மீக்கடத்துதிறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[File:Meissner effect p1390048.jpg|thumb| மேஸ்ஷ்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

20:10, 17 மே 2012 இல் நிலவும் திருத்தம்

சாதாரண கடத்திகள், குறைந்த வெப்பநிலையில் அதிக கடத்துத்திறனைப் பெறுகின்றன. மிகக் குறைந்த வெப்பநிலையில் மின்தடை சுழி மதிப்பினை அடையும். அத்திறனுடன் மின்னோட்டதை கடத்தும் தன்மைக்கு மீக்கடத்துத்திறன் என்று பெயர். மீக்கடத்துத்திறனை முதலில் ஐயிக் காமர்லிங்க் ஒன்ஸ் Heike Kamerlingh Onnes என்பவர் 1911 இல் கண்டறிந்தார். 4.2 K வெப்பநிலையில் பாதரசத்தின் மின்தடை திடீரென சுழி மதிப்பை அடைவடைக் கண்டறிந்தார்.

மேஸ்ஷ்ணர் விளைவு
மின்காந்த உயர்தியின் செய்முறை

உலோகங்களின் பண்புகள்

  • மின்தடை 10^-5 Ω அளவிற்கு மிகக்குறைவு
  • அதிக மின்புலத்திற்க்கு உட்படுத்தும் போது மீக்கடத்தும் திறனை இழக்கிறது
  • மின்புலத்தில் வைக்கும் போது டையா காந்தமகா செயல்படுகிறது

வகைகள்

மின்காந்த புலத்தில் இவைகளின் செயல்பாடுகள் வைத்து இவ்வகை உலோகங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அவை,

  • வன் மீக்கடத்திகள்
  • மென் மீக்கடத்திகள்

பயன்பாடுகள்

மீக்கடத்திகள் மருத்துவ மற்றும் பொறியியல் துறைகளில் மிகவும் பயன்படுகிறது 1. மீக்கடத்து இயற்றிகளில், ஆற்றல் சேமிப்பு திறன் அடிப்படையாக உள்ளது. 2. மீக்கடத்து திறன் கொண்ட காந்தங்கள் இரயில் வண்டிகளை தண்டவாளாங்களில் இருந்து உயர்த்த பயன்படுகின்றன. 3. கணினிகளில் நினைவு சேமிக்கும் அடிப்படைக் கூறுகளாக உள்ளன. 4. மூளைகளின் அலைகளை ஆராய்ந்து கட்டிகளையும், பாதிப்படைந்த செல்களை நீக்க உதவுகிறது.

இதையும் பார்க்கவும்

வெளி இணைப்பு

வார்ப்புரு:இயற்பியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீக்கடத்துதிறன்&oldid=1110673" இலிருந்து மீள்விக்கப்பட்டது