தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:தமிழகத்தில் கற்காலம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
'''தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம்''' கி.மு. 15,00,000 - கி.மு. 50,000 வரை நிலைத்திருந்தது. குறிப்பாக சென்னை அத்திரம்பாக்கத்தில் கிடைத்த 15 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லாயுதங்களைக் கொண்டு இதை புருசு ஃபுட்டே என்ற தொல்லியல் ஆய்வாளர் நிறுவினார்.
 
==சென்னை தொழிற்சாலை==
தொல்லியல் ஆய்வாளர்கள் தொல்லியல் களமான அத்திரம்பாக்கத்தையும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளையும் ஆங்கிலத்தில் '''மெட்ராசு இன்டசுட்ரி''' என்று கூறுவதுணடு. இப்பெயர் 1863ல் புருசு ஃபுட்டே என்னும் ஆய்வாளர் மேலுள்ள படிமத்தில் உள்ள ஆயுதங்களை கண்டறிந்த பின்னர் சில ஆண்டுகளுக்கு பின்னர் ஒசுவால்ட் எமன்கின் என்பவரால் சென்னைக்கு வழங்கப்பட்டது. அதன்படி தென்னிந்தியாவில் அதிப்பழமை வாய்ந்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்கள் கிடைக்கப்பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
 
==கற்களின் இயல்புகளும் வகைகளும்==
அத்திரம்பாக்கத்தில் கிடைத்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்கள் அனைத்தும் '''குவாட் சயிட்''' என்ற கற்களால் ஆனவை. பெரிய குவாட் சயிட் பாறைகளில் நெருப்பை ஏற்றி சூடாக்கிய பின்னர் அதன் மேல் நீரை ஊற்றி பாறைகளை பிளந்து இவ்வாயுதங்களை செய்ததாகத் தெரிகிறது.
 
இக்கருவிகளை பிளந்து உருவாக்கும் போது அதை உடைக்க பயன்பட்ட குவாட்சயிட் கற்களின் தழும்பு இவ்வாயுதங்களில் காணப்படுகிறது. இதைக் கொண்டு இவர்கள் தங்கள் உடனடித் தேவைக்காக இதைப் போல் சரியாக செப்பனிடப்படாத ஆயுதங்களை பயன்படுத்தினர் எனக் கொள்ளலாம்.
 
===செய்திறன் வளர்ச்சி===
காலம் செல்லச் செல்ல இவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்களில் செப்பனிடும் முறைகள் அதிகம் கையாலப்பட்டு செய்திறனில் ஒரு படிமுறை வளர்ச்சியைக் கண்டுள்ளனர். இவ்வளர்ச்சி காலங்களின் போது இவர்களின் ஆயுதங்கள் கூழாங்கற்களிலும் முழுக்கற்களாலும் முழுக்கற்களில் இருந்து உடைக்கப்பட்ட ஆயுதங்களாகவும் வளர்ந்தது. இதன் வளர்ச்சியை அபிவிலியன் மற்றும் அச்சூலியன் ஆயுதங்கள் என்று கூறுவர்.
 
[[பகுப்பு:தமிழகத்தில் கற்காலம்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழகத்தில்_கீழைப்_பழங்கற்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது