கலோரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கலோரி''' (Calorie) அல்லது '''கனலி''' என்பது [[வெப்பம்|வெப்பத்திற்கான]] ஒரு அலகு ஆகும். இது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளுக்கு]] முந்தைய காலத்தில் [[1824]]ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒரு [[கிராம்]] [[நீர்|நீரின்]] [[வெப்ப நிலையைவெப்பநிலை]]யை ஒரு சென்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்படும் [[வெப்பம்|வெப்பத்தின்]] அளவு ஒரு கனலி ஆகும்.தற்போது [[வெப்பம்]] அல்லது [[ஆற்றல்]] ஆகியவற்றை அளக்க அனைத்துலக முறை அலகான [[ஜூல்]] என்பதே பரவலாகப் பயன்படுகிறது. ஒரு கலோரி என்பது 4.2 ஜூலுக்குச் சமமாகும். உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மட்டும் இன்னும் பல இடங்களில் கலோரி என்னும் அலகு பயன்படுத்தப்படுகிறது. நாம் உண்ணும் உணவு [[ஆக்ஸிஜன்|உயிர்வளி]]யுடன் சேர்ந்து எரி சக்தியாக மாற்றமடைகிறாது. இவ்வுடல் சக்தி உருவாகக் காரணமாக அமையும் எரிபொருள் சக்தியே கனலி ஆகும்.[[செல்|செல்லில்]] உள்ள [[மைட்டோகாண்டிரியா]] என்ற பகுதியில் தான் எரிதல் நடைபெறுகிறது. நம் உடல் நன்கு செயல்பட ஒரு குறிப்பிட்ட அளவு கனலி நமக்குத் தேவை. இத்தேவை நம் [[உடல் பருமன்]], நாம் செய்யும் [[வேலை]] இவற்றைப் பொருத்து அமையும்.<br />
==உணவும் கனலியும்==
நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ள கனலியின் அளவு வெவ்வேறு எண்ணிக்கையுடையனவாகும். நாம் உட்கொள்ளும் உணவு உடலுள் எரிந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கனலியை வெளிப்படுத்தும். சான்றாக ஒரு [[கிராம்]] [[புரோட்டீன்|புரத]] உணவு நான்கு கனலிகளை வெளியாக்கும். அதே சமயத்தில் ஒரு [[கிராம்]] [[கொழுப்பு]] உணவு ஒன்பது கனலிகளை வெளியாக்கும். கனலி வெப்பம் வெளிப்பட ஆதாரமான எரிபொருள்களைப் பற்றி உடல் கவலைப்படுவதே இல்லை. எவ்வகை உணவுப் பொருளாயினும் அதிலிருந்து எரிசக்தியாக கனலி வெளிப்பட்டு உடல் இயக்கம் செம்மையாக அமைய ஆற்றல் ஊட்டுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கலோரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது