புதிய கற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: kn:ನವಶಿಲಾಯುಗ
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: ur:جدید زمانہ پتھر; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''புதிய கற்காலம்''' என்பது, மனிதரின் [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைக் குறிக்கும். இக் காலகட்டமே [[கற்காலம்|கற்காலத்தின்]] இறுதிப் பகுதியாகும். இது, [[இடைக்கற்காலம்|இடைக்கற்காலத்தை]] (Epipalaeolithic) அடுத்து, வேளாண்மைத் தொழில்நுட்பத்தின் எழுச்சியுடன் உருவானது. [[வேளாண்மை]]ப் புரட்சியை உருவாக்கிய இக்காலம், [[செப்புக் காலம்]], [[வெண்கலக் காலம்]], [[இரும்புக் காலம்]] ஆகிய காலப்பகுதிகளில் நிகழ்ந்த உலோகக் கருவிகளின் பயன்பாட்டின் அறிமுகத்துடன் முடிவடைந்தது.
 
[[imageபடிமம்:Néolithique 0001.jpg|thumb|right|250px|அணிகள், கோடரிகள், உளிகள், மெருகூட்டும் கருவிகள் என்பன அடங்கிய புதிய கற்காலப் பொருட்கள்]]
[[Imageபடிமம்:SkaraBraeJM.jpg|thumb|right|250px|Skara Brae [[Scotland]]. வீட்டுத் தளபாடங்கள் முதலியன பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள்.]]
புதிய கற்காலம், பல்வேறு புவியியற் பகுதிகளில் வேறுபட்ட காலங்களில் நிலவியது. கி.மு 8500 இல், [[லேவண்ட்]] ([[ஜெரிக்கோ]], [[பாலஸ்தீனம்]]) பகுதியில் இது காணப்பட்டது. இது, இப் பகுதியில் நிலவிய இடைக்கற்கால, [[நாத்தூபியன் பண்பாடு|நாத்தூபியன்]] (''Natufian'') பண்பாட்டிலிருந்து வளர்ச்சியடைந்தது. நாத்தூபியன் பண்பாட்டுக்குரிய மக்களே காட்டுத் [[தானியம்|தானியங்களை]] முதலில் உணவுக்காகப் பயன்படுத்தினர். இதுவே பின்னர் முறையான வேளாண்மையாக வளர்ச்சியடைந்தது. இதனால் நாத்தூபியன் பண்பாட்டு மக்களை முந்திய புதிய கற்காலப் (''proto-Neolithic'') பண்பாட்டினர் (கி.மு. 11,000-8500) எனலாம். நாத்தூபியர்கள் காட்டுத் தானியங்களில் தங்கியிருக்கத் தொடங்கியபோது, உடலுழைப்புக் குறைவான வாழ்க்கை முறை ஏற்பட்டது. உறைபனிக் காலத்தோடு தொடர்புடைய காலநிலை மாற்றம், அவர்களின் வேளாண்மை விருத்திக்குத் தூண்டியது. கி.மு. 8500 - 8000 அளவில், [[லேவண்ட்]]டில் உருவாகிய வேளாண்மைச் சமுதாயம், [[அனதோலியா]], வட [[ஆபிரிக்கா]], வட [[மெசொப்பொத்தேமியா]] ஆகிய இடங்களுக்கும் பரவியது.
 
புதிய கற்காலத் தொடக்கத்தில், வேளாண்மை பயிர்கள், காட்டுத் தானியங்களாயினும், நாட்டி வளர்க்கப்பட்டவை ஆயினும், குறைந்த அளவு வகையினவாகவே இருந்தன. இவை சில வகைக் [[கோதுமை]], [[தினை]], [[சாமை]] போன்ற தானியங்களை உள்ளடக்கியிருந்தன. கால்நடை வளர்ப்பிலும், செம்மறிகளும், [[ஆடு]]களும் மட்டுமே வளர்க்கப்பட்டன. கி.மு. 7000 அளவில், இவற்றுடன், மாடுகளும், பன்றிகளும் சேர்க்கப்பட்டன. இக்காலத்திலேயே நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்புக்களும், [[மட்பாண்டம்|மட்பாண்டங்களின்]] பயன்பாடும் தோன்றின. புதிய கற்காலப் பண்பாடு நிலவிய எல்லா இடங்களிலும், இதற்குரிய சிறப்பியல்புகள் ஒரே ஒழுங்கிலேயே தோன்றியதாகக் கூற முடியாது. அண்மைக் கிழக்குப் பகுதிகளின் வேளாண்மைச் சமூகங்களில், மட்பாண்டங்கள் பயன்படுத்தப்படவில்லை. பிரித்தானியாவில், புதிய கற்கால முற்பகுதியில், எந்த அளவுக்குப் [[பயிர்]] செய்தார்கள் என்றோ, நிலையான குடியிருப்புக்களுடன் கூடிய சமுதாயங்கள் இருந்தனவென்றோ நிச்சயமாகக் கூறமுடியாதுள்ளது. [[ஆபிரிக்கா]], [[இந்தியா]], தென்கிழக்கு ஆசியா போன்ற உலகின் ஏனைய பகுதிகளில், உள்ளூர் நிலைமைகளையொட்டியும், ஐரோப்பியப் பண்பாடுகளுடனோ அல்லது தென்மேற்கு ஆசியப் பண்பாடுகளுடனோ சம்பந்தப்படாமலும் புதிய கற்காலப் பண்பாடுகள் நிலவின. பண்டைய ஜப்பானியச் சமூகங்களில் மட்பாண்டப் பயன்பாடு இடைக் கற்காலத்திலேயே காணப்படுகின்றது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
* [[தென்னிந்தியாவில் புதிய கற்காலம்]]
வரிசை 89:
[[ug:يېڭى تاش قۇرال دەۋرى]]
[[uk:Неоліт]]
[[ur:جدید زمانہ پتھر]]
[[ur:نیولتھک]]
[[vi:Thời đại đồ đá mới]]
[[war:Neolitiko]]
"https://ta.wikipedia.org/wiki/புதிய_கற்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது