பிரான்சிஸ் பேக்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: tt:Фрэнсис Бэкон
பகுப்பு:பிறப்புகள் சேர்க்கை
வரிசை 30:
== ஊழல்களும் தண்டனையும் ==
பேக்கன் நீதிபதியாகப் பணியாற்றியபோது, தம் முன்பு வழக்காடியவர்களிடமிருந்து பல "கொடைப் பொருள்"களைப் பெற்றுக் கொண்டிருந்தார். அவ்வாறு பெற்றுக் கொள்வது ஒரு சட்ட விரோதச் செயலேயாகும். நாடாளுமன்றத்திலிருந்த அவரை அரசியல் எதிரிகள், அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். பேக்கன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். பேக்கனுக்கு லண்டன் கோபுரச் சிறையில் சிறைத் தண்டனையும், கடும் பணத்தண்டமும் விதிக்கப்பட்டது. விரைவிலேயே அவரை சிறையிலிருந்த அரசர் விடுவித்தார். அவரது பணத்தண்டமும் நீக்கப்பட்டது. பேக்கனின் அரசியல் வாழ்வு அத்துடன் முடிந்து போயிற்று.
 
 
பேக்கன் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தீர்ப்புக் குறித்து கூறிய கருத்து. "இந்த 50 ஆண்டுகளிலேயே இங்கிலாந்தில் மிகவும் நேர்மையான நீதிபதியாக நான் இருந்தேன். ஆனால், இந்த 200 ஆண்டுகளிலேயே நாடாளுமன்றத்தில் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் நேர்மையானது என்று நான் கருதுகிறேன்."
வரி 46 ⟶ 45:
உலகின் முதல் நவீன தத்துவாறிஞராக பிரான்சிஸ் பேக்கன் விளங்கினார். அவர் கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கையுடையவராக இருந்தபோதிலும் மொத்தத்தில் அவருடைய கண்ணோட்டம் சமயச் சார்புடையதாகவே இருந்தது. பட்டறிவை நம்பும் பகுத்தறிவு வாதியாக இருந்தார். அரசியலில், அவர் கோட்பாட்டுவாதியாக இல்லாமல் உலகியல் வாதியாக இருந்தார். பண்டை நூல்களில் நுண்மான் நுழைபுலமும் அரிய இலக்கியத் திறமையும் பெற்றிருந்த இவர், அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் பரிவுகாட்டும் மனப்பாங்குடையவராக விளங்கினார். பேக்கன் ஆழ்ந்த நாட்டுப்பற்று மிக்க ஓர் ஆங்கிலேயராகத் திகழ்ந்தார். எனினும், அவர் தம் நாட்டுக்கு அப்பாலும் செல்லும் தொலைநோக்குடையவராக இருந்தார்.
 
[[பகுப்பு:1561 பிறப்புகள்]]
[[பகுப்பு:ஆங்கில எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் அறிவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சிஸ்_பேக்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது