எசுப்பானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 71:
'''எசுப்பானியா''' என்றழைக்கப்படும் '''எசுப்பானியா இராச்சியம்''' [[ஐரோப்பா|ஐரோப்பா கண்டத்தின்]] தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள இறைமையுள்ள ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இதன் தலைநகரம் [[மாட்ரிட்]]. இந்நாட்டினரின் மொழி [[எசுப்பானிய மொழி]]. இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும். இந்நாட்டில் ஐரோப்பிய [[யூரோ]] [[நாணயம்]] பொதுப் பயன்பாட்டில் உள்ளது. [[பார்சிலோனா]] இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.
 
இதன் அமைவிடம் காரணமாக வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் இப்பகுதி பல வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு வந்துள்ளது. அரகானின் அரசர் [[அரகானின் இரண்டாம் பேர்டினன்ட்|இரண்டாம் பேர்டினன்டுக்கும்]], காசுட்டைலின் அரசி [[காசுட்டைலின் முதலாம் இசபெல்லா|முதலாம் இசபெல்லாவுக்கும்]] இடையே நடந்த திருமணத்தையும், 1492 ஆம் ஆண்டில் ஐபீரியத் தீவக்குறை மீளக் கைப்பற்றப்பட்டதையும் தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டில் எசுப்பானியா ஒரு ஒன்றிணைந்த நாடாக உருவானது. நவீன காலத்தில் இது ஒரு உலகப் பேரரசாக உருவாகி உலகின் பல பகுதிகளிலும் தனது செல்வாக்குப் பகுதிகளை உருவாக்கியது. இதனால், உலகில் [[எசுப்பானிய மொழியைப்மொழி]]யைப் பேசுபவர்களின் எண்ணிக்கை இன்று ஏறத்தாழ 500 மில்லியனாக உள்ளது.
 
எசுப்பானியா, [[அரசியல்சட்ட முடியாட்சியின்முடியாட்சி]]யின் கீழ் அமைந்ததும், நாடாளுமன்றை[[நாடாளுமன்ற முறையில்ஆட்சி முறை|நாடாளுமன்ற முறை]]யில் அமைந்ததுமான ஒரு [[குடியரசு]] நாடு. வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான எசுப்பானியா, [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] அளவின் அடிப்படையில் உலகின் 12 ஆவது பெரிய நாடாக விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, உலகின் 10 ஆவது கூடிய வாழ்க்கைத் தரக் குறியீட்டு எண்ணைக் கொண்ட இது உயர்ந்த வாழ்க்கைத் தரம் உடைய ஒரு நாடு. இது [[ஐக்கிய நாடுகள் சபை]], [[நேட்டோ]], [[பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு]], [[உலக வணிக அமைப்பு]] ஆகியவற்றினது உறுப்பு நாடாகவும் உள்ளது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/எசுப்பானியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது