ஒலிம்பிக்குத் தீச்சுடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*எழுத்துப்பிழை திருத்தம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 9:
| accessdate=2010-03-27
}}</ref>
==பயன்பாடு==
[[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களின்]] திறப்புவிழா கொண்டாட்டங்களுக்கு பல மாதங்களுக்கு முன்பே [[கிரீசு|கிரீசில்]] பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடந்த [[ஒலிம்பியா, கிரீசு|ஒலிம்பியாவில்]] ''ஒலிம்பிக் தீவட்டி'' கொளுத்தப்படுகிறது. சூரிய ஒளியை [[பரவளைவுத் தெறிப்பி|பரவளைவு ஆடி]]யால் குவியப்படுத்தி பதினோரு பெண்களால் (கற்புடைக் கன்னிகள்)<ref group="notes" >The Roman [[Vesta (mythology)|Vesta]] is derived from the Greek goddess [[Hestia]]. Hestia's rituals at the founding of a new settlement also included the transfer of a continuous flame from the founding city.</ref> நடத்தப்படும் ஓர் விழாவில் இந்த தீவட்டி தீயிடப் படுகிறது.
 
பல நாடுகளின் வழியே பல்வேறு விளையாட்டு வீரர்களால் ஏந்திச் செல்லப்படும் இந்த தீவட்டி அஞ்சல் போட்டிகளின் திறப்புவிழா அன்று போட்டிகளுக்கான மைய விளையாட்டரங்கில் முடிவுக்கு வருகிறது. இதனை ஏந்தி வரும் இறுதி விளையாட்டு வீரர் யாரென்பது அறிவிக்கப்படாது இருப்பதும் பெரும்பாலும் போட்டிகளை ஏற்று நடத்தும் நாட்டின் விளையாட்டுச் சாதனையாளராக இருப்பதும் வழைமையாகும். இறுதியாக ஏந்துபவர் தீக்கொப்பரையை நோக்கி ஓடி, அது பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் உயரத்திற்கு அலங்காரப் படிகளில் ஏறி, தீவட்டியால் தீச்சுடரை ஏற்றுவார். இந்தத் தீச்சுடர் ஒலிம்பிக் போட்டிகள் முழுமையாக நடந்தேறும்வரை அணையாது எரிந்து கொண்டிருக்கும். விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் விழாவின்போது இத்தீச்சுடர் அணைக்கப்படும். இவ்வாறு ஒலிம்பிக் தீச்சுடரை ஏற்ற அழைக்கப்படுதல் பெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒலிம்பிக்குத்_தீச்சுடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது