"பத்திரிசு லுமும்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
== கைது ==
[[படிமம்:PatricelumumbaIISG.jpg|framepx|thumb|right|பத்திரிசு லுமும்பா]]
செப்டம்பர் 1960 இல் லுமும்பாவின் அரசை அந்நாட்டின் அதிபர் அதிபர் காசா-வுபு, சட்டத்துக்கு மாறாகக்மாறாக லுமும்பாவின் அரசைக் கலைக்க அறிவித்தார். மாற்றாக, லுமும்பா, அதிபர் காசா-வுபுவின் பதவியைப் பறிக்க முயன்றார். [[செப்டம்பர் 14]], [[1960]] இல் [[சிஐஏ]]இன் ஆதரவுடன் இராணுவத் தளபதி [[மொபுட்டு செசெ செக்கோ|ஜோசப் மோபுட்டு]] இராணுவப் புரட்சியை மேற்கொண்டு லுமும்பா அரசைப் பதவியில் இருந்து கலைத்தார்.<ref name="devlin">Larry Devlin, ''Chief of Station Congo'', 2007, Public Affairs, ISBN 1-58648-405-2</ref> லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். [[ஐநா]] படைகள் அவருக்குப் பாதுகாப்பு அளித்தனர். வீட்டுக் காவலில் இருந்து தப்பித்த லுமும்பா ஸ்டான்லிவில் நோக்கி நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்டார். ஆனாலும் மொபுட்டுவின் படையினரால் அவர் [[1960]], [[டிசம்பர் 1]] இல் 'போர்ட் ஃபிராங்கி' என்ற இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். உள்ளூர் [[ஐநா]] அலுவலகத்திடம் அவர் முறையிட்ட போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. [[கின்ஷாசா]] நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார் லுமும்பா. இராணுவத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் லுமும்பாவுக்கெதிராகச் சுமத்தப்பட்டன. சட்டத்தின் மூலம் மட்டுமே லுமும்பா விசாரிக்கப்படவேண்டும் என [[ஐநா]] செயலர் [[டாக் ஹமாஷெல்ட்]] கொங்கோ அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். [[சோவியத் ஒன்றியம்]], லுமும்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
 
[[ஐநா]] பாதுகாப்புச் சபையில் லுமும்பாவிற்கு ஆதரவாக சோவியத் ஒன்றியம் [[டிசம்பர் 14]], [[1960]] இல் கொண்டுவந்த தீர்மானம் 8-2 வாக்குகளால் தோற்றுப் போனது. ஐநா செயலருக்கு கொங்கோ விவகாரத்தில் அதிக அதிகாரம் அளிக்க மேலை நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை சோவியத் ஒன்றியம் தனது [[வீட்டோ]] பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.
15,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1131429" இருந்து மீள்விக்கப்பட்டது