வைக்கம் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
இப்போராட்டத்திற்காக, ஸ்ரீ நாராயண குருவின் சன்னியாசி சீடர்கள் அனைவரும் வீடுவீடாகச் சென்று உண்டியல் ஏந்திப் பணம் சேகரித்துப் போராட்டக்காரர்களுக்கு அனுப்பினர். அத்துடன் ஒவ்வொரு வீட்டினரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கும் முன்பு பெண்கள் ஒரு கைப்பிடி அளவு அரிசியைத் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். இப்படி சேகரிக்கப்படும் அரிசி போராட்டக்காரர்களின் உணவுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
 
இந்த அறவழிப் போராட்டம் தொடர் போராட்டமாக ஆறு மாத காலம்தொடர்ந்து நடந்தது. முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் சமாதானம் ஏற்பட வாய்ப்பு கிட்டுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணம் படைத்தவர்கள் காவல்துறையினர் உதவியுடன் சில வன்முறையாளர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை அடித்துத் துன்புறுத்தினர். இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அறவழியிலேயே போராடிக் கொண்டிருந்தனர்.
 
இப்போராட்டச் செய்திகள் அனைத்துப் பத்திரிகைகளிலும் முக்கியச் செய்தியாக வெளியானது. எனவே இந்தப் போராட்டம் குறித்த செய்தி இந்தியா முழுவதும் பரவியது. இதன் பிறகு காங்கிரசு இயக்கத் தலைவர்கள் கேரள மாநிலத்திற்குச் செல்லத் தொடங்கினர். [[இராஜாஜி|இராஜகோபாலாச்சாரி]], டாக்டர் வரதராஜூலு நாயுடு, [[ஈ. வே. ராமசாமி| ஈ. வே. ராமசாமி நாயக்கர்]], அய்யாமுத்துக் கவுண்டர், சுவாமி சர்தானந்தி, எம். பெருமாள் நாயுடு ஆகியோர் கேரளாவிற்குச் சென்றனர்.
 
கேரள மாநிலத்திற்குச் சென்ற காங்கிரசு பேரியக்கத் தலைவர்களில் ஈ. வே. ராமசாமி நாயக்கர் பேச்சு கேரள மக்களை அதிகமாகக் கவர்ந்தது. இதனால் அங்கிருந்த காவல்துறையினரால் ஈ. வே. ராமசாமி நாயக்கர் [[1924]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 22]] அன்று கைது செய்யப்பட்டார். அப்போதைய அரசர் உத்தரவின்படி ஒரு மாத கால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. இதன்படி அவர் அருவிக்குத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வைக்கம்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது