"டி. எஸ். சொக்கலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
காந்தியத்தில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், [[1920கள்|1920களில்]] தனது 21ஆவது வயதில் [[இதழியல்]] துறையில் காலடி வைத்தார்.
 
காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். [[சேலம் வரதராஜூலு]] தொடங்கி நடத்திவந்த "[[தமிழ்நாடு]]" இதழில் இவர் முதன் முதலில் பணியாற்றினார். தமிழ்நாடு இதழில் தன்னை இணையற்ற பத்திரிகையாளராக அடையாளப்படுத்திக் கொண்ட சொக்கலிங்கம், பின்னர், 'காந்தி' என்ற வாரம் இருமுறை இதழை தொடங்கினார். பிறகு, [[வ.ரா]], சீனிவாசன் ஆகியோரோடு இணைந்து [[மணிக்கொடி]] இதழைத் தொடங்கினார். பின்னர், சதானந்த் தொடங்கிய [[தினமணி]] இதழின் முதல் ஆசிரியராகப் பொறுபேற்றார்.
 
'இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியே சென்றால் தன்னை இந்தியன் என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் - தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டை தன் வசிப்பிடமாகக் கொண்ட, இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் மற்றும் தமிழ்பேசும் அனைவரும்தான்' என்று தினமணியின் முதல் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
 
சொக்கலிங்கம், தினமணி ஆசிரியராக இருந்தபோது, [[ஏ.என்.சிவராமன்]], [[புதுமைப்பித்தன்]], [[சி.சு.செல்லப்பா]], [[கு.அழகிரிசாமி]] உள்ளிட்டோர் துணை ஆசிரியர்களாக இருந்தனர். தினமணி பின்னர், கோயங்கா குழுமத்துக்கு கைமாறியது. [[1943]] இல், தினமணியில் இருந்து வெளியேறினார் சொக்கலிங்கம். புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி ஆகியோரும் அப்போது வெளியேறினர். பின்னர் [[1944]] இல் தினசரி என்ற நாளிதழைத் தொடங்கினார். சிறிது காலத்துக்கு மேல் அந்த இதழ் தாக்குப்பிடிக்காமல் திணறியது. ஒரு கட்டத்துக்கு மேல் நின்று போனது. ஆனாலும் மனம் தளராத சொக்கலிங்கம், [[ஜனயுகம்]], [[பாரதம்]], [[நவசக்தி]] உள்பட பல பத்திரிகைகளை நடத்தினார்.
 
புதுமைப்பித்தன் என்ற எழுத்தாளன் தமிழ் இலக்கிய உலகுக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் சொக்கலிங்கம். தினமணி, மணிக்கொடி, காந்தி உள்ளிட்ட, தான் பணியாற்றிய அத்தனை இதழ்களிலும் புதுமைப்பித்தனுக்கு வாய்ப்பளித்தார்.
2,293

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1144343" இருந்து மீள்விக்கப்பட்டது