ஐரோப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
தற்காலப் புவியியலாளர்கள் ஐரோப்பாவை [[யூரேசியா]]வின் மேற்கு அந்தலையில் உள்ள [[தீவக்குறை]] என வரையறுக்கின்றனர். இதன் வடக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் பெரிய நீர்ப்பரப்புகள் உள்ளன. ஊரல் மலை, [[ஊரல் ஆறு]], [[காசுப்பியன் கடல்]] என்பன இதன் கிழக்கு எல்லைகளாக விளங்குகின்றன. தென்கிழக்கில் [[காக்கசசு மலைகள்]], [[கருங்கடல்]], கருங்கடலையும் [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலையும்]] இணைக்கும் நீர்வழிகள் என்பன எல்லைகளாக உள்ளன.<ref name="Encarta">{{cite encyclopedia|last=Microsoft Encarta Online Encyclopaedia 2007|title=Europe|url=http://encarta.msn.com/encyclopaedia_761570768/Europe.html|accessdate=27 December 2007|archiveurl=http://www.webcitation.org/5kwbxqnne|archivedate=31 October 2009|deadurl=yes}}</ref> சமூக-அரசியல் வேறுபாடுகள், பண்பாட்டு வேறுபாடுகள் என்பன காரணமாக ஐரோப்பாவின் எல்லைகள் தொடர்பாக வேறுபட்ட விளக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சைப்பிரசு ஏறத்தாழ அனத்தோலியா (அல்லது சின்ன ஆசியா) ஆகும். ஆனால் அது இப்போது ஐரோப்பாவின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுவதுடன், [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்திலும்]] உறுப்பு நாடாக உள்ளது. இது போலவே, இப்போது ஐரோப்பாவில் உள்ளதாகக் கருதப்படும் [[மால்ட்டா]], பல நூற்றாண்டுகளாக [[வடக்கு ஆப்பிரிக்கா]]வின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.<ref>Falconer, William; Falconer, Thomas. [http://books.google.com/books?id=B3Q29kWRdtgC&pg=PA50&dq=Strabo+Theophrastus+Melita#v=onepage&f=false ''Dissertation on St. Paul's Voyage''], BiblioLife (BiblioBazaar), 1872. (1817.), p 50, ISBN 1-113-68809-2 ''These islands Pliny, as well as Strabo and Ptolemy, included in the African sea''</ref> [[ஐசுலாந்து]], வட அமெரிக்காவின் [[கிரீன்லாந்து]]க்கு அண்மையில் இருந்தபோதும் அதுவும் ஐரோப்பாவின் பகுதியாகவே இப்போது உள்ளது.
 
சில வேளைகளில், ஐரோப்பா என்னும் சொல் குறுகிய புவியரசியல் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையோ அல்லது பண்பாட்டு அடிப்படையிலான ஒரு உட்குழு நாடுகளை மட்டுமோ குறிக்கப் பயன்படுவது உண்டு. ஆனால், ஐரோப்பிய அவையில் 47 நாடுகள் இருந்தாலும், அவற்றில் 27 நாடுகள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன.<ref>{{cite web|url=http://www.coe.int/T/e/Com/about_coe/|title=About the Council of Europe|publisher=Council of Europe|accessdate=9 June 2008 |archiveurl = http://web.archive.org/web/20080516024649/http://www.coe.int/T/e/Com/about_coe/ <!-- Bot retrieved archive --> |archivedate = 16 May 2008}}</ref> அத்தோடு, [[அயர்லாந்து]], [[ஐக்கிய இராச்சியம்]], வட அத்திலாந்திய மற்றும் நடுநிலக்கடல் தீவுகள், சில சமயங்களில் [[இசுக்கன்டினேவியா|இசுக்கன்டினேவிய]] நாடுகள் ஆகியவற்றில், ஐரோப்பியத் தலை நிலத்தை வெறுமனே "ஐரோப்பா" என்றும் "கண்டம்" என்றும் அழைப்பது வழக்கமாக உள்ளது.<ref>{{cite web|url=http://wordnet.princeton.edu/perl/webwn?s=europe|title=Europe&nbsp;— Noun|publisher=Princeton University|accessdate=9 June 2008}} {{Dead link|date=September 2010|bot=H3llBot}}</ref>
 
== ஐரோப்பாவிலுள்ள நாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது