ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
== ஆய்வுகள் ==
1877-ல் 'அன்னபோலிஸ்' என்ற இடத்தில் இருந்தபோது வகுப்பில் அறிவியல் ஆய்வு ஒன்றினைச் செய்துகொண்டிருந்தபோது அதன் ஒரு பகுதியாக [[ஒளி]]யின் வேகத்தைக் கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டார். 1867-ல் [[பிரெஞ்சு]] நாட்டைச் சேர்ந்த [[வானவியல்|வானியலறிஞர்]] 'அர்மெண்ட் பிசியூ' [[விண்மீன்]]களின் அளவை அளவிடக் ''குறுக்கீட்டு மானி'' ஒன்றைப் பயன்படுத்த முயன்றார். ஆனால் மைக்கல்சனோ 1887-ல் தொடங்கி பல ஆய்வுகளில் ஈடுபட்டுப் பல [[ஆடி]]களையும் ஒளி ஓரளவு ஊடுருவும் [[கண்ணாடி]]களையும் பயன்படுத்தி ஒரே மூலத்திலிருந்து வெளிவரும் தனித்தனி [[ஒளிக்கதிர்]]களை ஒன்றாக இணைப்பதற்கு ஒரு முறையை உருவாக்கினார். குறுக்கிடும் பல ஒளிக்கதிர்களை ஒருங்கிணைக்க அவை கடந்துவரும் [[தூரம்]], [[திசை]], இவைகளைப் பொருத்தவகையில் அமையுமாறு ஒரு ''குறுக்கீட்டு மானி'' ஒன்றை அமைத்தார். இந்த [[அண்டம்]] முழுவதும் திரவ [[வாயு]] நிலைக்கு இடைப்பட்ட ''ஈதர்'' என்ற கண்ணுக்குப் புலனாகாத ஊடகம் விரவியுள்ளதாக அறிவியலறிஞர்கள் கருதினர். இதன் வழியாகத்தான் [[ஒளி]] ஊடுருவிச் செல்வதாகவும் கூறினர். மைக்கல்சன், ''மார்லி'' என்பவரோடு இணைந்து L வடிவக் கருவி ஒன்றை இரண்டாகப் பிரித்து, ஒரே நீளமுள்ள வெவ்வேறு செங்குத்தான பாதைகளில் செலுத்தினார். பிறகு அவற்றை மீண்டும் ஒன்றாக இணைத்தார். ஈதர் என்ற ஊடகம் இருந்திருந்தால் அங்கங்கே அவற்றின் [[அடர்த்தி]]களுக்கேற்ப செங்குத்தான பாதைகளில் சென்று திரும்பிய ஒளிக்கதிர்கள் மீண்டும் இணையும்போது சிறிதளவு நேர மாறுபாடு இருந்திருக்கும்,. ஆனால் அவ்வாறு ஏற்படவில்லை என்பது இவர்களின் ஆய்விலிருந்து தெரியவந்தது. அவ்வாறு ஏற்படாததால் ''ஈதர்'' என்ற ஊடகம் எல்லா இடத்திலும் இல்லை என்று நிரூபித்தனர். இந்த ஆய்வு "மைக்கல்சன்-மார்லி ஆய்வு" என்று புகழ் பெற்றது.
== ஒளியின் திசை வேகம் ==
மக்கல்சனுக்கு முன்னால் பல அறிவியலறிஞர்கள் ஒளியின் திசைவேகத்தைக் கண்டறிவதில் ஈடுபட்டிருந்ததனர். ஆனால் அவர்கள் கண்டறிந்த அளவுகள் துல்லியமாக அமையவில்லை. மிகக்குறைந்த செலவில் வெறும் ஆடிகளை வைத்தே தனது ஆய்வினை மேற்கொண்ட மைக்கல்சன் ஒளியின் திசைவேகத்தைத் துல்லியமாகக் கண்டறிவதில் 1878-ல் வெற்றிபெற்றார்.
 
தன்னுடைய ஆய்வுகளை மீண்டும் மீண்டும் பலமுறை செய்து பார்த்தார். 1920-ல் ''வில்சன்'', ''சான் ஆன்டோனியா'' என்ற 22 மைகளுக்கிடையேயான இரு குன்றுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் முற்றிலும் புதியதாக வடைவமைக்கப்பட்ட ஆடி அமைப்புகளை அமைத்து ஒளியின் திசைவேகட்தை மிகவும் துல்லியமாகக் கண்டறிந்தார். இவருடைய குறுக்கீட்டு மானியின் உதவியால் ஆல்பா ஆரியனிஸ் என்ற வின்மீண் விட்டத்ஹ்டை அளந்துகாட்டினார்.
 
 
== சிறப்புகள்
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ஆபிரகாம்_மைக்கல்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது