அடிப்படை விசைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

00:48, 9 மார்ச்சு 2007 இல் நிலவும் திருத்தம்

அடிப்படை விசைகள் என்பவை நான்கு என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இவைகளை இவற்றினும் வேறான அடிப்படை விசைகளால் விளக்க இயலாது. செயல் முறையில் நாம் அறியும் எல்லா இயற்பியல் வினைகளும் (இதில் வேதியியல் முதலியனவும் அடங்கும்) இந்த நான்கே நான்கு விசைகளால் விலக்க முடியும். அணுவுக்குள் குவார்க்குகளுக்கு இடையே நிகழும் உறவாட்டங்கள் முதல் விண்மீன், நாண்மீன்பேரடை, அண்டம் முதலியன நகர்வதும் மோதுவதும் அனைத்தும் இந்த நான்கு அடிப்படை விசைகளால் விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த நான்கு விசைகளாவன: பொருள் ஈர்ப்பு விசை, மின்காந்தவியல் விசை, மென்விசை, அணுவின் கருப் பெருவிசை. இவ்விசைகளின் வலுவின் அளவு ஒன்றுக்கு ஒன்று மிகவும் வேறுபடுவது. இந் நான்கு விசைகளில் மூன்று விசைகளுக்கு அடிப்படையில் ஒரு விசை இருக்க வேண்டும் என கருதுகிறார்கள், ஆனால் இன்றளவும் இவை தனித்தனி அடிப்படை விசைகளாகவே கருதப்படுகின்றன. மின்னியலும், காந்தவியலும் சேர்ந்து இன்று மின்காந்தவியல் என்று இணைந்த ஒரு இயக்கமாக அறியப்படுவது போலவும், குறைந்த ஆற்றல் எல்லைகளில் மின்காந்தவியல் விசையும் மென்விசையும் ஓர் அடிப்படை மின்னியமென் விசையின் இரு கூறுகள் என அண்மையில் உணரப்படுட்டுள்ளது. இதே போல கருப் பெருவிசையையும் சேர்ந்தெண்ணுமாறு ஒரு ஒருங்கிணைப்புக் கருத்து உருவாகும் என கருதுகின்றனர். எனினும் ஏதும் இன்றளவும் நிறைவேறவில்லை. பொருள் ஈர்ப்பு விசையையும் இணைக்கும் (குவாண்ட்டம் ஈர்ப்புக் கொள்கை) எண்ணங்களும் உள்ளன.

Interaction Current Theory Mediators Relative Strength1 Long-Distance Behavior
அணுவின் கருப் பெருவிசை Quantum chromodynamics
(QCD)
gluons 1038 (see discussion below)
Electromagnetic Quantum electrodynamics
(QED)
photons 1036
Weak Electroweak Theory
(GWS theory)
W and Z bosons 1025
Gravity General Relativity
(GR, not a quantum theory.)
gravitons 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிப்படை_விசைகள்&oldid=111302" இலிருந்து மீள்விக்கப்பட்டது