"மீட்பு (கிறித்தவம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: af:Verlossing; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Выратаванне, хрысціянства)
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: af:Verlossing; மேலோட்டமான மாற்றங்கள்)
[[கிறித்தவம்|கிறிஸ்தவ]] சமயத்தைப் பொறுத்தவரை, '''மீட்பு''' என்னும் சொல் [[பாவம்|பாவத்தில்]] இருந்து விடுதலை பெறுவதைக் குறிக்கிறது. உலக மக்களைப் பாவங்களில் இருந்து விடுவிக்கவே, [[மகனாகிய கடவுள்]] இவ்வுலகில் மனிதராகத் தோன்றினார்<ref>'''[[1 திமொத்தேயு (நூல்)|1 திமொத்தேயு]] 1:15''' "பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்."</ref> என்பது [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் நம்பிக்கை. மீட்பின் பரிசாக கிடைப்பது ''நிலைவாழ்வு'' ஆகும். கிறிஸ்தவர்களின் புனித நூலான [[விவிலியம்]], [[தந்தையாம் கடவுள்|கடவுளின்]] மீட்புத் திட்டத்தைப் பற்றிய செய்திகளையேக் கொண்டிருக்கிறது.
 
== உலகத்தில் பாவம் ==
விவிலியத்தின் முதல் புத்தகமான [[தொடக்க நூல்]], உலகில் பாவம் நுழைந்த விதத்தை கதை வடிவில் உருவகமாக விவரிக்கிறது. தொடக்கத்தில் கடவுள் தமது உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்து, உலகில் உள்ள அனைத்தின் மீதும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.<ref>'''[[தொடக்க நூல்]] 1:26''' 'அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார்.'</ref> இவ்வுலகில் கடவுளுக்குரிய பராமரிப்பு பணிகளை செய்ய, மானிடருக்கு அனைத்து விதத்திலும் கடவுள் சுதந்திரம் அளித்திருந்தார். மானிடரின் சுதந்திரத்தை சோதித்துப் பார்க்கும் விதத்தில், ஏதேன் தோட்டத்தின் நடுவில் இருந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ண கடவுள் தடை விதித்தார்.<ref>'''[[தொடக்க நூல்]] 2:16-17''' 'ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், "தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்" என்று கட்டளையிட்டுச் சொன்னார்.'</ref> மனிதர் கடவுளைப் போன்று மாற விரும்பி,<ref>'''[[தொடக்க நூல்]] 3:5''' 'பாம்பு பெண்ணிடம், "நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள்" என்றது.'</ref> கடவுளின் கட்டளையைப் புறக்கணித்து [[பாவம்]] செய்தனர்.<ref>'''[[தொடக்க நூல்]] 3:6''' 'பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள்.'</ref>
 
இக்கதையை உண்மைச் சம்பவமாகக் கருதிய தொடக்கக்கால கிறிஸ்தவ அறிஞர்கள், பாம்பின் வடிவத்தில் வந்தது [[சாத்தான்|அலகை]]யே என்றும், அலகையின் பேச்சை நம்பியே மானிடர் ஏமாந்ததாகவும் விளக்கம் அளித்தனர். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்று கூறியதை,<ref>'''[[தொடக்க நூல்]] 3:15'''</ref> மீட்பருக்கான வாக்குறுதியாகவும் ஏற்றுக்கொண்டனர். இதில் பாம்பு அலகையையும், பெண் புதிய ஏவாளாகிய [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]]வையும், அலகையின் தலையைக் காயப்படுத்தும் பெண்ணின் வித்து [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]]வையும் குறித்து நிற்கின்றன.
 
== மீட்புத் திட்டம் ==
உலகின் பல்வேறு பகுதிகளிலும், கடவுளின் மீட்பைப் பற்றிய எதிர்பார்ப்புகள் தோன்றின. ''"கடவுள் மனிதராகப் பிறக்க வேண்டும், மானிடருக்கு ஒழுக்கத்தை போதித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும், மானிடரின் பாவங்களுக்கு பரிகாரமாக தனது உயிரையே பலியாக கையளிக்க வேண்டும்"'' என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
 
கடவுள் தமது மீட்புத் திட்டத்தை [[இசுரவேலர்|இஸ்ரயேலரின்]] குலமுதுவராகிய [[ஆபிரகாம்]] வழியாக செயல்படுத்த விரும்பினார். அவரது வழிமரபிலேயே '''உலக மீட்பர்''' தோன்றுவார் என்பதை ஆபிரகாமுக்கு தமது [[தேவதூதர்]] வழியாக முன்னறிவித்தார். ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை அழைத்து, ''"உலகின் அனைத்து இனத்தவரும் உன் '''வழிமரபின்''' மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்"'' என்றார்.<ref>'''[[தொடக்க நூல்]] 22:18'''</ref> அதன் பிறகு இஸ்ரயேலில் தோன்றிய [[இறைவாக்கினர் (கிறித்தவம்)|இறைவாக்கினர்]] பலரும், மீட்பரைப் பற்றி முன்னறிவித்து கடவுளின் வருகைக்காக உலகைத் தயார் செய்தனர்.<ref>'''[[1 பேதுரு (நூல்)|1 பேதுரு]] 1:10''' "உங்களுக்கென்றிருந்த அருளைப் பற்றிதான் இறைவாக்கினர் இறைவாக்குரைத்தனர்; இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர்."</ref>
 
== மீட்பராம் கடவுள் ==
[[இசுரவேலர்|இஸ்ரயேலர்]] அனைவரும் [[தந்தையாம் கடவுள்|கடவுளை]]த் தங்கள் மீட்பராக கருதும் வழக்கம் கொண்டிருந்தனர். எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து கடவுளின் ஆற்றலால் மீட்கப்பட்டு, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டில் குடியமர்த்தப்பட்ட இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் மீட்பளிப்பவராகவேத் தெரிந்தார். [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] அவர்களின் சில சிந்தனைகள் பின்வருமாறு:
 
:"அவர்களின் மீட்பர் வலிமைமிக்கவர்; படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர். அவரே அவர்கள் வழக்கை நடத்துவார்; நாட்டுக்கு அமைதியைக் கொணர்வார்."<ref>'''[[எரேமியா (நூல்)|எரேமியா]] 50:34'''</ref>
 
== இயேசுவே மீட்பர் ==
[[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் கருத்துப்படி, [[இயேசு கிறித்து|இயேசு]]வே உலகின் மீட்பர் ஆவார்.<ref>'''[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 2:11''' "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்."</ref> ''இயேசு'' என்னும் பெயருக்கே ''மீட்பர்'' என்பதுதான் பொருள்.<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 1:21''' "[[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]] ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"</ref> [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] கிறிஸ்து வழியாக கிடைத்த மீட்பைப் பற்றிய கருத்துகள் பரவலாக காணப்படுகின்றன.
 
:"உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார்." <ref>'''[[1 கொரிந்தியர் (நூல்)|1 கொரிந்தியர்]] 1:21,30'''</ref>
 
== நிலை வாழ்வு ==
'''நிலை வாழ்வு''' என்பது, மீட்பு அடைந்தோருக்கு கடவுள் வழங்கும் பரிசாகும்.<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 25:46''' "பாவிகள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்."</ref> இவ்வுலகில் கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கைக்காக எதையும் இழக்கத் துணியும் ஒருவர் கண்டிப்பாக நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்வர்.<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 19:29''' "என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்."</ref> [[தந்தையாம் கடவுள்|இறைத் தந்தை]]யின் ஒரே [[மகனாகிய கடவுள்|மகனிடம்]] நம்பிக்கை கொள்ளும் எவரும் நிலை வாழ்வைப் பெறுவர்.<ref>'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 3:36''' "மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர்; நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார்."</ref> இயேசுவின் வார்த்தைகளுக்கு பணிந்து, கடவுளிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்.<ref>'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 5:24''' "என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்."</ref>
 
"[[தந்தையாம் கடவுள்]] நம் மீட்பராகிய [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]]வின் வழியாகத் [[தூய ஆவி]]யை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலை வாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்"<ref>'''[[தீத்து (நூல்)|தீத்து]] 3:6-7'''</ref> என்று [[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுல்]] குறிப்பிடுகிறார்.
 
== ஆதாரங்கள் ==
{{Reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
* A. J. Wallace and R. D. Rusk, ''[https://www.createspace.com/3508977 "Moral Transformation: the Original Christian Paradigm of Salvation"]'' A recent defence of the moral transformation perspective.
* [http://gbgm-umc.org/umhistory/wesley/sermons/serm-043.stm "The Scripture Way to Salvation"], a sermon by John Wesley (Protestant Christian - Methodist/Wesleyan perspective)
* [http://www.islamawareness.net/Salvation/salvation1.html Salvation in Islam]
* [http://www.biblicalperspectives.com/books/immortality_resurrection/6.htm ''Immortality Or Resurrection?'' Chapter VI Hell: Eternal Torment or Annihilation?] by Samuele Bacchiocchi, Ph. D., Andrews University
* [http://www.archive.org/details/redemptionafterd0420brig ''Redemption after Death''] by Charles Augustus Briggs: An article in the December 1889 Issue of The Magazine of Christian Literature Vol 1. No. 3.
 
[[பகுப்பு:கிறித்தவ இறையியல்]]
 
[[af:Verlossing]]
[[ar:الخلاص]]
[[be:Выратаванне, хрысціянства]]
44,116

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1131664" இருந்து மீள்விக்கப்பட்டது