அரசியல் விடுதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவு
விரிவு
வரிசை 5:
==வரலாறு==
பல மேற்குலக அரசியல் அறிஞர்களின் கருத்துப்படி கிரேக்க நாட்டின் அரசியல் கோட்பாடுகளில் இருந்தும் செயற்பாடுகளில் இருந்தும் அரசியல் விடுதலை என்னும் கருத்து உருவானது. (எ.கா [[அன்னா அரெண்ட்டு]] (Hannah Arendt)<ref>Hannah Arendt, "What is Freedom?", ''Between Past and Future: Eight exercises in political thought'' (New York: Penguin, 1993).</ref>). அரெண்ட்டு அவர்களின் கருத்துப்படி அரசியல் விடுதலை என்பது அரசியல் செயற்பாடு ("Action") என்பதில் இருந்து பிரித்தறிய முடியாதது. அரசியல் செயற்பாடுகளை நடத்துவது என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் நிறைவு எய்தியவர்களால் மட்டுமே இயலும் என்றார். அரெண்ட்டின் கருத்துப்படி விடுதலை (விடுபாட்டுநிலை) என்பது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு [[கிறித்தவம்|கிறித்தவக்]] கருதுகோளாகக் கருதப்பட்ட தன்னுரிமை ("free will or freedom of the will") அல்லது தன்னுள் விடுபாட்டுநிலைமை என்பதோடு தொடர்புடையது. இப்படி அரசியல் செயற்பாட்டுக்கு முக்கிய காரணமான விடுபாட்டுநிலைமை (விடுதலை) இருந்தபோதிலும், இது அரசியல் செயற்பாட்டில் ஒரு முக்கியக் கூறாக விளங்கவில்லை
 
== இக் கருதுகோள் பற்றிய கருத்துகள்==
 
உண்மையில் அரசியல் விடுதலை (விடுபாட்டுநிலை) என்றால் என்ன என்று பல குழுவினர் பல்வேறு வகையான கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர்.
 
[[இடதுசாரி]] அரசியல் கருத்துடையோர் ஒரு தனி மாந்தனோ, குழுவோ தன் அலல்து தம் உள் திறமையை முற்றிலுமாக எட்ட முற்படுவது எட்டுவது என்று பொருள் கொள்கின்றனர். இதனைத் தடைகள், கட்டுகள் மீறி விடுபடுவது என்னும் எதிர்மறையாக அணுகும் கருத்தாகக் கொள்ளாமல் நேர்முறையாக தன்/தம் திறனை வாய்ப்புக்கூறுகளை எட்டுதல் தன்னுரிமையைத் தானாகப் பெற்றிருத்தல் என்று கொள்கின்றனர். அரசிய அறிவியலில் இதனை [[நேர்முறை விடுதலை]]க் கொள்கை என்கிறார்கள்.
 
[[பிரீடரிச் அயாக்கு]] (Friedrich Hayek) என்னும் நன்கு அறியப்பட்ட மரபியல் தாராண்மையாளர் இதனை விடுதலை என்பதன் பிறழ்ச்சியான உள்வாங்கள் என்று மறுத்துரைத்தார்:
 
<blockquote>[T]he use of "liberty" to describe the physical "ability to do what I want", the power to satisfy our wishes, or the extent of the choice of alternatives open to us&nbsp;... has been deliberately fostered as part of the socialist argument&nbsp;... the notion of collective power over circumstances has been substituted for that of individual liberty.<ref>Friedrich August von Hayek, ‘Freedom and Coercion’ in David Miller (ed), Liberty (1991) pp. 80, 85-86}}</ref></blockquote>
<blockquote>(மொழிபெயர்ப்பு) "எனக்கு வேண்டுவதை நான் செய்யும் ஆற்றலை", நம் விருப்பங்களை நிறைவு செய்வதற்கு, அல்லது நமக்கு உள்ள தெரிவுகளைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றை விடுதலை என்று விளக்கியுரைப்பது, சோசலிசவாதமாக (குமுகவியல் கோட்பாடாக) வேண்டுமென்றே முன்வைப்பதாகும்&nbsp;...தனி மாந்த விடுதலைக்காக கூட்டாக பலருடைய வலிமையைப் கொண்டு நிறுத்துவதாகும்." </blockquote>
 
தற்கால விடுதலைக் கொள்கையை முழுமைப்படுத்தும் இருகூறுகளாக நேர்முறை, எதிர்மறை விடுதலைக் கருதுகோள்களைப் பல குமுகாய (சமுதாய) அரசுமறுப்பாளர்கள் கருதுகிறார்கள். எதிர்மறை விடுதலை கருதுகோளை மையமாகக் கொண்டதை முதலாளியச் சாய்வு கொண்ட "தன்னல விடுதலை" ("selfish freedom") என்று கருதுகிறார்கள். <ref>[http://www.spunk.org/texts/intro/faq/sp001547/secF2.html#secf22 Anarchism FAQ]</ref>
 
[[அலசிடேயர் மாக்கின்ட்டாயர்]] (Alasdair MacIntyre) போன்ற குறிப்பிடத்தக்க மெய்யியலாளர்கள் இந்த விடுதலை என்பது ஒருவருக்கு ஒருவர் தேவை என்னும் குமுக உறவாட்டத்தின் அடிப்படையில் அமைந்தது என்று கருதுகின்றனர்.<ref>Alasdair MacIntyre, "The Virtues of Acknowledged Dependence", ''Rational Dependent Animals: Why Humans Need the Virtues'' (Open Court, 2001).</ref>
 
அரசியல் மெய்யியலாளர் [[நிக்கோலசு கொம்ப்பிரிடிசு]] (Nikolas Kompridis) என்பாரின் கருத்துப்படி தற்காலத்தில் விடுதலையை எட்டுவது என்பதை இரண்டு உந்துதல்களின் அடிப்படையில் அணுகலாம்: விடுதலை என்பதைத் தன்னாட்சி அல்லது விடுபாடு ("independence") என்று கொள்ளுதல் அல்லது கூட்டுறவாக புதிய ஒரு தொடக்கத்தை எட்டுவது விடுபாடு எய்துதல் என்பது<ref>Nikolas Kompridis, "The Idea of a New Beginning: A Romantic Source of Normativity and Freedom" in ''Philosophical Romanticism'' (New York: Routledge, 2007), 32-59.</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்_விடுதலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது