விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 229:
* International என்பதற்கு அனைத்துலக என்பதுதான் சரி என்று படுகின்றது. நானும் பல இடங்களில் பன்னாட்டு என்றே பயன்படுத்தி இருக்கின்றேன். --[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:சஞ்சீவி சிவகுமார்|பேச்சு]]) 04:18, 29 மே 2012 (UTC)
 
:தமிழ் விக்கிப்பீடியாவின் தன்னாட்சிக்கும் இதற்கும் தொடர்பில்லை. இந்தக் குழப்பம் விக்கிப்பீடியாவுக்கு வெளியேயும் உண்டு. எடுத்துக்காட்டுக்கு, பார்க்க: [https://www.google.com/search?q=%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D பன்னாட்டு விமான நிலையம் குறித்த கூகுள் தேடல் முடிவுகள்]. ''சர்வதேசம்'' புறமொழிச் சொல் என்பதால் விட்டு விடுவோம். ''Multinational, international'' ஆகிய இரு சொற்களுக்கு இடையேயான தெளிவு தேவைப்படுகிறது என்றாலும், இரண்டும் பல இடங்களில் மாற்றி மாற்றிப் பயன்படுவதைக் காணலாம். ''International one day match'' என்று சொன்னாலும் அங்கு ஒரு சில நாடுகளே விளையாடுகின்றன. எனவே, ''பன்னாட்டு ஒரு நாள் கிரிக்கெட்டுப் போட்டி'' என்று சொன்னாலும் தவறாகத் தெரியவில்லை. பன்னாட்டு விமான நிலையங்களுக்கும் இது பொருந்தும். எனவே, ஆங்கிலச் சொல்லுக்கு நேர் மொழிபெயர்ப்பு வேண்டும் என்று கருதாமல் தமிழில் சொல்லும் போது பொருள் மாறாமல் இருக்கிறதா என்று மட்டும் பார்க்கலாம். அப்படியே ''international'' என்பதற்கு சரியான, நேரடித் தமிழாக்கம் ''நாடுகளிடை, நாட்டிடை'' என்பது போன்றே அமையும். ''சர்வதேசம்'' புறமொழிச் சொல் என்பதை விடுத்துப் பார்த்தாலும் இந்த நேரடிப் பொருளைத் தருவதில்லை. World, Global என்று வரும் இடங்களில் ''உலக, உலகளாவிய, அனைத்துலக'' என்பது போன்ற சொல்லாட்சிகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டு, [[உலக சுகாதார அமைப்பு]]--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:47, 29 மே 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:கலைச்சொல்_ஒத்தாசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது