ஆர்.என்.ஏ குறுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி மாற்றல்: fa:آران‌ای سرکوبگر
No edit summary
வரிசை 1:
[[Image:ShRNA_Lentivirus.svg|thumb|400px| ]]
 
'''ஆர்.என்.ஏ குறுக்கீடு''' (RNA interference or RNAi) என்பது [[உயிரணு]]வில் ஒரு [[மரபணு]]வை வெளிப்படுத்தலை ஒடுக்கும் (silencing) நிகழ்வு ஆகும். இந் நிகழ்வை விலங்குகளில் ஆர்.என்.ஏ குறுக்கீடு என்றும், பயிர்களில் ''மரபணு ஒடுக்குதல்'' (Post transcriptional gene silencing) என்றும், பூஞ்சைகளில் ''கொல்லுதல்'' (QUELLING) எனவும் அழைக்கப்படும். இந்நிகழ்விற்கு [[குறு ஆர்.என்.ஏ]] (microRNAs) மற்றும் [[சிறு ஆர். என். ஏ]] (siRNA) போன்றவை ஈடுபடுக்கின்றன. சிறு மற்றும் குறு ஆர்.என்.எ க்களில் சில ஒற்றுமைகள் இருந்தாலும், உருவாக்கத்திலும் ,செயலாக்கத்திலும் சில வேறுபாடுகள் உள்ளன. சிறு ஆர்.என்.எ (siRNA) நோயை எதிர்த்துப் போராடும் ஓர் அரண் போன்ற அமைப்பகாக செயல்படுகிறது. குறு ஆர்.என். ஏ (21-22 nucleotide) கரு அமிலம் அளவுள்ள, ஓரிழை உடைய ஆர்.என்.ஏ ஆகும். இவை [[மரபணு வெளிப்பாடு|மரபணு வெளிப்படுதலின்]] அளவுகளை (gene expression) கட்டுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றுகிறன . இவை வளர்சிதை மாற்றங்கள் (developmental regulation), [[புற்றுநோய்]], [[இதயம்|இதய]], [[மூளை]] தொடர்பான வளர்ச்சிகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கபட்டுள்ளதால், இதை பற்றி மிகுதியான ஆய்வுகள் தற்பொழுது நடைபெறுகின்றன.
 
ஆர்.என்.ஏ குறுக்கீடுகள் அனைத்தும் வகையான நிலை கருவுள்ள உயிர்களில் நடைபெறுகிறது என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரியல் நிகழ்வின் சில வேளைகளில், ஓரிழை ஆர்.என்.ஏ, ஈரிழை ஆர்.என்.ஏ-வாக மாற்றப்படும். இவ்வாறு ஈரிழை ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் வேளைகளில், இவை சிறு அளவுகள் கொண்ட 18-20 இணைகளாக ஆக்கப்படுகின்றன. இந் நிகழ்விற்க்கு [[டைசர்]] என்னும் நொதி (''ஈராக்கி நொதி'') இன்றியமையாததாகும். பின் இச்சிறு ஆர்.என்.ஏ-க்கள் மேலும் சில [[புரதம்|புரதங்களோடு]] இணைந்து ஒரு கலவையாக மாற்றம் அடைகிறது. இக்கலவை [[ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை]] (RISC, RNA-induced silencing complex) என பெயர்பெரும். இக்கலவை , [[செய்தி ஆர்.என்.ஏ]] க்களில் பிணைந்து ஆர்.என்.ஏ ஒடுக்குதல அல்லது மரபணு வெளிப்படுத்தலை தடுத்து விடும். மரபணு வெளிப்படுத்தலை சிறு ஆர்.என்.ஏ க்கள் கட்டுப்படுத்துவதால், இவைகள் ஆய்வுகளில் மிகையாக பயன்படுத்தப்படுகிறது. செயற்கை முறையில் உள்-செலுத்தப்படும் சிறு ஆர்.என்.ஏ-க்களால், ஒரு மரபணு வெளிப்படுத்தலை கட்டுப்படுத்த கூடும். இப்பண்புகளே ஒரு உயிரியல் நிகழ்வுளில் ஈடுபடும் மரபணுக்களை கண்டுபிடிக்க உதவி புரிவதோடு, உயிர் தொழில் நுட்பத்திலும், மருத்துவத்திலும் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
வரிசை 10:
[[Image:Rnai phenotype petunia crop.png|thumb|250px|right|Example [[petunia]] plants in which genes for pigmentation are silenced by RNAi. The left plant is [[wild-type]]; the right plants contain [[transgene]]s that induce suppression of both transgene and endogenous gene expression, giving rise to the unpigmented white areas of the flower.<ref name="Matzke">{{cite journal | author = Matzke MA, Matzke AJM. | year = 2004 | title = Planting the Seeds of a New Paradigm. | journal = PLoS Biol | volume = 2 | issue = 5 | pages = e133 | doi = 10.1371/journal.pbio.0020133 | pmid = 15138502 }}</ref>]]
 
ஆர்.என்.ஏ குறுக்கீடு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு தற்காலிகமாகவும் எதிபாரமால் நிகழ்ந்த நிகழ்வு ஆகும். நாம் அனைவரும் அறிந்த (Petunia) வில் முதன் முறையாக இந்நிகழ்வு கண்டறியப்பட்டது. நாம் காணும் மலரின் நிற அமைவு என்பது [[நிறமிகள்]] (Chalcone) இருக்கும் அளவை பொருத்து அமையும். இந் நிறமிகள் அமைவிற்கு [[சால்கோன் உற்பத்தி நொதி]] (Chalcone synthetase) இன்றியமையாத ஒன்றாகும். பொதுவாக காகிதபூ [[இளம்சிகப்பு]] நிறத்திலும் அல்லது [[கரு ஊதா]] நிறத்திலும் அமெரிக்காவில் காணப்படும். மிகையான நிறமிகள் அமைந்தால்[[ கருமை]] நிறத்திலும், மாறாக குறைவாக அமைந்தால் இளம் சிகப்பு நிறத்திலும் காணப்படும். 1990 ஆண்டு [[அமேரிக்கா]] மற்றும் [[நெதர்லாந்து]] நாட்டில், சில ஆய்வாளர்கள் சால்கோன் உற்பத்தி நொதியின் [[மரபணு வரிசைகளைபகுதிகள்]] (coding region) இச்செடியில் செலுத்தினர். மிகையாக இந் நொதி வெளிப்பட்டால் நிற அமைவை கொடுக்கும் [[நிறமிகள்]] (chalcone) மிகையாக உற்பத்தி செய்யப்பட்டு கருமையான நிறத்தை கொடுக்கும் என எதிர்பார்த்தனர். அதற்க்கு மாறாக வெளிப்பட்ட மலரின் நிறமோ முழுமையான [[வெள்ளை]] அல்லது குறைவான [[வெள்ளை]] நிறத்தை கொண்டமைந்தது. இம்மலரை மேலும் ஆய்வு செய்த பொழுது, மிகையாக வெளிப்படும் என எதிர்பர்ர்க்கப்பட்ட சால்கோன் நொதியின் வெளிப்பாடு, இயற்கையான உள்ள [[இளம்சிகப்பு]] அல்லது [[கரு ஊதா]] மலரை விட குறைவாக காணப்பட்டது. இருந்தபோதிலும் இவ்வாய்வில் ஏன், எப்படி நிகழ்கிறது என்பதை விவரிக்கவில்லை.
 
இவ்வாய்வு வெளிவந்த சில காலங்களில், இதனையொட்டிய நிகழ்வு நீவ்ரோச்போர (Neurospora crassa) என்னும் [[பூஞ்சை]]யில் அறியப்பட்டது. இதனை கொல்லுதல் (quelling) என்ப்பெயரிட்டபோதும், ஆய்வாளர்கள் இதனை காகிதபூவில் நிகழ்ந்த நிகழ்வில் ஒப்பிட மறந்து விட்டனர். காகிதபூவில் நிகழ்வில் மேற்கொண்ட மறு ஆய்வில், உள்-செலுத்தப்படும் செய்தி ஆர்.ஏன்.ஏ க்கள் அழிக்கப்படுகின்றன என அறியப்பட்டது. இதனை மரபணு ஒடுக்குதல் என அழைத்தபோதும், இதனின் செயலாக்கம் அறியப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ_குறுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது