"கே. ஜே. யேசுதாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: sa:के. जे. येसुदासः)
| Notable_instruments =
}}
'''கட்டசேரி யோசஃப் யேசுதாஸ்''' ({{lang-ml|കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്}}) , (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக '''கே.ஜே.யேசுதாஸ்''', ஓர் [[இந்தியா|இந்திய]] [[கருநாடக இசை]]க் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் [[மலையாளம்]], [[தமிழ்]], [[இந்தி]], [[கன்னடம்]], [[தெலுங்கு]], [[வங்காள மொழி]], [[குஜராத்தி]], [[ஒரியா]], [[மராத்தி]], [[பஞ்சாபி]], [[சமசுகிருதம்]], [[துளு]], [[மலாய் மொழி]], [[உருசிய மொழி]],[[அராபிய மொழி]], [[இலத்தீன்]], [[ஆங்கிலம்]] ஆகிய மொழிகளில் 40,000கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.<ref name="hindu_feb01">{{cite news|url=http://www.hindu.com/thehindu/mp/2002/09/03/stories/2002090300170200.htm|title=Those magical moments...|date=2002-09-03|publisher=[[The Hindu]]|accessdate=2009-08-19}}</ref><ref name="hindu_sep02">{{cite news|url=http://www.hinduonnet.com/2001/02/08/stories/09080706.htm|title=Life devoted to music|date=2001-02-01|publisher=[[The Hindu]]|accessdate=2009-08-19}}</ref> சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]] பெற்றுள்ளார்.மாநில அளவில் கேரளம் , தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். திரையிசைத் தவிர,கருநாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப்பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவரை கான கந்தர்வன் என்று இவரது இரசிகர்கள் அழைக்கின்றனர்.
 
==இளமை வாழ்க்கை==
 
==திரைவாழ்வு==
யேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் துவங்கினார்<ref>{{cite web|url=http://www.rediff.com/entertai/2001/may/07yesu.htm|title='I don't sing trendy music'|publisher=[[Rediff]]|accessdate=2009-09-06}}</ref> . தமிழ் திரைப்படங்களில் [[எஸ். பாலச்சந்தர்|எஸ. பாலச்சந்தரின்]] [[பொம்மை (திரைப்படம்)|பொம்மை]]யில் முதன்முதலாக "நீயும் பொம்மை,நானும் பொம்மை" என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. 1970களில் [[இந்தி]]த் திரைப்படங்களில் பாடத்துவங்கினார். முதல் இந்தி மொழிப்பாடல் "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" என்ற திரைப்படத்திற்கு பாடினார்.ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக "சோடிசி பாத்" அமைந்தது.
இவற்றைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். 2006ஆம் ஆண்டு [[சென்னை]] ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு [[தென்னிந்தியா|தென்னிந்திய]] மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார். <ref>{{cite web|url=http://www.hindu.com/fr/2006/12/01/stories/2006120100400200.htm |title=One for the records |publisher=The Hindu |date=2006-12-01 |accessdate=2010-05-01}}</ref>
 
==சொந்த வாழ்க்கை==
யேசுதாசுக்கு பிரபா என்ற மனைவியும் வினோத்,விஜய், விசால் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் [[விஜய் யேசுதாஸ்]] தமது தந்தையைப் பின்பற்றி திரைப்படப் பாடகராக விளங்குகிறார். இக்குடும்பம் [[சென்னை]] மற்றும் [[திருவனந்தபுரம்|திருவனந்தப்புரத்தில்]] வாழ்ந்து வருகின்றனர். தவிர [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்கா]]வில் புளோரிடா மற்றும் டெக்சாசில் நிலங்கள் வணிக நோக்கோடு வைத்துள்ளார்.
 
==வெளியிணைப்புகள்==
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1150927" இருந்து மீள்விக்கப்பட்டது