உயிரணு வேற்றுமைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''உயிரணு வேற்றுமைப்பாடு''' அல்லது '''கல வேற்றுமைப்பாடு''' (Cell differentiation) என்பது எளிய உயிரணுக்களில்[[உயிரணு]]க்களில் இருந்து, தனித்துவமான உயிரணுக்கள் உருவாதல் ஆகும். பல்கல [[உயிரினம்|உயிரினங்களில்]], [[கருவணு]]வில் இருந்து [[உயிரணுப்பிரிவு]] மூலம் உருவாகும் பல கலங்களும் பின்னர் அவற்றின் அமைப்பு, தொழிலுக்கேற்ப பல தடவைகள் சிறப்பாக்கத்தின் மூலம் தனித்துவமான உயிரணுக்களை உருவாக்கிக் கொள்ளும்.

பலகல உயிரினங்களின் வேறுபட்ட [[இழையம்|இழையங்களில் காணப்படும்]] உயிரணுக்களுக்கிடையிலான அமைப்பு வேறுபாடும், அவற்றின் தொழில் வேறுபாடும் இத்தகைய உயிரணு வேற்றுமைப்பாட்டினாலேயே ஏற்படும். உயிரினங்களின் முதிர்நிலையிலும் கூட இந்த உயிரணு வேற்றுமைப்பாடு நிகழும். [[குருத்தணு]]க்களில் நிகழும் உயிரணு வேற்றுமைப்பாட்டினால், வெவ்வேறு இழையங்களில் உள்ள இறந்த உயிரணுக்களை ஈடு செய்யவும், பாதிக்கப்பட்ட உயிரணுக்களைச் சீர்செய்யவும் முடிகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_வேற்றுமைப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது