"எசுப்பானியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,049 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
உரையாக்கம் - தொடர்ச்சி
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: io:Hispaniana Imperio)
சி (உரையாக்கம் - தொடர்ச்சி)
எசுப்பானியா 15ஆம் நூற்றாண்டில் பேரரசாக மாறத் தொடங்கியதிலிருந்து, நவீன உலக விரிவாண்மையும் ஐந்து நூற்றாண்டுகளாக ஐரோப்பா உலக அளவில் கோலோச்சிய செயல்பாடும் ஆரம்பித்தது. எசுப்பானியா 1492இல் தொடங்கி அமெரிக்கா நோக்கி கடற்பயணங்களை மேற்கொண்டது. அதிலிருந்து சுமார் ஆறு நூற்றாண்டுகளாக எசுப்பானியாவின் ஆதிக்கம் ஐரோப்பிய எல்லைகளைத் தாண்டிச் சென்றது. எசுப்பானியாவின் குடியேற்ற ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஆப்பிரிக்க பிரதேசங்கள் 1970களில் சுதந்திரம் அடைந்தன. அதுவரையிலும் எசுப்பானியாவின் பேராண்மை உலகளவில் நீடித்தது.
 
==எசுப்பானியாவின் பகுதிகள் ஒன்றுபடுதல்==
 
எசுப்பானியாவில் நிலவிய மாகாண ஆட்சிகளுள் கஸ்தீலியா பிரதேசமும் அரகோன் பிரதேசமும் முதன்மைபெற்றிருந்தன. கஸ்தீலியாவின் ஆட்சியைப் பிடிக்க 1475-1479 காலக்கட்டத்தில் நிகழ்ந்த போரில் இசபெல்லா அணி வெற்றிபெற்றது. அதை எதிர்த்த ஹுவானா அணி தோல்வியுற்றது. இசபெல்லா ஏற்கெனவே அரகோன் பிரதேச இளவரசரான பெர்டினான்டு என்பவரை மணந்திருந்ததால், கஸ்தீலியாவும் அரகோனும் ஒரே அரசர்களின் கீழ் வரலாயின. இசபெல்லாவும் பெர்டினான்டும் "கத்தோலிக்க அரசர்கள்" (''Catholic Monarchs''- எசுப்பானியம்: ''los Reyes Catolicos'') என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறார்கள்.
[[File:Christopher Columbus9.jpg|thumb|right|250px|அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் கத்தோலிக்க அரசர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்.]]
 
==முசுலீம் ஆட்சி முடிவுறல்==
 
1472இல், எசுப்பானிய அரசர்களான இசபெல்லா-பெர்டினான்டு தம்பதியர் ஆட்சியின்போது கிரனாடா பிரதேசத்தில் நிலவிய முசுலீம் ஆட்சி முறியடிக்கப்பட்டு, கிரனாடா பகுதி கஸ்தீலியா அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு, எட்டு நூற்றாண்டுகளாக எசுப்பானியாவிலும் போர்த்துகல் பகுதிகளிலும் நிலவிய முசுலீம் ஆட்சி முற்றிலுமாக முடிவுற்றது. இது "ஆட்சி மீட்பு" (''Reconquest'' - எசுப்பானியம்: ''Reconquista'') என அழைக்கப்படுகிறது.
 
==கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடல் பயணம் மேற்கொள்ளல்==
 
அதே 1472ஆம் ஆண்டில் எசுப்பானிய அரசர்களான இசபெல்லா-பெர்டினான்டு தம்பதியர் ஆதரவோடு, கிறிஸ்டோபர் கொலம்பஸ் அட்லான்டிக் பெருங்கடலில் மேற்குத் திசை நோக்கிப் பயணம் சென்று இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்க முயன்றார். ஆனால், இந்தியாவை வந்தடைவதற்குப் பதிலாக அமெரிக்கா என்னும் புதியதொரு பெருநிலப்பகுதியைக் கண்டுபிடித்தார்.
 
அதிலிருந்து ஐரோப்பா, குறிப்பாக எசுப்பானியா, அமெரிக்காக்களில் குடியேற்ற ஆதிக்கம் ஏற்படுத்தத் தொடங்கியது.
 
 
[[File:Christopher Columbus9.jpg|thumb|right|250px|அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் தமது புரவலர்களான எசுப்பானிய "கத்தோலிக்க அரசர்களுக்குஅரசர் தம்பதிகள்" இசபெல்லாவுக்கும் பெர்டினான்டுக்கும் மரியாதை செலுத்துகிறார்.]]
[[Image:Battle of Pavia.jpg|thumb|300px|இத்தாலியில் பவீயா நகரில் நிகழ்ந்த போர் (1525)]]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1115042" இருந்து மீள்விக்கப்பட்டது