் பொறுப்பில்லை என்று கூறிவருகிறது.
 
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவையான தூய நீரும், நச்சு கலவாத சூழலும் கிடைக்குமாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அந்த ஆணை செயலாக்கம் பெறுகிறதா என்று கண்காணித்து 2012 ஆகத்து 13ஆம் நாள் அறிக்கை வழங்குமாறு பணித்து ஒரு குழுவையும் நீதி மன்றம் அமைத்துள்ளது.<ref>[http://www.thehindu.com/opinion/editorial/article3405294.ece நீதி மன்ற ஆணை பற்றிக் கருத்து]</ref>
 
==ஆதாரங்கள்==
வரி 31 ⟶ 51:
 
[[பகுப்பு:விபத்துகள்]]
[[பகுப்பு:சுற்றுச் சூழல் மாசடைதல்]]
 
[[பகுப்பு:1984 நிகழ்வுகள்]]
[[பகுப்பு:தொழிற்கூடப் பேரழிவுகள்]]
[[பகுப்பு:நச்சு வளிக் கசிவுகள்]]
[[af:Bhopal-ramp]]
[[ar:كارثة بوبال]]
"https://ta.wikipedia.org/wiki/போபால்_பேரழிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது