மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
சி +படம்
சிNo edit summary
வரிசை 3:
[[மாமல்லபுரம்]] '''தலசயனப் பெருமாள் கோயில்''' ('''திருக்கடல்மல்லை''') இது [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களுள்]] ஒன்றான [[இந்து]] [[வைணவம்|வைணவ]] [[கோயில்|கோயிலாகும்]].
 
இக் கோயிலிலுள்ள இறைவர் ''உலகுய்ய நின்ற பெருமாள்'' எனவும் இறைவி ''நிலமங்கை நாச்சியார்'' எனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. உலகுய்ய நின்ற பெருமாள் என்பது நிற்கும் தோற்றத்திலுள்ள [[விஷ்ணு]] பெருமானையே குறிக்கும். எனினும் இங்கு கருவறையில் உள்ள இறைவர் படுத்த நிலையிலிருக்கும் [[திருமால்|திருமாலாகவே]] காணப்படுகின்றார் என்பதுடன் இதற்கொப்ப அவர் பெயரும் தல சயனப் பெருமாள்(தமிழில் தரைகிடந்த பெருமாள்) என வழங்கி வருகின்றது.
 
இதனால் இங்கு ஆரம்பத்தில் இருந்த மூலவருக்குப் பதிலாகப் பிற்காலத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வைக்கப் பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள்.
 
[[திருமங்கையாழ்வார்]] எழுதிய பாசுரம் ஒன்றில் மாமல்லபுரத்துக் கோயிலொன்று குறித்து வரும் '''திருக்கடல்மல்லை''' தலசயனம் என்பது இக்கோயிலையே குறிக்கின்றது என்பது பலரது கருத்து. அவ்வாறன்றி இது கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரையிலுள்ள [[பல்லவர்]] காலக் கோயிலையே குறித்தது என்பது வேறு சில அறிஞர் கருத்து.
 
இத் தலத்திலேயே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான [[பூதத்தாழ்வார்]] பிறந்ததாகவும் கூறப்படுகிறது.