மின்காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 15:
==வரலாறு==
[[File:Sturgeon electromagnet.png|thumb|upright|ஸ்டேர்ஜனின் மின்காந்தம், 1824]]
1820ல் டேனிய விஞ்ஞானியான [[ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட்]], கடத்தியொன்றினூடு பாயும் மின்னோட்டம் அக்கடத்தியைச் சூழ காந்தப்புலத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார். 1824ல் பிரித்தானிய விஞ்ஞானியான [[வில்லியம் ஸ்டேர்ஜன்]] மின்காந்தத்தைக் கண்டுபிடித்தார். அவரது முதலாவது மின்காந்தம் காவலிடப்படாத செப்புக்கம்பியினால் 18 தடவைகள் சுற்றப்பட்ட குதிரை லாட வடிவிலான இரும்புத்துண்டினால் ஆக்கப்பட்டிருந்தது. இரும்பு, வாணிசு பூச்சினால் காவலிடப்பட்டிருந்தது. சுருளினூடாக மின்னோட்டமொன்று பாயும்போது, இரும்பு காந்தமாக்கப்பட்டதோடு ஏனைய இரும்புத்துண்டுகளையும் கவர்ந்தது. மின்னோட்டம் நிறுத்தப்பட்டபோது அது காந்தத்தன்மையை இழந்தது. இத்துண்டு வெறுமனே 200 கிராம் திணிவைக் கொண்டிருந்தபோதும், ஒரு தனிக்கல மின்கலத்துடன் இணைக்கப்படும்போது 4கிலோகிராம்4 கிலோகிராம் திணிவை உயர்த்தக்கூடியதாய் இருந்தது. இதன் மூலம் மின்காந்தத்தின் வலிமையை ஸ்டேர்ஜன் உணர்த்தினார். எவ்வாரயினும் ஸ்டேர்ஜனின் மின்காந்தம் நலிந்ததாக இருந்தது. ஏனெனில், பயன்படுத்தப்பட்ட செப்புக்கம்பி காவலிடப்படாதிருந்தமையால், அகணியைச் சுற்றி செப்புக்கம்பியை ஒருதடவை மாத்திரமே சுற்றக்கூடியதாய் இருந்தது. மேலும், கம்பியின் ஒவ்வொரு சுற்றுக்கிடையிலும் இடைவெளிகள் விடவேண்டியிருந்தது. இதனால், அகணியைச் சுற்றி சுற்றப்படும் சுற்றுக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. 1827ன் துவக்கத்தில் அமெரிக்க விஞ்ஞானியான [[ஜோசப் ஹென்றி]], மின்காந்தத்தை மேம்படுத்தி, பிரபல்யப்படுத்தினார். பட்டு நூலினால் காவலிடப்பட்ட கம்பிகளைப் பயன்படுத்தியதன் மூலம், அவரால் அகணியின்மீது அதிக படைகளில் கம்பியைச் சுற்றமுடிந்தது. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுக்களைக்கொண்ட வலிமையான காந்தங்களை அவரால் உருவாக்க முடிந்தது. இவற்றுள் ஒன்று, 936கிலோகிராம் திணிவை உயர்த்தக்கூடியதாய் இருந்தது. மின்காந்தம் முதலில் பிரதானமாக தந்தி ஒலிப்பானில் பயன்படுத்தப்பட்டது.
 
==மின்காந்தத்தின் பயன்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மின்காந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது