திருவோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கி மாற்றல்: ko:이콘
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: be:Ікона; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:The Ladder of Divine Ascent.jpg|thumb|right|240px|''விண்ணக இயேசுவிடம் இட்டுச்செல்கின்ற ஏணி'' என்னும் திருவோவியம். காலம்: கிபி 12ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: புனித காதரின் துறவியர் இல்லம், சீனாய் மலை.]]
 
[[Fileபடிமம்:Trinity tikhon filatiev.jpg|right|thumb|மூவொரு கடவுளைச் சித்தரிக்கும் உருசிய திருவோவியம்.]]
 
'''திருவோவியம்''' (''Icon'') என்பது சமயம் சார்ந்த, குறிப்பாகக் [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயம் சார்ந்த கீழைத் திருச்சபையிலும் கீழைக் கத்தோலிக்க திருச்சபையிலும் வழக்கத்திலிருக்கும் திருவுருவப் படத்தைக் குறிக்கும். [[கிரேக்கம்|கிரேக்க]] மூல மொழியில் இது eikōn (εἰκών) என அழைக்கப்படுகிறது. அதற்கு "சாயல்", "உருவம்", "படிமம்" என்பது பொருளாகும்.
 
== திருவோவியங்களின் சமயப் பின்னணி ==
உலகில் உள்ள பல சமயங்களில் கடவுளரையும் சமயம் தொடர்பான பொருள்களையும் சாயலாகவும் உருவமாகவும் படைப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.<ref>''The Meaning of Icons'', by Vladimir Lossky with Léonid Ouspensky, SVS Press, 1999. (ISBN 0-913836-99-0)</ref> மக்களின் உள்ளத்தில் பக்தியைத் தூண்டி எழுப்பவும், கடவுளருக்கு வழிபாடு நிகழ்த்த கருவியாக அமையவும், அலங்காரப் பொருளாகவும் இரு பரிமாணத் திருவோவியங்களும் முப்பரிமாணத் திருச்சிலைகளும் உருவாக்கப்பட்டன.
 
== கிறித்தவ கீழைத் திருச்சபைகளில் திருவோவிய மரபு ==
[[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிறித்தவ கீழைத் திருச்சபை]]த் திருவோவியங்கள் பெரும்பாலும் மூவொரு கடவுள், [[இயேசு]], [[மரியா (இயேசுவின் தாய்)|அன்னை மரியா]], [[புனிதர்]]கள், [[வானதூதர்]]கள், [[திருச்சிலுவை]] போன்ற பொருள்களைச் சித்தரித்தன. அவை பொதுவாகத் தட்டையான மரப் பலகையில் எழுதப்பட்டன. சில சமயங்களில் உலோகம், கல், துணி, தாள் போன்றவற்றிலும் பதிக்கப்பட்டன. கற்பதிகை முறையில் அமைந்த திருவோவியங்களும் உண்டு.
 
முப்பரிமாணத்தில் கல், பளிங்கு, உலோகம் போன்றவற்றில் திருச்சிலைகள் செய்வது பண்டைய கிறித்தவ வழக்கில் இல்லை. உருவமற்ற கடவுளுக்கு மனிதர் உருவம் கொடுத்தல் ஆகாது என்னும் [[யூதர்|யூத]] மரபைப் பின்பற்றி, கடவுளுக்குக் கைகளால் சிலைகளை உருவாக்கலாகாது என்னும் எண்ணம் அக்காலத்தில் நிலவியது. தம்மைச் சூழ்ந்திருந்த கிரேக்க-உரோமைய சமயங்களிலிருந்து தங்கள் சமயத்தை வேறுபடுத்திக் காட்டவும் கிறித்தவர் இவ்வாறு செய்தனர்.
 
== கிறித்தவ ஓவியம் தோன்றல் ==
[[Imageபடிமம்:St. Theodor.jpg|thumb|200px|புனித தியடோர். அரிய நிறக்கல் திருவோவியம். காலம்: கிபி 900. காப்பிடம்: ப்ரெஸ்லாவ், புல்கேரியா.]]
"கிறித்தவக்" கலை பற்றிய முதல் குறிப்புகள் பண்டைய கிறித்தவ அறிஞர்களான தெர்த்தூல்லியன் (கிபி சுமார் 160-220), அலெக்சாந்திரியா கிளமெண்ட் (கிபி சுமார் 150-212) ஆகியோரின் நூல்களிள் காணக்கிடக்கின்றன. கிறித்தவ [[நற்கருணை|நற்கருணைக்]] கொண்டாட்டத்தின் போது பயன்படுத்திய கிண்ணத்தில் "நல்ல ஆயர்" உருவம் இயேசுவின் அடையாளமாக வரையப்பட்டதைத் தெர்த்தூல்லியன் குறிப்பிடுகிறார்.<ref>Tertullian, ''On Modesty," 7:1-4</ref> கிரேக்க சமய-கலாச்சார வழக்கப்படி, [[ஹெர்மீஸ்]] என்னும் கடவுளை "ஆட்டைச் சுமக்கும் ஆயராக" சித்தரிப்பது வழக்கம்.
 
வரிசை 21:
மேலே குறிப்பிட்ட எல்லா அடையாளங்களும் புற சமயமாகிய கிரேக்க-உரோமைச் சமயத்தில் வழக்கத்தில் இருந்தவை. [[கிறித்தவம்]] அந்த அடையாளங்களில் சிலவற்றை ஏற்றுத் தன் கொள்கைக்கு ஏற்பத் தழுவியமைத்துக் கொண்டது. [[ஹெர்மீஸ்]] என்னும் கிரேக்க கடவுளின் அடையாளமாகிய "நல்ல ஆயர்" (''ஆடு சுமப்பவர்'') உருவகம் [[இயேசு|இயேசுவுக்குப்]] பொருத்தி உரைக்கப்பட்டது
 
== திருவோவிய வரலாறு ==
 
திருவோவியத்தைக் குறிக்கின்ற eikōn என்னும் கிரேக்கச் சொல் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] சாயல், உருவம் என்னும் பொருளில் வந்தாலும், "நிறங்களால் எழுதப்படும் ஓவியம்" என்னும் பொருளில் வரவில்லை. உரோமையில் தொமித்தில்லா, கலிஸ்டஸ் ஆகிய சுரங்கக் கல்லறைகளில் பல நிறங்களில் எழுதப்பட்ட பண்டைய ஓவியங்கள் இன்றும் உள்ளன.
வரிசை 28:
 
பண்டைய கிறித்தவ அறிஞர் இரனேயஸ் (கிபி சுமார் 130-202), [[ஞானக் கொள்கை|ஞானக் கொள்கையினர்]] என்போர் [[இயேசு|இயேசுவுக்குக்]] கொலைத் தண்டனை விதித்த பிலாத்து [[இயேசு|இயேசுவின்]] சாயலை வரைந்ததாகவும், அவர்கள் அச்சாயலோடு கிரேக்க அறிஞர்களான [[பித்தாகரஸ்]], [[பிளேட்டோ]], [[அரிஸ்டாட்டில்]] போன்றோரின் படங்களையும் வணங்கியதாகக் கூறியதாகவும் இகழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார்.<ref>St. Irenaeus, ''On the Detection and Overthrow of the So-Called Gnosis'' 1:25;6</ref>
[[Imageபடிமம்:Ushakov Nerukotvorniy.jpg|thumb|left|200px|''மீட்பர் இயேசுவின் திருவோவியம்.'' - "கையால் செய்யப்படாத சாயல்" - மரபுவழி திருச்சபைப் பாணி. எழுதியவர்: சீமோன் உஷாக்கோவ். காலம்: 1658.]]
 
பிலாத்து [[இயேசு|இயேசுவின்]] உருவத்தை ஓவியமாக வரைந்தார் என்னும் கதை தவிர, வேறொரு நிகழ்ச்சியை நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த செசரியா நகர் யூசேபியஸ் என்னும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எதேஸ்ஸா நகர் அரசர் ஆப்கார் (King Abgar of Edessa), நோய்வாய்ப்பட்ட தம் மகனைக் குணப்படுத்த [[இயேசு]] வரவேண்டும் என்று கேட்டு மடல் அனுப்பினாராம். இக்கதையில் இயேசுவின் உருவச் சாயல் குறிப்பிடப்படவில்லை. ஆனால் "ஆதாய் கொள்கை" (''Doctrine of Addai'') என்னும் சிரிய மொழி ஏட்டில் இயேசுவின் திருவுருவச் சாயல் குறிப்பிடப்படுகிறது. சிறிது பிற்பட்ட காலத்தில் எவாக்ரியுஸ் (''Evagrius'') என்பவர் தரும் குறிப்பின்படி, இயேசு [[சிலுவை]] சுமந்து சென்றவேளை தம் முகத்தை ஒரு துணியால் துடைத்தபோது அத்துணியில் அவருடைய சாயல் பதிந்த வரலாறு வருகிறது.<ref>''Veronica and her Cloth'', Kuryluk, Ewa, Basil Blackwell, Cambridge, 1991</ref>இயேசுவின் சாயல் அதிசயமாகப் பதிந்த அத்துணி எதேஸ்ஸா நகரில் 10ஆம் நூற்றாண்டுவரை இருந்ததாகவும், பின் [[காண்ஸ்டாண்டிநோபுள்|காண்ஸ்டாண்டிநோபுளுக்குச்]] சென்றதாகவும், 1204இல் [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர் வீரர்கள்]] காண்ஸ்டாண்டிநோபுளைத் தாக்கியபோது அத்துணி காணாமற்போனதாகவும், அச்சாயலின் பிரதிகள் பல உருவாக்கப்பட்டதாகவும் வரலாறு எழுந்தது.
 
மேலும், யூசேபியஸ் "திருச்சபை வரலாறு" என்னும் தம் நூலில், [[இயேசு]], [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]], [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] ஆகியோரின் ஓவியங்களைப் பார்த்ததாகவும், செசரியாவில் பான் (''Pan'') என்னும் கிரேக்க கடவுளின் வெண்கலச் சிலை இருந்ததாகவும், சிலர் அச்சிலை இயேசுவின் சாயல் என்று கூறியதாகவும் எழுதுகிறார். பான் சிலைத் தொகுதியில் இரட்டைப் போர்வை அணிந்த ஒருவர் நின்றுகொண்டு தம் கைகளை நீட்டிய நிலையில் இருந்தார் எனவும் அவர்முன் ஒரு பெண் முழந்தாட்படியிட்டு இருந்ததாகவும் அப்பெண்ணே [[லூக்கா|லூக்கா நற்செய்தியில்]] (லூக் 8:43-48) வருகின்ற நோய்வாய்ப்பட்ட பெண் என்று மக்கள் கருதுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.<ref>Eusebius of Caesarea, ''Church History'' 7:18</ref>
 
ஒருசில அறிஞர் கருத்துப்படி, மேற்கூறிய ஓவியம் அடையாளம் தெரியாத ஒரு கிரேக்கக் கடவுளின் சாயலாக இருக்கலாம். அல்லது அது கிரேக்க கலாச்சாரத்தில் "நலம் கொணரும் கடவுள்" என்று அறியப்பட்ட "எஸ்குலாப்பியுஸ்" (Aesculapius) என்பவரின் உருவாக இருக்கலாம். மன்னன் ஹேட்ரியன் காலத்தில் வெளியான நாணயங்களில் தாடியோடு ஹேட்ரியன் மன்னன் இருக்கிறார். அவருக்கு முன்னிலையில் ஒரு பெண் முழந்தாட்படியிட்டு நிற்கிறார். ஒரு குறிப்பிட்ட மாநிலம் அரசனுக்குப் பணிந்து வணக்கம் செலுத்தும் பொருளில் அந்த நாணய உருவம் உள்ளது.
வரிசை 38:
இந்தப் பின்னணியில் மேலே கூறிய ஓவியத்தைப் புரிந்துகொள்ளலாம்.
 
== காண்ஸ்டண்டைன் மன்னன் காலம் ==
 
கிபி 313இல் உரோமைப் பேரரசன் [[காண்ஸ்டண்டைன்]] கிறித்தவ சமயத்தைச் சட்டப்பூர்வமாக [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசில்]] கடைப்பிடிக்கலாம் என்று ஓர் அறிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து மிகப் பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்களாக மாறினர். இதன் விளைவாக, மக்கள் முன்னாட்களில் வணங்கிவந்த கடவுளரை விட்டுவிட்டு, கிறித்தவ முறைப்படி வணங்கலாயினர்.
 
கிபி ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பலர் தம் சொந்த வீடுகளில் புனிதர்களின் திருவோவியங்களை வைத்து வணக்கம் செலுத்தினர். கிபி 480-500 அளவில் புனிதர்களின் திருத்தலங்களில் நேர்ச்சைத் திருவோவியங்கள் இடம் பெறலாயின.<ref>Fox, ''Pagans and Christians'', [[Alfred A. Knopf]], New York, 1989).</ref>
 
மன்னர் [[காண்ஸ்டண்டைன்]] கிறித்தவ மதத்தைத் தழுவிய காலத்தில் பெருமளவிலான குடிமக்கள் இன்னும் பண்டைய கிரேக்க-உரோமை சமயங்களையே கடைப்பிடித்தனர். அரசர் தெய்விக நிலைக்கு உயர்த்தப்பட்டார். அவருடைய உருவம் அல்லது சாயலுக்கு முன் விளக்குகளை ஏற்றி, அவருக்குத் தூபம் இடுவது வழக்கமாக இருந்தது. இத்தகைய அரசர் வழிபாடு கிறித்தவர் நடுவே சிறிது காலமாவது ஏற்கப்பட்டது. அதை ஒரேயடியாக ஒழிப்பதாக இருந்தால் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும்.
வரிசை 50:
[[காண்ஸ்டாண்டிநோபுள்]] நகரை உருவாக்கிய [[காண்ஸ்டண்டைன்]] பேரரசருக்கு கிபி 425 அளவில் மக்கள் அரச வழிபாடு செலுத்தியது சிலை வழிபாட்டுக்குச் சமம் என்று குற்றம் சாட்டினார் ஃபிலோஸ்டோர்கியுஸ் என்பவர்.[[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவுக்கு]] இதே முறையில் விளக்கேற்றி, தூபம் செலுத்தி வழிபடும் முறை மக்களிடையே பரவியதற்கு இன்னும் நூறாண்டுகள் தேவைப்பட்டன. விண்ணகத்துக்கும் மண்ணகத்துக்கும் அரசராகிய [[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவுக்கு]] அரச வழிபாடும் தெய்வ வழிபாடும் செலுத்துகின்ற பழக்கம் பரவலாயிற்று<ref>Dom Gregory Dix, The Shape of the Liturgy (New York: Seabury Press, 1945) 413-414.</ref>
 
== காண்ஸ்டண்டைன் மன்னன் காலத்திற்குப் பிறகு ==
[[Imageபடிமம்:Menas.jpg|thumb|250px|இயேசு கிறித்துவும் புனித மேனாசும். எகிப்திலிருந்து வந்த கோப்து திருச்சபையின் திருவோவியம். காலம்: கிபி 6ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: லூவெர் காட்சியகம், பிரான்சு]]
 
[[காண்ஸ்டண்டைன்]] மன்னன் காலத்திற்குப் பிறகு, மன்னன் முதலாம் தியோடோசியுஸ் ஆட்சியின் போது [[கிறித்தவம்]] [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] அதிகாரப்பூர்வமான ஒரே சமயமாக அறிவிக்கப்பட்டது. எனவே, கிறித்தவக் கலை விரைவாக வளர்ந்ததோடு, தனக்கென்று ஒரு பாணியையும் வகுத்துக்கொண்டது.
வரிசை 61:
திருவோவியங்கள் உயிர்த்துடிப்புள்ளவையாக உருவாக்கப்பட்டன. கிரேக்க-உரோமைக் கடவுளரின் உருவங்கள் சிலை வழிபாட்டுக்கு இட்டுச் சென்றன என்று முன்னாட்களில் குறைகூறப்பட்டதைத் தொடர்ந்து, கிறித்தவர் பெரும்பாலும், குறிப்பாக கீழைத் திருச்சபையினர், புனிதர்களுக்குச் சிலைகள் செய்யவில்லை.
 
== ஓவியத்திலிருந்து ஆளை அடையாளம் காணுதல் ==
 
சீனாய் நகர நீலுஸ் (Nilus of Sinai) என்பவர் ஒரு புதுமையைக் குறிப்பிடுகிறார். ஆங்கிரா நகர் புனித பிளேட்டோ (St. Plato of Ankyra) ஒரு கிறித்தவ பக்தருக்குக் கனவில் தோன்றினார். கனவில் தோன்றியது யார் என்று தெரியாததால் அந்த பக்தர் குழம்பிக்கொண்டிருந்தார். பிறகுதான், தான் ஏற்கெனவே பார்த்திருந்த ஒரு திருவோவியத்தில் கண்ட அதே முகம் கனவில் தோன்றியவருக்கும் இருந்ததைக் கொண்டு, கனவில் வந்தது ஆங்கிரா நகர் புனித பிளேட்டோ தான் என்று தெரிந்துகொண்டார்.
வரிசை 69:
இன்னொரு பக்தருக்கு புனித தெமேத்ரியுஸ் (Saint Demetrius) காட்சியளித்தாராம். அப்புனிதரைச் சித்தரித்த பல திருவோவியங்கள் இருந்தன. அவற்றுள் அதிகப் பழமையான ஓவியத்தில் கண்ட முகமே கனவில் தோன்றியவரின் முகம் என்று அந்த பக்தர் கூறினாராம். அந்த 7ஆம் நூற்றாண்டு கற்பதிகை ஓவியம் இன்றும் புனித தெமேத்ரியுஸ் (''Hagios Demetrios'') கோவிலில் உள்ளது.
 
மற்றுமொரு நிகழ்ச்சியில், ஆப்பிரிக்க ஆயர் ஒருவர் அரபு நாட்டவரால் அடிமையாக விற்கப்பட்டு, பின்னர் தெமேத்ரியுஸ் என்னும் ஓர் இளம் போர்வீரரால் மீட்கப்பட்டார். தான் பிறந்த இடமாகிய தெசலோனிக்கா செல்லுமாறு அந்த இளைஞர் ஆயரிடம் கூறினார். ஆயர் தெசலோனிக்கா சென்று தெமேத்ரியுஸ் யார் என்று விசாரித்தபோது அந்நகரில் ஏறக்குறைய எல்லாப் போர்வீரர்களுமே "தெமேத்ரியுஸ்" என்னும் பெயர் கொண்டிருந்ததைக் கண்டு மலைத்துப் போனார். ஏமாற்றத்துடன் அந்த ஆயர் நகரிலிருந்த மிகப் பெரிய கோவிலுக்குள் நுழைந்தார். அங்கே ஓர் அதிசயம் அவருக்காகக் காத்திருந்தது. கோவில் சுவர் ஒன்றில் தொங்கிய ஒரு திருவோவியம் ஆயரின் கவனத்தை ஈர்த்தது. அருகே சென்று பார்த்தபோது அந்தத் திருவோவியத்தில் கண்ட அதே முகம் கொண்ட இளைஞர் தான் தன்னை அடிமைத்தனத்திலிருந்து மீட்டார் என்றும் அவர் ஒரு பெரிய புனிதர் என்றும் ஆயர் கண்டுகொண்டார்<ref name="RC">Robin Cormack, "Writing in Gold, Byzantine Society and its Icons", 1985, George Philip, London, ISBN 0540010850-540-01085-5</ref>
 
[[Imageபடிமம்:Spas vsederzhitel sinay.jpg|thumb|left|[[இயேசு கிறித்து]] "எல்லாம் வல்ல ஆண்டராக" சித்தரிக்கப்பட்ட மிகப் பழமையான திருவோவியம். தேன்மெழுகுக் கலைப்பாணி. [[இயேசு]] கடவுளும் மனிதருமாக உள்ளார் எனக் காட்ட முகத்தின் இரு பக்கங்களிலும் வேறுபாடு. காலம்: சுமார் 6ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: புனித காதரின் துறவற இல்லம், சீனாய் மலை.]]
 
சமயம் சார்ந்த திருவோவியங்களும், அரசரின் ஓவியமும், புரவலர்களின் ஓவியங்களும் தவிர வேறு மனித சாயலைக் காட்டும் ஓவியங்கள் வரையப்படலாகாது என்னும் ஒழுங்கு அக்காலத்தில் நிலவியது.
 
== புனித லூக்கா எழுதிய அன்னை மரியா ஓவியம் ==
[[Imageபடிமம்:Vladimirskaya.jpg|thumb|left|[[லூக்கா (நற்செய்தியாளர்)|புனித லூக்கா]] வரைந்ததாகக் கருதப்படும் விளாடிமீர் நகர மரியா திருவோவியம்]]
இயேசுவின் வாழ்க்கையையும் போதனையையும் எடுத்துரைக்கின்ற நான்கு [[நற்செய்தி]] நூல்களுள் ஒன்றின் ஆசிரியர் [[லூக்கா நற்செய்தி|புனித லூக்கா]]. அவரே [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] என்னும் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூலுக்கும் ஆசிரியர். இவர் திருத்தூதராகிய [[பவுல் (திருத்தூதர்)|புனித பவுலின்]] உடனுழைப்பாளராகச் சென்று நற்செய்தி பரப்பினார். தம் நற்செய்தி நூலில் [[மரியா (இயேசுவின் தாய்)|அன்னை மரியாவைப்]] பற்றி இவர் பல தகவல்களைத் தருகின்றார்.
 
வரிசை 91:
இருப்பினும், அறிஞர் குவார்தூச்சி இன்னொரு தகவலைத் தருகிறார். அதாவது, [[உரோமை|உரோமை நகரில்]] புனித உரோமை பிரான்சிஸ்கா (Saint Francesca Romana) கோவிலில் மரியாவின் மிகப் பழங்காலத் திருவோவியம் ஒன்று உள்ளது. அதை 1950இல் ஆய்வுசெய்தபோது, அந்த திருவோவியம் கிபி 5ஆம் நூற்றாண்டில் காண்ஸ்டாண்டிநோபுளுக்குக் கொண்டுவரப்பட்ட வட்ட வடிவ மரியா முகத்தின் எதிரெதிர் பிம்பமாக (reverse mirror image) அமைந்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது<ref>Margherita Guarducci, The Primacy of the Church of Rome, (San Francisco: [[Ignatius Press]], 1991) 93-101.</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Santa_Francesca_Romana,_Rome உரோமையில் மரியா திருவோவியம்]</ref>
 
பிற்காலத்தில், புனித லூக்காவால் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற மரியா திருவோவியங்கள் பலவாகப் பெருகின.<ref>James Hall, ''A History of Ideas and Images in Italian Art'', p.111, 1983, John Murray, London, ISBN 07195397140-7195-3971-4</ref>எடுத்துக்காட்டாக,
* உரோமையில் [[புனித மரியா பெருங்கோவில்|புனித மரியா பெருங்கோவிலில்]] உள்ள திருவோவியம்;
* விளாடிமீர் நகர இறையன்னை திருவோவியம்<ref>[http://en.wikipedia.org/wiki/Theotokos_of_Vladimir விளாடிமீர் இறையன்னை]</ref>;
* ஆத்தோஸ் மலையில் அமைந்த துறவற இல்லத்தில் உள்ள மரியா திருவோவியம்<ref>[http://en.wikipedia.org/wiki/Panagia_Portaitissa ஆத்தோஸ்]</ref>
* திக்வின் திருவோவியம்<ref>[http://en.wikipedia.org/wiki/Tikhvin_icon திக்வின் திருவோவியம்]</ref>
* ஸ்மோலென்ஸ்க் நகர் மரியா திருவோவியம்<ref>[http://en.wikipedia.org/wiki/Theotokos_of_Smolensk ஸ்மோலென்ஸ்க் நகர் மரியா திருவோவியம்]</ref>
* கருப்பு அன்னை மரியா திருவோவியம் (Black Madonna of Częstochowa)<ref>[http://en.wikipedia.org/wiki/Black_Madonna_of_Cz%C4%99stochowa கருப்பு அன்னை மரியா]</ref>
 
=== சென்னையில் புனித தோமையார் மலை திருத்தலத்தில் மரியா திருவோவியம் ===
 
ஐரோப்பாவின் பல பகுதிகளில் புனித லூக்கா வரைந்ததாக மரியா திருவோவியங்கள் பல இருந்தாலும், [[இந்தியா|இந்தியாவில்]] [[சென்னை]] நகரில் புனித தோமையார் மலை திருத்தலத்தில் மிகப் பழைய மரியா திருவோவியம் ஒன்று உள்ளது. அது [[லூக்கா நற்செய்தி|புனித லூக்காவால்]] வரையப்பட்டது என்றும், [[இயேசு|இயேசுவின்]] திருத்தூதர்களுள் ஒருவராகிய [[தோமா (திருத்தூதர்)|புனித தோமாவால்]] இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் ஒரு மரபு உண்டு<ref>[http://en.wikipedia.org/wiki/Saint_thomas_mount#cite_note-0 புனித தோமையார் மலை மரியா திருவோவியம்]</ref>
 
=== எத்தியோப்பியாவில் திருவோவியங்கள் ===
 
எத்தியோப்பியா நாட்டில் பழங்கால மரியா திருவோவியங்கள் பல உள்ளன. அவற்றுள் குறைந்தது ஏழாவது புனித லூக்காவால் எழுதப்பட்டன என்றொரு மரபு உள்ளது.<ref>{{cite book|last=Cormack|first=Robin|title=Painting the Soul; Icons, Death Masks and Shrouds|page=46|year=1997 | publisher=Reaktion Books, London}} எத்தியோப்பியா மரியா திருவோவியங்கள்</ref>
 
== மனிதரால் வரையப்படாத திருவோவியங்கள் பற்றிய மரபு ==
 
சில திருவோவியங்கள் மனிதரால் வரையப்படாமல், இறையருளால் அதிசயமாகத் தோன்றின என்றொரு மரபு உள்ளது. இவ்வகை ஓவியங்கள் [[கிரேக்க மொழி|கிரேக்க மொழியி்ல்]] "ஆக்கைரோப்போயேத்தா" (αχειροποίητα = acheiropoieta) என்று அழைக்கப்படுகின்றன. இச்சொல்லின் நேரடிப் பொருள் "கையால் செய்யப்படாத" என்பதாகும். கடவுளைச் சார்ந்தவற்றை மனிதர் முழுமையாக எடுத்துரைப்பது கடினம் என்னும் தத்துவத்தின் அடிப்படையில், மனிதரால் வரையப்படாதவை என்னும் திருவோவியங்கள் சிறப்பு வணக்கத்துக்கு உரியவை ஆயின. அவை மீபொருளாகவும் (relic) கருதப்பட்டன. அத்தகைய ஓவியங்களை மாதிரியாகக் கொண்டு பிற ஓவியங்கள் எழுதப்பட்டன.
வரிசை 116:
*(மேலைத் திருச்சபையில்) குவாடலூப்பே அன்னை திருவோவியம்<ref>[http://en.wikipedia.org/wiki/Our_Lady_of_Guadalupe குவாடலூப்பே அன்னை திருவோவியம்]</ref>
 
== திருவோவியங்கள் கூறும் இறையியல் ==
 
கிறித்தவ மரபில் திருவோவியங்கள் ஆழ்ந்த [[இறையியல்]] உண்மைகளை உள்ளடக்கியிருப்பதை அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். [[கிறித்தவம்|கிறித்தவ]] நம்பிக்கைப்படி, கடவுள் மனிதர் மேல் கொண்ட பேரன்பினால் மனிதராகப் பிறந்து, மனிதரோடு மனிதராக வாழ்ந்து, சிலுவையில் உயிர்துறந்து மனிதரைப் பாவங்களிலிருந்தும் சாவிலிருந்தும் விடுவித்து, அவர்களுக்கு நிறைவாழ்வைப் பெற்றுத் தந்தார். இவ்வாறு மனிதராகப் பிறந்தவர் மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய திருமகனே என்றும், அவரே [[மரியா (இயேசுவின் தாய்)|கன்னி மரியாவின்]] வயிற்றில் தூய ஆவியின் வல்லமையால் கருவாக உருவாகி மனிதரான [[இயேசு]] என்றும் [[கிறித்தவம்]] நம்புகிறது.
வரிசை 138:
{{cquote|நான் சீசரின் சிலையைக் காட்டி, இது யார் என்று கேட்டால், நீ 'சீசர்' என்றுதானே பதில் சொல்வாய்? அப்படிச் சொல்லும்போது, அச்சிலை செய்யப்பட்ட கல் சீசர் என்று பொருள் ஆகாதல்லவா. அச்சிலைக்கு நீ கொடுக்கும் பெயரும் வணக்கமும் அதற்கு மூலப்பொருளாக (archetype) உள்ள சீசருக்கு அளிக்கப்படுகின்றன என்பதே உண்மை.}}
 
== கீழைத் திருச்சபையில் திருச்சிலைக்கும் திருவோவியத்துக்கும் இடையே வேறுபாடு ==
 
கீழைத் திருச்சபை (Eastern Orthodox) மரபுப்படி, தட்டையான தளம் தான் திருவோவியம் எழுதப் பயன்படுத்தப்பட்டது. அது இரு பரிமாணம் கொண்டது. கிறித்தவம் வேரூன்றிய கிரேக்க கலாச்சாரத்தில் முப்பரிமாணச் சிலை வடிக்கும் கலைப்பாணி நன்கு வளர்ந்திருந்தது. அத்தகு சிலைகள் கிரேக்க கடவுளரையும் பெருமக்களையும் சிறப்பிக்க உருவாக்கப்பட்டன. அவை உடல் சார்ந்த "மனித" அம்சங்களுக்கு அழுத்தம் கொடுத்தன; தெய்விக மற்றும் ஆன்மிக அழுத்தம் குறைவாகவே இருந்தது.
வரிசை 150:
இன்றும் கூட, கீழைத் திருச்சபை மக்களின் வீடுகளிலும் கோவில்களிலும் திருவோவியங்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதைக் காணலாம்.
== திருவோவியங்களின் கலைப்பாணி முறைகள் ==
 
இன்றுள்ள திருவோவியங்களுள் மிகப் பழமையானவை சீனாய் மலையில் அமைந்துள்ள கிரேக்க மரபுவழித் திருச்சபை சார்ந்த புனித காதரின் துறவியர் இல்லத்தில்<ref>[http://en.wikipedia.org/wiki/St._Catherine%27s,_Sinai புனித காதரின் துறவியர் இல்லம், சீனாய்]</ref> உள்ளன. அவை கிபி 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. அதற்கு முன்னரும் திருவோவியங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவை காலத்தால் அழிந்துபட்டன.<ref>G Schiller, ''Iconography of Christian Art, Vol. I'',1971 (English trans from German), Lund Humphries, London, ISBN 853312702</ref>
வரிசை 166:
இருப்பினும், கிபி 2ஆம் நூற்றாண்டிலிருந்தே திருவோவியங்கள் வணக்கப் பொருள்களாகக் கருதப்பட்டதற்கு பண்டைக்கால கிறித்தவ எழுத்தாளர்களாகிய இரனேயஸ், யூசேபியஸ் போன்றோர் சாட்சிகளாய் உள்ளனர்.
 
== திருவோவிய எதிர்ப்பு இயக்கம் ==
 
கிபி 8ஆம் நூற்றாண்டில் திருவோவிய எதிர்ப்பு இயக்கம் (Iconoclasm)<ref>[http://en.wikipedia.org/wiki/Iconoclastic_Controversy திருவோவிய எதிர்ப்பு இயக்கம்]</ref>தோன்றியது.
வரிசை 194:
அதைத் தொடர்ந்து, பிசான்சிய நாணயங்களின் ஒரு பக்கம் அரசரின் உருவமும் மறுபக்கம் சமயம் சார்ந்த திருவோவியமும் பதிக்கப்படலாயின. இவ்வாறு அரசுக்கும் சமயத்துக்கும் உள்ள உறவு வலுப்படுத்தப்பட்டது.<ref name="RC"/>
 
== திருவோவியங்களில் உள்ள குறியீடுகளுக்கு விளக்கம் ==
 
பிசான்சியத்தில் உருவாக்கப்பட்ட திருவோவியங்கள் 11ஆம் நூற்றாண்டையும் அதற்குப் பிற்பட்ட காலத்தையும் சார்ந்தவை. இதற்கு முக்கிய காரணம் திருவோவியங்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்த 8-9 நூற்றாண்டுக் காலத்தில் நூற்றுக்கணக்கான திருவோவியங்கள் அடித்து நொறுக்கப்பட்டதே ஆகும். மேலும் 1204இல் நான்காம் [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போரின்]] போது [[வெனிசு]] நாட்டவர் பல கலைப் பொருள்களைக் கவர்ந்து சென்றுவிட்டனர். 1453இல் [[காண்ஸ்டாண்டிநோபுள்]] நகரம் துருக்கியரால் கைப்பற்றப்பட்டது.
வரிசை 205:
 
14ஆம் நூற்றாண்டில் திருவோவியங்களில் உள்ள உருவங்கள் நீண்ட முறையில் எழுதப்பட்டன. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு "ஓக்ரித் மரியா இறைவாழ்த்து ஓவியம்" ஆகும்.
[[Imageபடிமம்:Ohrid annunciation icon.jpg|thumb|ஓக்ரித் - வானதூதர் கபிரியேல் மரியாவுக்கு இறை வாழ்த்துக் கூறுகிறார்.]]
 
திருவோவியங்களில் காணப்படும் ஒவ்வொரு கூறும் ஒரு குறியீடு ஆகும். எனவே, ஒவ்வொரு கூறும் ஒரு பொருள் கொண்டதாக அமைகிறது.
வரிசை 222:
*திருவோவியங்களில் காணப்படும் (கிரேக்க) எழுத்துகளுக்கும் பொருள் உண்டு. பல திருவோவியங்களில் அவற்றில் வரும் ஆள்கள்/நிகழ்ச்சிகளின் பெயர்கள் முழுதுமாக அல்லது சுருக்கமாக எழுதப்பட்டிருக்கும்.
 
== ஆதாரங்கள் ==
{{reflist|2}}
 
வரிசை 232:
[[ar:أيقونة]]
[[bat-smg:Ikuona]]
[[be:АбразІкона]]
[[be-x-old:Абраз]]
[[bg:Икона]]
"https://ta.wikipedia.org/wiki/திருவோவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது