உயிரணு வேற்றுமைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவாக்கம்
வரிசை 2:
 
பலகல உயிரினங்களின் வேறுபட்ட [[இழையம்|இழையங்களில் காணப்படும்]] உயிரணுக்களுக்கிடையிலான அமைப்பு வேறுபாடும், அவற்றின் தொழில் வேறுபாடும் இத்தகைய உயிரணு வேற்றுமைப்பாட்டினாலேயே ஏற்படும். உயிரினங்களின் முதிர்நிலையிலும் கூட இந்த உயிரணு வேற்றுமைப்பாடு நிகழும். [[குருத்தணு]]க்களில் நிகழும் உயிரணு வேற்றுமைப்பாட்டினால், வெவ்வேறு இழையங்களில் உள்ள இறந்த உயிரணுக்களை ஈடு செய்யவும், பாதிக்கப்பட்ட உயிரணுக்களைச் சீர்செய்யவும் முடிகின்றது.
 
இந்த உயிரணு வேற்றுமைப்பாடானது மிகவும் உயர் நிலையில் கட்டுப்படுத்தப்படும் [[மரபணு வெளிப்பாடு]] மாற்றங்களினால் ஏற்படும். [[மரபணு]]க்களின் வெளிப்பாடு, குறிப்பிட்ட உயிரணு உடலில் அமைந்திருக்கும் இடத்திற்கேற்ப, தேவைக்கேற்ப வேறுபடும். ஒரு சில விதிவிலக்கான நிலமைகள் தவிர்த்து, உயிரணு வேற்றுமைப்பாடானது, மரபணு வரிசையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனவே ஒரே மாதிரியான [[மரபணுத்தொகை]]யைக் கொண்டிருக்கும் உயிரணுக்கள் வெவ்வேறு உடலியல் தொழிற்பாடுகளைக் கொண்டிருக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_வேற்றுமைப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது