பாகைத்துளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பாகைத்துளி என்பது ஒரு சிறு கோணத்தைக் குறிக்கும் அளவு. பாகைத்துளி என்பது [[வடிவவியல்|வடிவவியலில்]] ஒரு [[வட்டம்|வட்டத்தின்]] ஒரு [[பாகை]]யின் 60ல் ஒரு பங்கு ஆகும். ஒரு பாகை என்பது வட்டத்தின் சுற்றளவில் (பரிதியில்) 360ல் ஒரு பங்கான பகுதி வட்டத்தின் நடுவில் வடிக்கும் கோணம். எனவே ஒரு பாகைத்துளி என்பது ஒரு [[வட்டம்|வட்டத்தின்]] முழு சுற்றளவில் 1/21600 ல் பகுதியின் [[கோணம்]]. இவ்வகை சிறு கோணங்கள் [[வானவியலில்]] தொலைவில் உள்ள [[விண்மீன்]]கள் பற்றிய அளவீடுகளுக்கு மிகவும் பயன்படுவது. பாகைத்துளியின் [[SI]] அளவீட்டுக் குறி ஒரு சாய்கொட்டு (′) (U+2032, &prime;), அனால் சாதாரண ஒற்றைக் கொட்டு அல்லது ஒற்றை மேற்கோள் குறியும் (') (U+0027) பயன்படுத்துவதுண்டு. ஐந்து பாகைத்துளி என்பதை 5' என்று குறிப்பர். பாகைத்துளியை சாய்கொட்டுக்கு மேல் ஒரு கூரைக் குறி இட்டும் காட்டுவர் (<math>\hat{'}</math>)
 
பாகைத்துளியின் உட்கூறுகளை [[பாகைநொடி]] என்பர். 60 பாகைநொடிகள் சேர்ந்தது ஒரு பாகைத்துளி. பாகைநொடியைக் குறிக்க இரட்டை சாய்கோடுகள் இடுவர் ( ″ ) (U+2033).
"https://ta.wikipedia.org/wiki/பாகைத்துளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது