"மெரீனா கடற்கரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,988 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
== வரலாறு ==
[[சென்னைத் துறைமுகம்]] கட்டப்படும் முன்பு, மெரினா கடற்கரை வெறும் களிமண் தொகுப்பை உடையதாக இருந்தது.
 
==நிகழ்வுகள்==
சென்னையின் முக்கிய பகுதியான இக்கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன. இந்தியாவின் பெரிய ஓட்டமாகிய சென்னை மாரத்தானும் இங்கு நடைபெறும். ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பர். பொங்கல் திருநாளில் மக்கள் தங்கள் உறவினர்களுடன் கூடி மகிழும் இடமும் இதுவே. சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் அரசுத் தூறைகளின் அணிவரிசை நடைபெறும்.
==போக்குவரத்து==
மெரினா கடற்கரையை ஒட்டிய காமராசர் சாலை ஆறுவழிப் பாதையாகும். கடற்கரையின் எதிர்புறம் கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய தொடர்வண்டி நிலையங்களும், விவேகானந்தர் இல்லம், சாந்தோம் ஆகிய பேருந்து நிறுத்தங்களும் உள்ளன. அண்ணா சதுக்கத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு பேருந்து வசதிகளும் உள்ளன. சுற்றுலா பேருந்துகள் இங்கு நின்றே செல்லும்.
 
==எழில்மிகு காட்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1146674" இருந்து மீள்விக்கப்பட்டது