கண்ணாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கி இணைப்பு: ia:Vitro
வரிசை 32:
தூய சிலிக்கா (SiO<sub>2</sub>), 10 பசுக்கால் செக்கன் பாகுநிலையில், 2300&nbsp;[[செல்சியஸ்|°ச]] (4200&nbsp;[[பாரன்ஹைட்|°ப]]) "கண்ணாடி உருகு நிலை"யைக் கொண்டது. தூய சிலிக்கா சில சிறப்புக் கண்ணாடித் தேவைகளுக்குப் பயன்படுகின்றது. ஆனால், சிலிக்காவுடன் பிற பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் உற்பத்தி முறைகளை எளிமையாக்கலாம். இவற்றுள் [[சோடியம் காபனேட்டு]]ம் (Na<sub>2</sub>CO<sub>3</sub>) ஒன்று. இது சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடியில் உருகு நிலையை 1500&nbsp;[[செல்சியஸ்|°ச]] (2700&nbsp;[[பாரன்ஹைட்|°ப]]) க்குக் குறைக்கின்றது. ஆனாலும், இது கண்ணாடியை நீரில் கரையக் கூடியது ஆக்குகிறது. இது விருப்பத்துக்கு உரியது அல்ல என்பதால், [[சுண்ணாம்புக்கல்]]லில் இருந்து பெறப்படும் [[கல்சியம் ஒட்சைட்டு]] (CaO), சிறிதளவு [[மக்னீசியம் ஒட்சைட்டு]] (MgO), [[அலுமீனியம் ஒட்சைட்டு]] போன்றவற்றைச் சேர்ப்பதன் மூலம் வேதியியல் உறுதிப்பாடு பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் கண்ணாடி, நிறை அடிப்படையில் சுமார் 70 தொடக்கம் 74% சிலிக்காவைக் கொண்டிருக்கும். இது [[சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடி]] எனப்படும். உற்பத்தியாகும் கண்ணாடிகளில் 90% ஆனவை சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடிகள் ஆகும்.
 
சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடிகள் உட்படப் பொதுவாக உற்பத்தி செய்யப்படும் கண்ணாடிகளுக்கு அவற்றின் இயல்புகளை மாற்றுவதற்காக வேறும் பல பொருட்களைச் சேர்ப்பது உண்டு. [[ஈயப் பளிங்கு]]க் கண்ணாடி அல்லது தீக்கண்ணாடி எனப்படும் ஈயக் கண்ணாடிகள் அவற்றின் கூடிய [[முறிவுக் குணகம்]] காரணமாகக் கூடுதலாக ஒளிர்கின்றன. [[போரான்]] (boron) சேர்ப்பதன் மூலம் கண்ணாடிகளின் வெப்ப இயல்புகள், மின்னியல்புகள் என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். [[பைரெக்ஸ்]] (Pyrex) எனப்படும் கண்ணாடி இத்தகையது. [[பேரியம்|பேரியமும்]] கண்ணாடியின் முறிவுக் குணகத்தைக் கூட்டவல்லது. [[தோரியம் ஒட்சைட்டு]] கண்ணாடியின் முறிவுக் குணகத்தைக் கூட்டுவதுடன், [[ஒளிச் சிதறல்|ஒளிச் சிதறலையும்]] குறைப்பதால் முன்னர் தரமான கண்ணாடி வில்லைகளைச் செய்வதற்கு இதனைப் பயன்படுத்தினர். ஆனால் இச் சேர்வை கதிரியக்கம் கொண்டதால் தற்கால [[மூக்குக் கண்ணாடி]] வில்லைகளில் [[லந்தனம் ஒட்சைட்டு]] பயன்படுத்தப்படுகின்றது. அகச் சிவப்புக் கதிர்களை உறிஞ்சும் திறன் கொண்ட கண்ணாடிகளைச் செய்வதற்கு கண்ணாடிகளில் இரும்பு சேர்க்கப்படுகின்றது. [[செரியம்(IV) ஒட்சைட்டு]]ச் சேர்ப்பதன் மூலம் புறஊதாக் கதிர்களை உறிஞ்சக்கூடிய கண்ணாடிகள் செய்யப்படுகின்றன.
 
மேலே குறிப்பிடப்பட்ட வேதிப் பொருட்களைத் தவிர மீள்பயன்பாட்டுக் கண்ணாடிகளையும் மூலப் பொருட்களுடன் சேர்ப்பது உண்டு. இது மூலப் பொருட்களைச் சேமிக்க உதவுவது மட்டுமன்றி உலைகளில் ஆற்றலைச் சேமிப்பதற்கும் உதவியாக உள்ளது. ஆனால், இவற்றில் இருக்கக்கூடிய மாசுப் பொருட்கள் உற்பத்திப் பொருட்களின் தரத்தைக் குறைப்பதுடன், கருவிகள் பழுதுபடுவதற்கும் காரணமாக அமையக்கூடும். கண்ணாடியில் இருக்கக்கூடிய [[குமிழி]]களின் அளவைக் குறைப்பதற்கு [[சோடியம் சல்பேட்டு]], [[சோடியம் குளோரைடு]], [[அந்திமனி ஒட்சைட்டு]] என்பவை பயன்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கண்ணாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது