ம. ச. சுப்புலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
 
== திருமணம் ==
''சகுந்தலை'' படத்தைத் தயாரித்தவர் டி.[[கல்கி சதாசிவம்]] ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரதும் இணைப்பால் இசை உலகு நன்மையடைந்தது. 1941ம் ஆண்டு ''சாவித்திரி'' என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆனால் ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து விட்டார். அப்போது எழுத்தாளர் [[கல்கி]]யும் ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி இருந்தார். கல்கியும் சதாசிவமும் சேர்ந்து சொந்தப்பத்திரிகை ஆரம்பிக்க விருப்பம் கொண்டனர். ஆனால் கைவசம் பணம் இருக்கவில்லை. ஆதலால் சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு புதுப்பத்திரிகை ஆரம்பிக்கலாம் என சதாசிவம் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் சொன்னார். அதற்காகவே சுப்புலட்சுமி ''சாவித்திரி'' படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகையில் கல்கி வாரஇதழ் தொடங்கப்பட்டது. ''சாவித்திரி'' படத்தில் ''"மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப் பதமே"'', ''"மங்களமும்பெறுவாய்"'' போன்ற சில பாடல்கள் புகழ் பெற்றவை.
 
[[படிமம்:Ms subbulakshmi.jpg|left|150px|thumb|மீரா திரைப்படத்தில் சுப்புலட்சுமி]]
 
== மீரா திரைப்படத்தின் வரவேற்பும், சமூக சேவைகளும் ==
சதாசிவம் இசைப்பிரியன் மாத்திரமல்ல, இசை கற்றவருங்கூட. அதனால் மனைவியின் இசையை பக்தி மார்க்கத்துக்குத் திருப்ப முயன்றார். [[மீரா (திரைப்படம்)|பக்த மீரா]] எனும் திரைப்படம் [[1945]] இல் வெளியிடப்பட்டது. இப்படம் அற்புதமான பாடல்கள் நிறைந்தது. ''"காற்றினிலே வரும் கீதம்"'', ''"பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த"'', ''"கிரிதர கோபாலா"'', ''"எனது உள்ளமே"'' போன்ற பாடல்கள் இன்னமும் அனைவரது செவிகளிலும் ஒலிக்கின்றன. பக்த மீரா [[இந்தி]] மொழியில் தயாரிக்கப்பட்டு, வட நாட்டவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர் [[மவுண்ட்பேட்டன் பிரபு]] தம்பதியினர், பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]], கவியரசு [[சரோஜினி நாயுடு]] ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு ''"இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே"'' எனப் பாராட்டினார்.
"https://ta.wikipedia.org/wiki/ம._ச._சுப்புலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது