சு. சி. பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பகுப்பு:பிறப்புகள் சேர்க்கை
வரிசை 26:
|signature =
}}
'''சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை''', அல்லது, '''எஸ்.எஸ்.பிள்ளை''' (ஏப்ரல் 5, 1901 - ஆகஸ்ட் 31, 1950) இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்தியக் [[கணிதம் |கணித]]வியலாளரில் ஒருவர். [[எண் கோட்பாடு |எண் கோட்பாட்டில்]] பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த [[வாரிங் தேற்றம் | வாரிங் பிரச்சினை]]யில் அவருடைய சாதனை மிகப்பெரிதாகப் பேசப்படுகிற ஒன்று. இந்தியா அவருடைய அகால மரணத்தினால் இன்னும் பல சாதனைகள் புரிந்து நாட்டுக்குப் புகழ் சேர்க்கக்கூடிய ஒருவரை இழந்தது.
 
==பிறப்பும் கல்வியும்==
வரிசை 34:
==கணிதக்கல்வி==
 
மேற்படிப்பிற்காக சென்னைக்குச் சென்றார். சென்னை மாகாணக் கல்லூரியில் [[1927]] இல் [[கே. ஆனந்த ராவ் | ஆனந்தராவி]]ன்கீழ் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து முதல்தர ஆராய்ச்சி மாணவன் என்று பெயர் எடுத்தார். ஆனந்தராவுடன் கூட பேராசிரியர் [[ஆர். வைத்தியநாதசுவாமி | வைத்தியநாதசுவாமி]]யும் இவருக்கு வழிகாட்டினார். [[சென்னைப் பல்கலைக்கழகம்]] இவருடைய ஆராய்ச்சிகளைப் பாராட்டி இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் (D.Sc.) பட்டமே வழங்கியது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் (D.Sc.) பெற்றவர் இவர்தான்.
 
==தொழில்==
வரிசை 42:
*1942 கல்கத்தா பல்கலைக் கழகம்.
*1943 - 1950 சென்னை பல்கலைக்கழகம்.
*1950. Institute of Advanced Studies, Princeton அவரை ஓராண்டிற்காக அழைத்தது.
*1950 ஆகஸ்ட்-செப்டம்பரில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்க இருந்த பன்னாட்டு கணித காங்கிரஸினாலும் பேச அழைக்கப்பட்டு, பிரின்ஸ்டன் அழைப்பிற்காகவும் ஆகஸ்ட் 31, TWA விமானத்தில் பயணமானார். ஆனால் கெய்ரோவுக்கருகில் விமானம் விபத்துக்குள்ளாகி, உயிர் துறந்தார்.
 
==சாதனைகள்==
வரிசை 51:
===வாரிங் பிரச்சினையில் கண்டுபிடிப்பு===
 
: எண் கோட்பாட்டில் வாரிங் பிரச்சினையைப் பற்றிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பைச் செய்து சரித்திரம் படைத்தார். 1909இல் டேவிட் ஹில்பர்ட் வாரிங் பிரச்சினையைப் பற்றிய ஓர் அடிப்படைத் தேற்றத்தை நிறுவினார்.
 
::'''ஹில்பர்ட்-வாரிங் தேற்றம்''': ஒவ்வொரு நேர்ம முழு எண் <math> k</math> க்கும் <math>g(k)</math> என்ற ஒரு மீச்சிறு நேர்ம முழு எண் கீழுள்ள பண்புடன் இருக்கும்:
::எந்த நேர்ம முழு எண்ணையும் <math>g(k)</math> எண்ணிக்கை கொண்ட <math> k</math> - அடுக்குகளின் கூட்டுத் தொகையாகக் காட்டலாம். அதாவது, எத்தனை குறைந்த எண்ணிக்கை கொண்ட k-அடுக்குகளின் கூட்டுத்தொகையாக ''எல்லா'' முழுஎண்களையும் சொல்லமுடியுமோ அந்த எண்ணிக்கை <math>g(k)</math>யாகும்.
::எடுத்துக்காட்டாக, g(2) = 4. அதாவது, எந்த எண்ணையும் நான்கு எண்ணிக்கைக்கு அதிகமில்லாத எண்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகையாகக் காட்டலாம். குறிப்பாக
:: 27 = 16 + 9 + 1 + 1
:: 32 = 16 + 16
வரிசை 61:
:: 200 = 100 + 64 + 36
 
::1770 இலேயே (லாக்ரான்சி) <math>g(2) = 4</math> என்பது தெரியும். 1910 இலிருந்து <math>g(3) = 9</math> என்பதும் தெரியும்.
 
::'''பிள்ளையின் கண்டுபிடிப்பு''': (1936). 7 அல்லது 7 க்கு மேலுள்ள '''எல்லா''' <math>k</math> க்கும், <math>g(k) =</math> <math>2</math><sup>''k''</sup> + <math>l - 2</math>; இங்கு, <math>l</math> என்பது <math>(3/2)</math><sup>''k''</sup>ஐ விட பெரியதல்லாத மீப்பெரு முழு எண். <math>k = 6</math> என்ற பட்சத்திலும் 1940 இல் இன்னும் கடினமான ஒரு முறையில் <math>g(6) = 73</math> என்றும் கணித்தார்.
வரிசை 72:
::: இதன் பொருள்: <math>n!</math>, <math>p</math>இன் ஏதோ ஒரு மடங்கை விட ஒன்று குறைவு. மற்றும், <math>p - 1</math>, <math>n</math>இன் எந்த மடங்காவும் இருக்காது.
 
:::எடுத்துக்காட்டாக, <math>79</math> ஒரு பிள்ளை பகா எண். ஏனென்றால்,
::: <math>23! + 1,</math> <math>79</math> ஆல் சரியாக வகுபடுகிறது. மற்றும், <math>78,</math> <math>23</math>இன் எந்த மடங்கும் இல்லை. ஆக, <math>79</math> க்குகந்ததாக <math>23</math> என்ற் <math>n</math> உள்ளது.
 
: முதல் <math>39</math> பிள்ளை பகா எண்கள்:
வரிசை 80:
<math>401, 419, 431, 449, 461, 463, 467, 479, 499</math>
 
: இத்தொடர் முடிவில்லாதது என்று [[பால் ஏர்டோசு |எர்டாஷ்]], சுப்பராவ், ஹார்டி முதலியவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்<ref>G. E. Hardy and M. V. Subbarao, "A modified problem of Pillai and some related questions", Amer. Math. Monthly 109 6 (2002): 554 - 559.</ref>.
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 89:
 
==உசாத்துணைகள்==
*Historical notes by M.S. Raghunathan, Current Science Vol.85 No.4, 25 Aug 2003 pp.526-536&nbsp;526–536.
 
[[பகுப்பு:1901 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியக் கணிதவியலாளர்]]
[[பகுப்பு:தமிழ் கணிதவியலாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய அறிவியலாளர்கள்]]
 
[[de:S. Sivasankaranarayana Pillai]]
 
[[en:Subbayya Sivasankaranarayana Pillai]]
[[de:S. Sivasankaranarayana Pillai]]
[[ht:Subbayya Sivasankaranarayana Pillai]]
"https://ta.wikipedia.org/wiki/சு._சி._பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது