கருவறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:India-Elephanta-Outside.jpg|thumb|right|[[எலிபண்டா குகைகள்|எலிபண்டா குகையிலுள்ள]] கர்ப்பக்கிருகத்தின் நுழைவாயில்]]
இந்து சமயக் கோயில்களில் மூலவர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடம் உள்ள தரைப்பகுதி '''கருவறை''' எனப்படுகிறது. வேத காலத்தில் இவை சமசதுரம், வட்டம், முக்கோணம் எனும் மூன்றுவிதமான வடிவமைப்புகளில் அமைக்கப்பட்டன. இதில் சமசதுரம் தேவலோகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் அக்னி அல்லது மண்ணுலகத்துடனும் தொடர்புப்படுத்தப்பட்டன. சதுரமும் வட்டமும் இந்தியக் கோயில்களுக்கு அடிப்படையாக அமைந்தன. இதில் வட்ட வடிவம் இறந்தவர்களோடு தொடர்பு படுத்தப்பட்டதால் புத்த ஸ்தூபிகளுக்கும், [[பள்ளிப்படை|பள்ளிப்படைக் கோயில்களுக்கும்]] அடிப்படையாய் அமைந்தன. ஒரு சில கோயில்களில் வட்டவடிவத் தரையமைப்பு உண்டு. குறிப்பாக மதுரை, அழகர்கோயிலுள்ள அழகர் கோயிலின் கருவறை வட்ட வடிவமுடையது.
'''கர்ப்பக்கிருகம்''' ([[ஆங்கிலம்]]: Garbhagriha, தேவநாகரி: गर्भगॄह) என்பது [[இந்து சமயம்|இந்து சமயக்]] கோவில்களில் அக்கோவிலுக்குரிய முதன்மைக் கடவுளின் உருவச் சிலை அமைந்துள்ள முக்கியமான இடமாகும். கர்ப்பக்கிருகம் இந்துக் கோவில்களின் பிரதான பகுதியாக விளங்குகின்றது. [[மூலவர்|மூலவராகிய]] இறைவன் எழுந்தருளியிருக்கும் இடமே கர்ப்பக்கிருகம். [[சமசுகிருதம்|சமசுகிருதத்தில்]] கர்ப்பகிருகம் என்றால் கரு அறை என்று பொருள்படும். தாயின் கருவறை இருளாக இருப்பதைப் போலவே ஆலயத்தில் கர்ப்பக்கிருகமும் இருள் சூழ்ந்ததாகவே அமைந்திருக்கும். மனித உடலோடு இந்துக் கோயிலை உருவகிக்கும் [[ஆகமம்|ஆகமங்கள்]] இதனை மனிதனின் சிரசிற்கு உவமிக்கின்றன. கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே கர்ப்பக்கிருகத்துள் செல்ல முடியும்.<ref>{{cite web
|url=http://www.indoarch.org/arch_glossary.php
|title=Architecture of the Indian Subcontinent - Glossary
|publisher=
|accessdate=2007-01-24
}}</ref><ref>{{cite web
|url=http://www.templenet.com/glossary.html
|title=Templenet - Glossary
|publisher=
|accessdate=2007-01-29
}}</ref>பக்தர்கள் கர்ப்பக்கிருகத்துள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவல்லை. கர்ப்பக்கிருகம் என்ற சொல் முக்கியமாக இந்து சமயக் கோவில்களோடு தொடர்புள்ளதாகக் கருதப்பட்டாலும் புத்தம் மற்றும் சமண மதக் கோவில்களிலும் கர்ப்பக்கிருகங்கள் காணப்படுகின்றன.
 
==கட்டிட அமைப்பு==
{{குறுங்கட்டுரை}}
விமான அமைப்பு கொண்ட கோவில்களில் விமானங்களுக்கு நேர் கீழாக கர்ப்பக்கிருகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானமும் கர்ப்பக்கிருகமும் சேர்ந்து ஒரு கோவிலின் முக்கிய நிலைக்குத்து அச்சாக அமைகின்றன. இந்த அச்சு மேருமலை வழியே அமையும் உலக அச்சைக் குறிப்பதாகக் கருத்துள்ளது. கர்ப்பக்கிருகம் கோவிலின் கிழ மேற்காக அமையும் கிடை அச்சாகவும் கருதப்படுகிறது. குறுக்காகவும் அமையும் அச்சுக்கள் கொண்ட கோவில்களில் அந்த அச்சுக்கள் சந்த்திக்கும் இடத்தில் கர்ப்பக்கிருகங்கள் உள்ளன.
[[பகுப்பு: கோயில் வேலைப்பாடுகள்]]
 
பொதுவாக, கர்ப்பக்கிருங்கள் சன்னல்கள் இல்லாத மெல்லிய வெளிச்சமுடைய சிறிய அறைகளாக உள்ளன. பக்தர்களின் உள்ளம் கடவுளின் நினைவில் ஒருமுகமாக ஒன்றுபடுவதற்கு ஏதுவாக இவ்வறைகள் இவ்வாறு அமைக்கப்படுகின்றன. கடவுளுக்குரிய கைங்கரியங்களைச் செய்யும் அர்ச்சகர்கள் மட்டுமே கர்ப்பக்கிருகங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
 
==இந்து சமயம்==
[[File:Badami cavetemple.jpg|thumb|[[பாதாமி குடைவரைக் கோவில்கள்|பாதாமி குகைக்கோவிலின்]] கர்ப்பக்கிருகம்]]
திராவிட பாணியில், கோவில் விமானங்களை ஒத்த சிறுவடிவமாக கர்ப்பக்கிருகங்கள் அமைந்துள்ளன. மேலும் உட்சுவருக்கும் வெளிச்சுவருக்கும் இடையே கர்ப்பக்கிருகத்தைச் சுற்றி ஒரு பிரகாரம் அமைந்திருப்பது போன்ற பிற தென்னிந்திய கட்டிக்கலைக்கே உரித்தான அமைப்புகளையும் கொண்டுள்ளன. கர்ப்பக்கிருககங்களின் நுழைவாயில் சிறப்பான அலங்காரத்துடன் காணப்படுகின்றன. உட்புறங்களும் காலங்காலமாக செய்யப்பட்டுவரும் அலங்கரங்களுடன் விளங்குகின்றன. <ref name="temple">{{cite web
|url=http://www.kalakeralam.com/handicrafts/keralatemples.htm
|title=Temple Architecture
|publisher=
|accessdate=2007-01-24
}}</ref>
 
கர்ப்பக்கிருகங்கள் வழக்கமாக சதுர வடிவிலேயே அமைந்துள்ளன. இவை ஒரு அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளன. கோவிலை முழுமையாகத் தாங்கும் சமநிலைப் புள்ளியில் அமையுமாறு கணக்கிடப்பட்டுக் கட்டப்பட்டுள்ளன. கர்ப்பக்கிருகத்தின் மையத்தில் கோவிலின் மூலக் கடவுளின் உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.<ref>{{cite book
| first= Binda
| last= Thapar
| year= 2004
| title= Introduction to Indian Architecture
| edition=
| publisher= Periplus Editions
| location=Singapore
| pages= 43
| isbn= 0-7946-0011-5}}</ref>
 
===கேரளா===
தற்போதய, பெரும்பாலான கேரள கோவில்கள் இரண்டடுக்கு விமான அமைப்பு, சதுர வடிவிலான கர்ப்பக்கிருகம், அதைச்சுற்றி அமையும் பிரகாரம், ஓர் அர்த்த மண்டபம் மற்றும் ஒரு குறுகிய மகா மண்டபம் ஆகியவற்றுடன் அமைந்துள்ளன.<ref name="temple"/>
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
==மேற்கோள்கள்==
* George Michell; Monuments of India (Penguin Guides, Vol. 1, 1989)
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.kalakeralam.com/handicrafts/keralatemples.htm Temple architecture]
* [http://www.art-and-archaeology.com/india/temple1.html Parts of a North Indian Temple]
 
 
[[பகுப்பு:இந்துக் கோயில்கள்]]
 
[[en:Garbhagriha]]
 
 
[[hi:गर्भगृह]]
[[pl:Garbhagryha]]
[[ru:Гарбхагриха]]
"https://ta.wikipedia.org/wiki/கருவறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது