அகஸ்டின் ஜெபக்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prayani (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox Biography | subject_name = தே. அகஸ்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:41, 28 மே 2012 இல் நிலவும் திருத்தம்


தே. அகஸ்டின் ஜெபக்குமார் (ஆகஸ்ட் 20, 1947) (சாயர்புரம், தமிழ்நாடு) ஜெம்ஸ் நிறுவனத்தின் அமைப்பாளரும் இந்தியாவின் முன்னனி கிறிஸ்தவ மறைபரப்புனருமாவார். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்தியாவிலும், உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கிறிஸ்தவ மதபிரசாரம் செய்பவர்.

தே. அகஸ்டின் ஜெபக்குமார்
பிறப்பு (1947-08-20)ஆகத்து 20, 1947
இந்தியா சாயர்புரம், தமிழ்நாடு
பணி கிறித்தவ மறைபரப்புனர்
துணை திருமதி.ரூபலேகா

குழந்தைப்பருவம்

தேவபிச்சை, ஜாய் பிளாரினாள் தம்பதிகளுக்கு ஒரே ஆண் மகனாக தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அகஸ்டின் ஜெபக்குமார் பிறந்தார். இவரது தந்தை ஒரு ராணுவ வீரராக இருந்து தபால் துறையில் பணியாற்றியவர் ஆவர், தாய் ஜாய் அவர்கள் ஆசிரியையாக இருந்தார்.

இயேசுவை ஏற்றல்

பெற்றோரின் வளர்ப்பினாலும் கண்டிப்பினாலும் கிறிஸ்தவராய் இருந்த போதிலும், கிறிஸ்தவ சபைகளின் ஜெபக்கூட்டங்களிலும் ஆலயங்களிலும் கலந்து கொண்டவராய் இருப்பினும் வாலிபராயிருந்தபோது உள்ளத்தில் ஒரு வெறுமையே நிறைந்து காணப்பட்டது. தனது 21 வது வயதில், தனது அறையில் சமாதானம் இல்லாத நிலையில் முழங்காற்படியிட்டு இயேசுவை வணங்கத் தொடங்கினார். அந்த நாளிலே இயேசுவின் சிலுவையில் அறையப்பட்ட காட்சியைக் கண்டு அவருக்கு தனது வாழ்க்கையை முழுமையாக ஒப்புக் கொடுத்தார். அவருடைய வாழ்க்கை அதன் பின்பு முற்றிலுமாக மாற்றப்பட்டது.

கிறஸ்தவ இறைப்பணியில்

ENGLISH ELECTRIC CO என்ற நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, மிசனேரிகளின் கல்லறை என்று அழைக்கப்படும் பீகார் மாநிலத்திற்கு சென்று தனது இறைவனின் அழைப்பிற்கு ஒப்புக்கொடுத்து அக்டோபர் 19 ம் நாள் 1972 ம் ஆண்டு முதல் இன்று வரை இறைப் பணியில் மட்டும் அல்லாமால் அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் பல சமுதாயப் பணிகளையும் செய்து வருகின்றார்.

வெளி இணைப்புகள்

  • [1]
  • நீ இல்லாவிடில் - அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் வாழ்கை சரித புத்தகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகஸ்டின்_ஜெபக்குமார்&oldid=1121811" இலிருந்து மீள்விக்கப்பட்டது