எசுப்பானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 87:
 
ரோமானியர்கள் கிமு 2 ம் நூற்றாண்டில் இபேரியன் மூவலந்தீவிற்கு வந்தனர். இரண்டு நூற்றாண்டு காலம் செல்டிக் மற்றும் இபேரிய பழங்குடியினரிடம் போரிட்டு கடற்கரை வியாபார மையங்களை இணைத்து "இசுப்பானியா"வை உருவாக்கினர். ரோமானிய பேரரசிற்கு இசுப்பானியா [[உணவு]],ஆலிவ் எண்ணை,[[ஒயின்]] மற்றும் மாழைகளை (உலோகங்களை) அளித்து வந்தது. மத்தியகாலத் தொடக்கப் பகுதியில் இது செருமானிக்கு ஆட்சியின் கீழ் வந்தது எனினும் பின்னர் வட ஆப்பிரிக்காவிலிருந்து வந்த இசுலாமியர்கள் இப்பகுதியைக் கைப்பற்றிக்கொண்டனர். காலப்போக்கில் இதன் வடபகுதியில் பல சிறிய கிறித்தவ அரசுகள் தோன்றிப் படிப்படியாக எசுப்பானியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இதற்குப் பல நூற்றாண்டுக் காலம் எடுத்தது. கொலம்பசு அமெரிக்காவை அடைந்த அதே ஆண்டில் ஐபீரியத் தீவக்குறையில் இருந்த கடைசி இசுலாமிய அரசும் வீழ்ச்சியுற்றது. தொடர்ந்து எசுப்பானியாவை மையமாகக் கொண்டு உலகம் தழுவிய பேரரசு ஒன்று உருவானது. இதனால் எசுப்பானியா ஐரோப்பாவின் மிகவும் வலிமை பொருந்திய நாடாகவும், ஒன்றரை நூற்றாண்டுக் காலம் உலகின் முதன்மை வல்லரசுகளில் ஒன்றாக இருந்ததுடன் மூன்று நூற்றாண்டுக் காலம் உலகின் மிகப்பெரிய கடல்கடந்த பேரரசு ஆகவும் விளங்கியது.
 
தொடர்ச்சியான போர்களும், பிற பிரச்சினைகளும் எசுப்பானியாவை ஒரு தாழ்வான நிலைக்கு இட்டுச் சென்றது. எசுப்பானியாவை நெப்போலியன் கைப்பற்றியது பெரும் குழப்பநிலையை ஏற்படுத்திற்று. இது, விடுதலை இயக்கங்களைத் தோற்றுவித்துப் பேரரசைப் பல துண்டுகளாகப் பிரித்ததுடன், நாட்டிலும் அரசியல் உறுதியின்மையை உண்டாக்கியது.
 
எசுப்பானியா நாட்டின் தற்போதைய [[மொழி]]கள், [[மதம்]], சட்ட அமைப்பு போன்றவை ரோமானிய ஆட்சிக்காலத்திலிருந்து உருவானவை. ரோமானியர்களின் நூற்றாண்டுகள் நீண்ட இடையூறற்ற ஆட்சிக்காலம் இன்னும் எசுப்பானியா நாட்டின் பண்பாட்டில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/எசுப்பானியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது