பண்டாரம் (சமய மரபு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
தமிழ்நாடு முழுவதும் பரவலாக காணப்பட்டாலும் ராமநாதபுரத்தில் ஆண்டிப்பண்டாரம் அல்லது புலவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் வீரசைவர், திண்டுக்கல் பகுதியில் பண்டாரம், மலைபண்டாரம் அல்லது ஆண்டிபண்டாரம், மதுரையில் யோகிஸ்வரர்,கன்னடியர்,தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி அல்லிநகரம், வீரபாண்டி, வடுகபட்டி பகுதியில் கன்னடியர் என்றும் போடிநயகனுர் பகுதிகளில் ஜங்கமர் என்றும் அழைக்கப்படுகிறார்கள் கோவையில் ஜங்கம் அல்லது லிங்காயத் போன்ற பெயரால் தங்களை அழைத்துக்கொள்கின்றனர். இருந்தாலும் ஆண்டிபண்டாரம் அல்லது பண்டாரம் என்ற பெயரை சமூகம் கேலியாகசித்தரிப்பதால் பொதுவாக முக்கியமாக இளைய தலைமுறையினர் வீரசைவர் மற்றும் யோகிஸ்வரர் என்றே கூறிக்கொள்கின்றனர். இதனால் அரசு மூலம் இவர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்காமல் போய்விடுகின்றன.
 
==பதிவுகள்==
 
தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்னும் தலைப்பின் கீழ் எட்கர் தர்ஸ்டசன் ஒவ்வொரு குலத்தைப் பற்றியும் அறிமுகத் தகவல்களைத் தருகிறார். அவரின் கூற்றுப்படி பண்டாரமென்பது ஒரு தொழிலை மேற்கொண்டவர்களின் பெயராகுமேயன்றி ஒரு சாதிக்குரிய பெயராகாது. அவர்கள் சைவ நெறியில் உறுதியான பற்றுள்ளவர்கள்; துறவற மனம் கொண்டவர்கள்; கழுத்தில் லிங்கம் அணிந்துகொள்பவர்கள். ஒரு காலத்தில் சோழிய வெள்ளாளர்களாகவும் இருந்தவர்கள். இவர்களில் கோயில் பணியாளர்கள் அதிகம். கோயில் வழிபாட்டிற்குரிய மலர்மாலைகளைத் தருவதும் வழிபாடு நடக்கும்போது தேவாரம் ஓதுவதும் இவர்களது பணி. கிராமங்களில் கிராமத் தேவதைகளின் கோயில்களில் பண்டாரங்கள் பூசாரிகளாகவும் உள்ளனர். சில இடங்களில் ஆற்றிலிருந்து கோயில் திருமஞ்சன நீராட்டிற்கு நீர்சுமந்து வருபவர்களாகவும் உள்ளனர்.
வரி 30 ⟶ 31:
பிற்காலச் சோழர்கள் காலத்தில் பண்டாரங்கள் கருவூல அதிகாரிகளாகவும் பணியாற்றி உள்ளனர். அரசாங்க உத்தரவுகளைப் பனையோலையில் பதிவுசெய்து அவற்றைப் பாதுகாக்கும் நூலகர்களாகவும் இவர்கள் இருந்துள்ளார்கள்.
 
பிற்காலத்தில் பண்டாரம் என்பது ஒரு சாதிக்குரிய பெயராகவும் பல சாதிகளிலிருந்து தேர்ந்தெடுத்த வகுப்பிற்குரிய பெயராகவும் விளக்கம் பெறுகிறது. பண்டாரம் என்னும் சாதி நிலவுடமையாளர்களில் மதிப்பு வாய்ந்த பிரிவினரையும் சில மடங்களைச் சேர்ந்த சன்னியாசிகளையும் செல்வச்செழிப்புள்ள ஆதீனங்களின் மேலாளர்களையும் குறிக்கும் சொல்லாக மாற்றம்பெறுகிறது. இந்தப் பண்டார சன்னதிகள் துறவற வாழ்க்கையை மேற்கொண்டு சைவ ஆகமங்கள் புராணங்கள் ஆகியவற்றில் நல்ல பரிச்சயம் உடையவர்கள் ஆனார்கள். தமிழில் நல்ல புலமையும் சைவசித்தாந்தத்தில் நல்ல தேர்ச்சியும் பெற்று ‘தம்பிரானும்’ ஆனார்கள். மாணிக்கவாசகர் “பண்டாரம்” என்னும் சொல்லை திருவாசகத்தில் சிறப்பாகப் பிரயோகிக்கிறார்.
 
==மலைப்பண்டாரம்==
"https://ta.wikipedia.org/wiki/பண்டாரம்_(சமய_மரபு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது